1. Want to be a Positive Parent? : Click Here
    Dismiss Notice

K.Visalini -யார் இந்த சுட்டிப்பெண்...? உலகமே உற்றுப் &

Discussion in 'Kids Korner' started by mssunitha2001, Jan 10, 2012.

  1. mssunitha2001

    mssunitha2001 IL Hall of Fame

    Messages:
    5,092
    Likes Received:
    2,705
    Trophy Points:
    355
    Gender:
    Female
    One of my friend shared this ...

    Read on ...
    http://kousalya2010.blogspot.com/2012/01/blog-post_03.html#.TwLrssVfi41.facebook



    [​IMG]


    யார் இந்த சுட்டிப்பெண்...? உலகமே உற்றுப் பார்க்கிறது...!!
    Posted by Kousalya at 11:32 AM



    உணவு உலகம் சங்கரலிங்கம் அண்ணன் தனது தளத்தில் ஒரு இளந்தளிரை பற்றி எழுதி இருந்தார்... படித்து மிகவும் வியப்படைந்தேன்...சிறு விதைக்குள் ஒளிந்திருக்கும் ஆல விருட்சம் என்பது இந்த சுட்டிக்குழந்தையை பற்றி படிக்கும் போது தோன்றியது. பாராட்ட எனக்கு தகுந்த வார்த்தைகள் கிடைக்கவில்லை...! ஆச்சரியத்தின் உச்சத்தில் இருக்கிறேன்...தமிழகத்தில் இப்படி ஒரு அறிவார்ந்த சிறுமி இருப்பது தமிழர்கள் நமக்கு ஒரு பெருமைதானே ? நீங்களும் படித்து பாருங்கள் செய்தியை பலரிடம் கொண்டு சேருங்கள். வாழ்த்துவோம் நாம், மகிழட்டும் இவளை ஈன்றெடுத்த தாயும் , தந்தையும் !!


    ஓடி விளையாடும் வயதில் உலக சாதனை படைத்துவிட்டு, சத்தமேயில்லாமல் அடுத்த சாதனைக்குத் தயாராகும் விசாலினி - சந்தேகமின்றி இந்தியாவின் விடிவெள்ளிதான்!
    [​IMG]

    வயது பதினொன்று (பிறந்த தேதி:23.05.2000) IQ லெவல் 225. நம்ப முடிகிறதா? நம்பத்தான் வேண்டும். ஏனெனில், விசாலினி படைத்துள்ளது உலக சாதனை.கின்னஸ் சாதனையாளரான கிம்-யுங்-யோங்கின் (Kim Ung-Yong) I.Q. அளவான 210 என்பதைவிட, இது இன்னும் அதிகம். இந்தியா என்பதால் தான் இன்னும் இவள் புகழ் பரவவில்லையோ...?! இன்னொரு நாடென்றால், இவளை இதற்குள் உலகமறிய பாராட்டியிருப்பார்கள். ஆம், நெல்லை மண்ணின் மகள் இவள்.


    வயதிற்கேற்றார்போல் சைக்கிள் ஓட்டுவதும், கார்ட்டூன் பார்ப்பதும் இவள் பொழுதுபோக்கென்றாலும், இவள் படைத்துள்ளது இமாலய சாதனை. கின்னஸ் புத்தகத்தில் இவள் சாதனை இடம்பெற இவள் வயது காணாதாம். ஆம், பதினான்கு வயது நிறைவடைந்தால்தான் கின்னஸ் புத்தகத்தில் இவள் சாதனை இடம்பெறுமாம். இந்த வயதிலேயே, பள்ளிப்படிப்பிலும் இருமுறை இவள் தாவியுள்ளாள். ஆமாம், இரண்டுமுறை இவளுக்கு கிடைத்துள்ளது டபுள் புரமோசன்.

    கல்லூரியில் பயிலும் B.E., B.TECH மாணவர்களுக்கு கணினிப்பிரிவில் உரையாற்றும் அளவிற்கு ஆற்றல் பெற்றுள்ளாள். சமீபத்தில் மங்களூரிலுள்ள NITMல் நடைபெற்ற அனைத்துலக மாநாட்டில் (INTERNATIONAL CONFERENCE), விசாலினிதான் சிறப்பு அழைப்பாளர். அதில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளைச் சார்ந்த அறிஞர்களும் விசாலினியின் அறிவுத்திறனைக் கண்டு வியப்புற்றுள்ள்னர்.
    [​IMG]
    இத்தனை சாதனைகள் படைத்துள்ள அக்குழந்தையின் தாய் திருமதி.சேதுராகமாலிகா,
    உலக சாதனை படைத்துள்ள இந்த குழந்தையின் தந்தை திரு.கல்யாண குமாரசாமி.
    அவரது குழந்தை படைத்துள்ள சாதனைகள் இதோ:

    MCP (Microsoft Certified Professional)

    CCNA (Cisco Certified Network Associate),

    CCNA Security(Cisco Certified Network
    Associate Security),

    OCJP (Oracle Certified Java
    Professional).

    CCNAவில் இவள் பெற்ற மதிப்பெண் 90 சதவிகிதம். இதுவும் ஒரு உலக சாதனைதான்.மங்களூரிலுள்ள NITயும், திருவில்லிபுத்தூரிலுள்ள பொறியியல் கல்லூரி ஒன்றும் விசாலினியை தங்கள் கல்லூரியில் சேர அழைத்தும் இவர் பெற்றோர்கள், இன்னும் சில ஆண்டுகளுக்கு, இந்த இளம் அறிவாளியை, கல்லூரி வாழ்க்கைக்கு அனுப்பி வைக்கத் திட்டமிடவில்லை.

    உலகமே இந்தக் குழந்தையின் சாதனைகளை உற்றுப்பார்க்கும் இந்த நேரத்திலும்,உள்ளூரில் இன்னும் இந்த குழந்தையை உச்சி முகர்ந்து பார்க்கவில்லையென்பதே இவள் பெற்றோரின் ஆதங்கம். ஆம் நம் மத்திய, மாநில அரசுகளின் பார்வை இந்த உலக சாதனையாளர் மீது இன்னும் படவில்லை.பதிவுலகில் குவியும் பாராட்டுக்களாவது, இந்தத் தெய்வக்குழந்தையை உலக அரங்கிலும், உள்ளூரிலும் உச்சத்திற்குக் கொண்டு செல்லட்டும்.


    நன்றி:தகவல் பகிர்வு:திருமதி.சேதுராகமாலிகா மற்றும் http://www.visalini.com

    வேண்டுகோள்:

    1) ஒரு இந்திய்ர்,அதிலும் தமிழ்நாட்டைச் சார்ந்த இந்த சிறுமியின் சாதனை உலகறியச் செய்திட, முடிந்தவரை அனைத்து நண்பர்களும் இந்தச் செய்தியினை அவரவர் தளத்தில், முக நூல், ட்விட்டர் போன்றவற்றில் பகிருங்கள்.

    2)விசாலினியின் இ-மெயில் ஐ.டி:visalini2000@gmail.com. இதற்கு நம்மாலான ஒரு பாராட்டு மெயிலை அனுப்பி இச்சுட்டிப்பெண்ணை ஊக்கபடுத்துவோமே...!

    நன்றிகள் - இப்பதிவை பகிர அனுமதி அளித்த சங்கரலிங்கம் அண்ணா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.



    Other links :
    http://www.hindu.com/2011/05/24/stories/2011052452030200.htm

    http://www.dinamalar.com/News_Detail.asp?Id=245233
     
  2. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Re: K.Visalini -யார் இந்த சுட்டிப்பெண்...? உலகமே உற்றுப் &

    sunitha, font sariya illa...
     
  3. mssunitha2001

    mssunitha2001 IL Hall of Fame

    Messages:
    5,092
    Likes Received:
    2,705
    Trophy Points:
    355
    Gender:
    Female
    Re: K.Visalini -யார் இந்த சுட்டிப்பெண்...? உலகமே உற்றுப் &

    Thanks a lot dear prana.....posted the link now...
     
  4. Veni77

    Veni77 Gold IL'ite

    Messages:
    386
    Likes Received:
    639
    Trophy Points:
    175
    Gender:
    Female
    Re: K.Visalini -யார் இந்த சுட்டிப்பெண்...? உலகமே உற்றுப் &

    Just amazing to know about this....May God bless this Prodigy more!!
     
  5. upfsabari

    upfsabari IL Hall of Fame

    Messages:
    3,562
    Likes Received:
    1,918
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Re: K.Visalini -யார் இந்த சுட்டிப்பெண்...? உலகமே உற்றுப் &

    Wow.. Superb..
    Thank you so much for sharing this sunitha.. :)
     

Share This Page