Tell-A-Friend  |  Bookmark Us  |  Sign-Up  |  Help
 
 

Go Back   IndusLadies > Entertainment, Hobbies & Interests > Forward Messages & Jokes
 

Forgot username / password?
Register Now!

Notices

Reply Post New Thread
 
LinkBack Thread Tools Display Modes
  #1 (permalink)  
Old 28th May 2007, 06:00 AM
sunkan's Avatar
Platinum ILite
 
Join Date: May 2005
City: bangalore
State: karnataka
Country: India
Posts: 4,511
Referrals: 25
Blog Entries: 75
Default oru manaiviyin kavithai kanavanukku

இந்த படத்திற்கு எழுதப்பட்ட கவிதை தான் அது.




ஆரோக்கிய நட்பாய் கை குலுக்கி, பின்காதலாய்மாறி, கல்யாணத்தில்முடிந்தபின், ஆணாதிக்கதாக்குதல்களை தாங்கமுடியாமல் அதேசமயம் நவயுகபெண்ணியப்பிரதிநிதியாய் கண்ணீரோடு விலகிவிடைபெறும் ஒருமனைவியின்கவிதை... அற்புதமானவார்த்தை பிரயோகங்கள். வாசித்துப்பாருங்கள்.



நன்றி

இனி கவிதை.......

"ஒருமனைவியின்விடைபெறல்"


போய் வருகிறேன் தோழா!
விலகல் இல்லை இது;
விடைபெறல் மட்டுமே! உனக்கான
நேசமும் காதலும் என்னுள்
நிலைத்திருக்கும் என்றென்றும்...


நாமிருவரும்
நட்பாய் கை குலுக்கினோம்;
நதியின் பிரவாகமிருந்தது நமக்குள்...
காதலாய் நிறம் மாறியபோதும்
கனவுகள் பொங்கிற்று மனதில்!


திருமணம் என்ற உறவுக்குள் புகுந்த
மறு நிமிடமே நீ
புருஷனாய் மாறிய இரசாயனம்
புரியவே இல்லை எனக்கு!


அதிகார அஸ்திரங்களைத்
தொடுக்கத் தொடங்கினாய் அடுக்கடுக்காய்;
வாலியை மறைந்திருந்து வதம்செய்த
இராமபானங்களையும் விட
வலிமையானவை அவை...
இரணமான நாட்களின் நினைவில்
இன்னும் கூட
இரத்தம் கசிகிறது நெஞ்சில்!


எவ்வளவு முயன்றும் - உன்
புதுப்பிக்கப் படாத ஆணெனும்
புராதன மூளைக்குள் காலங்காலமாய்
பதுங்கிக் கிடக்கும்
மனைவியின் பிரதியாய்
மாறவே முடியவில்லை என்னால்
மன்னித்து விடு என் தோழா!


வேறு வழி தெரியவில்லை; அதனால்
விடை பெறுகிறேன் உன்னிடமிருந்து
கால நதியின் சுழற்சியில்
மறுபடி நாம் சந்திக்க நேர்ந்தால்
கை குலுக்குவோம் ஒரு புன்னகையுடன்
கணவன் மனைவியாய் நாமிருந்த
கசப்புகளை மறந்து...!
Digg this Post!Add Post to del.icio.usBookmark Post in TechnoratiFurl this Post!
Reply With Quote
  #2 (permalink)  
Old 30th August 2007, 04:51 AM
uthra's Avatar
Junior ILite
 
Join Date: Jun 2007
City: singapore
State: singapore
Country: Singapore
Posts: 73
Referrals: 0
Default Re: oru manaiviyin kavithai kanavanukku

tearful
__________________
uthra
Digg this Post!Add Post to del.icio.usBookmark Post in TechnoratiFurl this Post!
Reply With Quote
ReplyPost New Thread

Thread Tools
Display Modes


Similar Threads
Thread Thread Starter Forum Replies Last Post
puthu kavithai Pushpavalli Srinivasan Poems & Poets Place 6 1st September 2007 06:38 AM
Thinam oru kavithai Tamildownunder Poems & Poets Place 282 17th August 2007 07:16 AM
Kavithai EnRa Peyaril En PithaRRalkaL Pushpavalli Srinivasan Poems & Poets Place 10 8th August 2007 09:50 PM


All times are GMT -5. The time now is 11:29 PM.