
4th September 2008, 07:36 AM
|
 | Senior ILite | | Join Date: Jul 2008 City: Chennai State: Tamilnadu Country: India
Posts: 301
Referrals: 0
| |
ஐபோன் 3g சில நிறைவுகளும் குறைபாடுகளும். நிறைவுகள். - மட மட வென அதிவேக இணையம்.
- யூடியூப் வீடியோக்கள் அட்டகாசமாய் ஓடுகின்றன.
- விரல் நுனியில் பங்கு நிலவரங்கள் மற்றும் வானிலை நிலவரங்கள்.
- Pdf கோப்புகளை படிக்க முடிகின்றது.
- Word Doc கோப்புகளை படிக்க முடிகின்றது.
- கேமரா உதவியால் நல்ல துல்லிபமான டிஜிட்டல் படங்களை எடுக்கமுடிகின்றது.அப்படியே ஆன் த ஸ்பாட்டில் மின்னஞ்சலும் செய்துவிடலாம்.
- விமானம் ஏறியதும் வயர்லெஸ் வசதியை மட்டும் அணைக்கும் வசதி.
- ஸ்கிரீன் ஷாட் எடுக்கும் வசதி.
- கான்ஃபெரன்ஸ் கால் செய்யும் வசதி.
- புளூடூத் மற்றும் விபிஎன் வசதிகள்.
- எரிச்சலூட்டும் No booting time, No logon time
- அதனால் Instant email checkup, Instant Browsing, Instant Youtube
- பல்வேறு பலரும் உருவாக்கிய இலவச ஐபோன் பயன்பாடுகள் (Updated)
குறைபாடுகள். - தமிழ் யூனிக்கோடு எழுத்துருக்கள் உடைந்து உடைந்து தெரிகின்றன(படம்).Safari உலாவியிலிருக்கும் Iphone emulator பொய் சொல்லுகின்றது நெஜமாலுமே.
- கேமராவில் ஸூம் வசதியில்லை (ரொம்பவும் ஆசைதான்).
- அவுட் ஆப் பாக்ஸ் ஐபோனில் வீடியோ பதிவு செய்யும் வசதியில்லை. ஆனால் அது ஏற்கனவே ஹேக்கப்பட்டு ஐபோனுக்கான வீடியோ ரெக்கார்டிங் மென்பொருள்கள் இணையத்தில் கிடைக்கின்றன.
- GPS நீங்கள் இருக்கும் இடத்தை காட்டுகின்றது, போக வேண்டிய இடத்துக்கான turn by turn direction-ம் கொடுக்கின்றது. ஆனால் சாதாரண ஜிபிஎஸ் போல் குரல் வழி வழிநடத்தும் வசதியில்லை. இதுவும் மென்பொருள் சமாச்சாரமாகையால் எளிதில் மாற்றப்பட்டுவிடலாம்.
- கூகிள் வீடியோக்களை பார்க்க சில தந்திரங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது.
- AT&T-யை பொறுத்தவரை, ஐபோனை மோடமாக பயன்படுத்தி லேப்டாப்பில் இணையம் மேய முடிந்தால் கூட நாம் அதை செய்யக் கூடாதாம்.
- Flash நுட்ப வசதியில்லை.(Updated)
__________________
வாழ்வது சிலகாலம் உள்ளம் அழுதிடினும் உதடு சிரிக்கட்டுமே!
|