Tell-A-Friend  |  Bookmark Us  |  Sign-Up  |  Help
 
 

Go Back   IndusLadies > Entertainment, Hobbies & Interests > Forward Messages & Jokes
 

Forgot username / password?
Register Now!

Notices

Reply Post New Thread
 
LinkBack Thread Tools Display Modes
  #1 (permalink)  
Old 18th September 2008, 04:28 AM
jaisapmm's Avatar
Senior ILite
 
Join Date: Jul 2008
City: Chennai
State: Tamilnadu
Country: India
Posts: 301
Referrals: 1
Default கலாமின் பத்து கட்டளைகள்

பள்ளி மாணவ-மாணவியர் ஏற்க வேண்டிய 10 உறுதிமொழிகளை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் வலியுறுத்தினார்.
ஈரோடு மாவட்டம், காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலையில் தனியார் பள்ளியில் புதன்கிழமை நடந்த விழாவில் பங்கேற்ற அப்துல்கலாம், மாணவ-மாணவியர் 10 உறுதிமொழிகளை ஏற்க வேண்டுமென கூறினார்.
* நான் வாழ்வில் நல்லதொரு லட்சியத்தை மேற்கொள்வேன்.
* நன்றாக உழைத்து படித்து, வாழ்க்கையின் லட்சியத்தை அடைய முயல்வேன்.
* எனது விடுமுறை நாள்களில், எழுதப் படிக்கத் தெரியாத 5 பேருக்கு பாடம் சொல்லிக் கொடுப்பேன்.
* எனது வீட்டில் அல்லது பள்ளியில் குறைந்தது 5 செடிகளை நட்டுவைத்து, பாதுகாப்பு மரமாக்குவேன்.
* மது, சூதாடுதல், போதைப் பழக்கங்களுக்கு ஆளாகி துன்புறும் ஐந்து பேரையாவது அப்பழக்கத்திலிருந்து மீட்டு, நல்வழிப்படுத்த முயல்வேன்.
* துன்பத்திலிருக்கும் ஐந்து பேரையாவது சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் அளித்து, துயரைத் துடைப்பேன்.
* ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால், மொழியின் பெயரால் எவ்வித பாகுபாடும் பார்க்க மாட்டேன். எல்லோரையும் சமமாக பாவிப்பேன்.
* வாழ்வில் நேர்மையாக நடந்து கொண்டு, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க முயல்வேன்.
* என் தாய், தாய்நாட்டை நேசித்து, பெண் குலத்துக்கு உரிய மரியாதையை அளிப்பேன்.
* நாட்டில் அறிவுத்தீபம் ஏற்றி, அதை அணையாத தீபமாக சுடர்விடச் செய்வேன்.
ஒவ்வொரு உறுதிமொழியையும் படித்த கலாம், "இதை செய்வீர்களா' என்று குழந்தைகளைப் பார்த்துக் கேட்டார். அனைவரும் "செய்வோம்' என்று கோஷமெழுப்பினர்.
__________________
வாழ்வது சிலகாலம் உள்ளம் அழுதிடினும் உதடு சிரிக்கட்டுமே!
Digg this Post!Add Post to del.icio.usBookmark Post in TechnoratiFurl this Post!
Reply With Quote
ReplyPost New Thread

Thread Tools
Display Modes


Similar Threads
Thread Thread Starter Forum Replies Last Post
பெண்களுக்குப் பாராளுமன்றத்தில் இட ஒதுக&# jaisapmm Forward Messages & Jokes 0 16th September 2008 04:58 AM
சாமுத்ரிகா லட்சணம் என்றால் அங்கங்களின் & jaisapmm Forward Messages & Jokes 0 12th September 2008 12:47 AM
நவக்கிரகங்களும், வழிபாட்டுத் தலங்களும் jaisapmm Forward Messages & Jokes 0 11th September 2008 12:23 AM
ஏன் பொருளாதாரம் படிக்க வேண்டும்? jaisapmm Forward Messages & Jokes 0 6th September 2008 08:10 AM
என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்ட& sunkan Gardening 14 26th August 2008 05:51 AM


All times are GMT -5. The time now is 07:31 PM.