| |||||||||||||||||
| ||||
| இதைச் செய்யும்போது அனைத்துப் பெண்களும் மருத்துவக்காப்பீடு செய்துகொள்ள வேண்டிய அவசியத்தையும் பிரச்சாரம் செய்ய வேண்டும்.அந்தக் காப்பீட்டில் அடங்கும் நோய்களுக்கான பட்டியலில் கேன்சர் நோயும் இருக்குமாறு உறுதி செய்ய வேண்டும்.மிக மிக அதிகமான செலவு பிடிக்கும் கொடுமையான நோய் இந்த நோய். சரி.அரசும் அதிகாரிகளும் பிரச்சாரம்தான் செய்யமுடியும்.மக்கள்தான் விழித்துக்கொள்ள வேண்டும். எனவே எனது வேண்டுகோளை சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கும் தனித்தனியாக வைக்கிறேன். முதலில் மார்பகப் புற்றுநோய் வந்த பெண்களுக்கு. ஐயையோ,இவ்வளவு கொடிய நோய் வந்து விட்டதே என்று மனம் கலங்காதீர்கள்.இதற்கான முதல் சிகிச்சையே மனதைத் திடமாக்கிக்கொண்டு வந்ததை எதிர்கொள்வதுதான்.பிரச்சனைகள் எதுவானாலும் தைரியமாக எதிர்கொள்ளுங்கள்.துவண்டுவிடுவதால் எதுவும் ஆகப் போவதில்லை. நோயும் கொடுமையானதுதான்.அதற்கான சிகிச்சைமுறைகளும் கொடுமையானவை தான்.அனைத்து சிகிச்சைகளும் உங்கள் நலனை முன்னிட்டே செய்யப்படுகின்றன என்பதை மறவாதீர்கள்.இதைத் தவிர வேறு எதுவும் நான் உங்களுக்குச் சொல்லப் போவதில்லை. மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் கணவர்களுக்கு, பெற்றோர்,சகோதர சகோதரிகள்,சொந்தங்கள் என அனைத்தையும் திருமணமான ஒரே நாளில் விட்டுவிட்டு உங்களுடன் வந்தவள்,உங்கள் சுகத்திலும் துக்கத்திலும் பங்கு பெற வந்தவள், இவ்வளவு காலம் நீங்கள் சாய்ந்துகொள்ளத் தோள் கொடுத்தவள்,நீங்கள்நோயில் படுத்த படுக்கையில் விழும்போது இரவும் பகலும் உங்களைக் கவனித்துக்கொண்டவள்.அவளுக்கு இந்தநோய் வந்திருக்கிறது.ஆணோ,பெண்ணோ ஒருவருக்கு ஒரு நோய் வருவதற்குக் காரணமே அவருடைய தவறான செயல்களே.ஆனால் ஒரு தவறும் செய்யாமல் பெண்ணாகப் பிறந்த ஒரே காரணத்தினாலேயே இந்த நோய் அவளைத் தாக்கியிருக்கிறது.உங்களை விட்டால் அவளுக்கு வேறு வழி?எனவே தயவு செய்து அவளைக்கவனித்துக்கொள்ளுங்கள்.ஆறுதல் சொல்லுங்கள்.உங்களுக்கு இந்தமாதிரி கொடிய நோய் வந்தால் அவள் எப்படி உங்களைக் கவனித்துக்கொள்வாளோ அந்த அளவுக்கு நீங்கள் அவளைக் கவனித்துக்கொள்ளுங்கள்.நோயினால் அவதிப்படுவது அவள்மட்டுமே. நீங்கள் ஆதரவாக இருந்தாலே போதும்.அவள் படும் துன்பங்கள் எவ்வளவோ குறையும். சொந்தங்களுக்கும் சுற்றங்களுக்கும் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.உங்கள் வீட்டில் உங்கள் சொந்தவீட்டில் ஒருவருக்கு இந்தநோய் வந்தால் ஒதுக்கிவைப்பீர்களா?இது ஒன்றும் தொற்றுநோயல்ல.முறையான சிகிச்சை கொடுத்தால் குணமாகக் கூடியதுதான்.அவளை ஒதுக்கிவைப்பதால் உங்களுக்கு ஆகக் கூடியது எதுவுமில்லை.ஆனால் உங்களின் அன்பும் ஆதரவும் கிடைத்தால் அவளுக்குக் கிடைக்கும் நிம்மதி இருக்கிறதே!அது அளவிடமுடியாது. அடிக்கடி போய்ப் பாருங்கள்.ஆறுதல் சொல்லுங்கள்.உங்களின் செயலால் ஒரு செலவில்லாமல் ஒரு நோயாளிக்கு ஆறுதல் கிடைக்கிறது என்றால் அது எவ்வளவு பெரிய விஷயம்?அது உங்களுக்கும் பெருமை அல்லவா? மார்பகப் புற்றுநோய் வராத பெண்களுக்கு முதலில் மருத்துவக் காப்பீடு செய்துகொள்ளுங்கள்.அதில் அடங்கும் நோய்களில் கேன்சர் நோயும் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.உங்கள் வயது நாற்பதை எட்டி விட்டதா? உடனே மேமோகிராம் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.ஒவ்வொரு ஆண்டும் மேமோகிராம் பரிசோதனை செய்துகொள்வது முக்கியம். குளிக்கும்போது வாரம் ஓரிருமுறை மார்பகங்களை நன்கு அமுக்கியும் தடவியும் ஏதேனும் கட்டியாகத் தென்படுகிறதா என்று சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள்.தென்பட்டால் உடனே டாக்டரை அணுகுங்கள் டாக்டர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள். எனக்கே சிரிப்பாக இருக்கிறது.பைத்தியக்காரத் தனமாகவும் இருக்கிறது.யாருக்குப் போய் யார் சொல்வது?இருந்தாலும் மனதில் பட்டதைச் சொல்கிறேன்.தவறாக இருந்தால் கண்டியுங்கள்.திருத்திக்கொள்கிறேன். இன்றைக்கு எல்லாமே எந்திரத்தனமாகிவிட்டது.உங்கள் பணியை அப்படி ஆகிவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.நோயாளிகள் உங்களை நாடி வருகிறார்கள்.அவர்களுக்கு இந்த நோயைப் பற்றி என்ன தெரியும்?நீங்கள் தான் சொல்லிப் புரியவைக்க வேண்டும்.என்னென்ன சிகிச்சை தரப்படும்,ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு செலவாகும் என்பதெல்லாம் தெளிவாகக் கூறுங்கள்.அவள் படும் வேதனைக்குக் கத்துவாள்.கதறுவாள்.ஆனாலும் உங்களின் தரமான சிகிச்சையினாலும் ஆறுதலான அணுகுமுறையினாலும் மட்டுமே அவள் குணமாவாள். அவளுக்கு நீங்கள் டாக்டர் மட்டுமல்ல.நீங்கள் தான் கடவுள்.எனக்குத் தெரிந்து சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் மார்பகப் புற்றுநோயாளிகளிடம் நர்சுகள்"நீ எல்லாம் எதுக்கு சிகிச்சை எடுக்குரே.இன்னும் ஆறு மாசத்துக்குள்ளாரவே செத்துப்பொயிடுவே.உனக்கு டிரீட்மெண்ட் கொடுக்கிறதே வேஸ்ட்"என்றெல்லாம் பேசுவார்களாம்.கையில் பணமில்லாத கொடுமையால் இலவச சிகிச்சை நாடிப் போகும் இடத்தில் இந்தப் பேச்சுகளையும் தாங்கிக் கொண்டு அந்த நோயாளிகள் உயிருடன் இருக்கிறார்கள்.டாக்டர் கடவுள் என்றால் நர்சுகள் கடவுளின் உதவியாளர்கள்.அவர்களிடமிருந்து இத்தகைய கொடுமையான வார்த்தைகள் வரலாமா?உங்களைப் போல உங்களை நாடிவரும் நோயாளிகளும் மனிதர்கள் தான்.நீங்கள் மருத்துவமனையில் வேலை செய்யவில்லை.சேவை செய்கிறீர்கள்.மனிதநேயத்தின் பிரதிநிதிகளாக இருக்கிறீர்கள்.நோயைக் குணமாக்குவீர்கள் என்ற நம்பிக்கையுடன் வரும் நோயாளிகளின் கனவைச் சிதைத்துவிடாதீர்கள். சமூகச் சிந்தனையாளர்களுக்கும்,பெண் விடுதலைப் போராளிகளுக்கும் ஒரு வேண்டுகோள். மார்பகப் புற்றுநோய் வந்து அறுவை சிகிச்சை செய்து மார்பகத்தை அறுத்து எறிந்துவிட்ட பெண்களில் எத்தனை பேர் வாழ்வில் சந்தோஷமாக இருக்கிறார்கள்?மீண்டும் மீண்டும் ஆண்டுக்கணக்கில் தொடர்ந்து சிகிச்சைகள்,வலி,உறவினர்களின் அணுகுமுறை,மற்றவர்களிடத்திலிருந்து தள்ளிவைக்கப்படும் கொடுமை,எல்லாவற்றிலும் மேலாகக் கட்டிய கணவனே வேறு பெண்ணைத் தேடிச் செல்வதைத் தடுக்கமுடியாத இயலாமை இவைகளோடு மட்டுமல்லாமல் சிகிச்சைகளினால் ஏற்படுகின்ற உடல் ரீதியான பாதிப்புகள் இவைகளுடன் இவர்களும் வாழ்கிறார்கள்.இவர்கள் வாழ்வில் என்ன அர்த்தம் இருக்கிறது?சொல்லுங்கள்.இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள். மருத்துவ உலகில் கேன்சர் நோய்க்கான சிகிச்சையின் முடிவு ''சக்சஸ்''என்ற இறுதிக்கட்டத்தை எட்டவில்லை.''சர்வைவல்''என்ற ஆரம்பக் கட்டத்திலேயேஇருக்கிறது.இதற்கே மாபெரும் யுத்தம் நடத்த வேண்டியிருக்கிறது. குறிப்பாகப் பெண்களுக்கு மட்டுமே வரக் கூடிய நோய் என்பதால் இறுதியாக ஒரு எச்சரிக்கையுடன் இப்பதிவை முடிக்கிறேன். பெண்களே,நீங்கள் யாராகவும் இருக்கலாம்.மிகப் பெரிய அரசியல் வாதியாகவோ,அரசு அதிகாரியாகவோ,வழக்குரைஞராகவோ,டாக்டராகவோ,சமூகத் தில் அந்தஸ்து மிகுந்தவராகவோ,பணக்காராராகவோ,ஏழையாகவோ இருக்கலாம்.ஆனாலும் நீங்கள் பெண்ணாக இருப்பதாலேயே உங்களுக்கு மார்பகப் புற்றுநோய் வரும் அபாயம் இருக்கிறது.எச்சரிக்கையுடன் இருங்கள்.நலமாக வாழுங்கள்.
__________________ வாழ்வது சிலகாலம் உள்ளம் அழுதிடினும் உதடு சிரிக்கட்டுமே! |
![]() ![]() |
| Thread Tools | |
| Display Modes | |
| |
Similar Threads | ||||
| Thread | Thread Starter | Forum | Replies | Last Post |
| புற்றுநோய்க்கு (கேன்சர்) விருந்த*ளிக்கவே | jaisapmm | Miscellaneous Health Issues | 1 | 25th September 2008 04:52 AM |
| பெண்களுக்குப் பாராளுமன்றத்தில் இட ஒதுக | jaisapmm | Forward Messages & Jokes | 0 | 16th September 2008 04:58 AM |
| ஐபோன் 3g சில நிறைவுகளும் குறைபாடுகளும். | jaisapmm | Forward Messages & Jokes | 0 | 4th September 2008 07:36 AM |
| கடவுளும் சொப்ன சுந்தரியும் | Geetha Iyer | Stories (Fiction) | 14 | 11th June 2008 09:27 PM |
| பெண் பார்க்கும் படலங்கள்- அன்றும் இன்றும | Geetha Iyer | Stories (Fiction) | 2 | 20th May 2008 10:04 PM |