| |||||||||||||||||
| ||||
| one more poem..... ஞாபக மறதி மரித்துப் போன அப்பாவை மண்ணுக்குள் வைக்கும்போது தான் ஞாபகம் வந்தது.... முன்று மாதமாய் அப்பா அவசரமாய் கேட்டுக்கொண்டிருந்த போர்வை ! இரண்டாவது ஜனனம் இப்போது தான் பிறந்த குழந்தை போல் உலகத்தை பார்க்கிறேன்.... இருபத்து ஐந்து வயதில் !! இத்தனை காலமாய் பறவைகளின் கிறீச்சிடலையும் பக்கத்து வீட்டுப் பாப்பாவின் அழுகுரல் இசையையும் இழந்துதான் விட்டன என் செவிகள்... உன் கபட வர்ணிப்புகளில் லயித்தபடி! இத்தனை காலமாய் அந்திவான வெட்கத்தையும் கதவிடுக்கு காளானையும் இழந்து விட்டன என் விழிகள்... உன் குறுஞ்செய்திகளை படித்தபடி!! உனக்காக உலகம் பகைத்த என் அன்பு உன் சுயநலத்தை விட விசாலமானது ! இனியும் உன் பொய் பாசம்போர்த்தி உறங்கப் போவதில்லை நான்! நேற்றே முளைவிட்டு விட்டது என் போதி மரம்!
__________________ S.Saikripa |
| ||||
| Hi saikripa, Welcome to this forum....you are rocking...Mudhir kanni and jnabagamarathi...superb.. sriniketan
__________________ count your blessings.....and be happy.... ![]() 10 kurals a day--- blog |
| ||||
| Hi Sai, There are a few things that strike us only in its absence.. The last two lines about bodhi maram..simply superb.Quote:
|
| ||||
| என்னை கவர்ந்த கவிதை காலப் புதிர் செல்லாங்குச்சியோ,கோலிக்காயோ,பம்பரமோ ஆடிவிடு வந்தால் பிரம்போடு நிற்பாள் அம்மா. கிணத்தில் குளித்தாலோ,குருவி முட்டை எடுத்தாலோ 10 தோப்புக்கரணம். எல்லா விளையாட்டுக்கும் அம்மாவின் பிரம்பு பயமுறுத்தும். எந்த பயமுமின்றி கணிணியில் "ரோட் ராஷ்"ஆடும் என் மகனை குடும்பம் சூழ பாராட்டுகிறார்கள்.
__________________ S.Saikripa |
![]() ![]() |
| Thread Tools | |
| Display Modes | |
| |
Similar Threads | ||||
| Thread | Thread Starter | Forum | Replies | Last Post |
| என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்ட& | sunkan | Hobbies, Arts & Crafts | 14 | 26th August 2008 04:51 AM |
| என் கவிதைகள் | sarojaramanujam | Indian Poems | 29 | 8th August 2008 04:25 AM |
| விதைகள் (ஒரு கவிதை) | robo | Forward Messages & Jokes | 0 | 18th April 2008 03:16 AM |
| ஸ்ரீவேணு கோபாலன் கதைகள்? | krishnaamma | Indian Book Lovers | 4 | 13th April 2008 02:26 PM |
| நையாண்டிக் கவிதை | Tamildownunder | Indian Poems | 2 | 29th March 2007 10:31 PM |