1. The Great Big Must Read List : Find Interesting Book Suggestions
    Dismiss Notice
  2. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பகிர்வோம் புத்தகங்களை!

Discussion in 'Book Lovers' started by deepa04, Sep 18, 2010.

  1. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    அன்பு நண்பர்களுக்கு,
    இது ஒரு புது முயற்சியாய் இந்த நூலினை தொடங்குகிறேன்.இந்த நூல் ,நூல்களை பற்றியது.
    இதில் நீங்கள் வாசித்த நல்ல நூல்களை பற்றிய அறிமுகத்தை,நூல் ஆசிரியர் பற்றிய அறிமுகத்தை,இங்கே பரிமாறலாம்.நூல் எவ்வகையாகவேண்டுமானாலும் இருக்கலாம்.அதை பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்.
    நல்ல புத்தகங்களை அறியும் போது,அதனை படிக்கும் போது,நம் அறிவு,வளர்கிறது,நம் சமுதாய பார்வை மாறுகிறது.நம்மை நாமே செப்பனிட தேவை நல்ல புத்தகங்கள்.
    எனவே அனைவருமாய் களமிறங்குவோம் வாரீர்!
     
  2. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    என் முதல் பதிவாய்,அமரர் கல்கி அவர்களின் புத்தகங்களை இங்கே பகிர்கிறேன்.அனேகமாக புத்தக ஆர்வலர்களுக்கு இவருடைய நாவல்களை பற்றி தெரியாமல் இருக்காது.ஆனாலும் அறியாதவர்களுக்காக.
    அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சிறந்த பத்திரிக்கையாளர்,சிறந்த நாவலசிரியார்இவரதுபடைப்புகள்காலத்தால்அழியாதவை.என்றும்,எத்தரப்பினரும் அதிகம் விரும்பி ரசித்து படிக்கப்படுபவை.
    அவருடைய ஒப்பற்ற வரலாட்ட்று நாவல்களில்,சிவகாமியின் சபதமும்,பார்த்திபன் கணவும்,இரட்டை நாவல்கள் என்ற பெருமை கொண்டது.
    சிவகாமியின் சபதம்
    இந்த நாவல் நான்கு பாகங்களை கொண்டது.
    இந்த நாவல் பல்லவர் காலத்தில் நடந்ததாக எழுதப்பட்டுள்ளது.
    இதில் வரலாற்று சிறப்பு மிக்க மகேந்திர பல்லவன்,மற்றும் அவருடைய புதல்வர்,மாமல்லர் என்ற நரசிம்ம பல்லவரின் வரலாறு நம் கண் முன்னே விவரிக்கப்பட்டுள்ளது.
    கலைக்கு பெயர் பெற்ற பல்லவ மன்னர்களின்,தீராத கலை தாகமும்,அதனினும் மேலாக அவர்களின் போர் திறமையும் இதில் சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளது.
    நயனமார்களில்,திருநாவுக்கரசர்,பரஞ்சோதிஅடிகள்,பாண்டியன்நெடுமாறன்,மங்கையர்கரசியார்,குலச்சிறையார் ஆகியோரின் காலம் இதுவகுமாகையின் அவர்களும் இந்த நாவல்களில் குறிப்பிடப்பட்டு சிறந்த விதமாக சித்தரிக்கப் பட்டுள்ளார்கள்.
    சிவகாமி,மற்றும் ஆயனர் ஆகியோர் பிரதான கதாப்பத்திரங்களாக ,கலை செல்வங்களாக இடம் பெற்றுள்ளனர்.
    சாளுக்கிய மன்னன் புலிகேசியின் ,தென்னக படையெடுப்பு,காஞ்சி கோட்டை முற்றுகை,வாதாபி படையெடுப்பு என ஆசியரியர் நமக்கு வரலாற்று சம்பவங்களை சுவை பட தந்துள்ளார்.
    மாமல்லரின் காதலி சிவகாமியின் சபதத்தின் ,விளைவாய் கதை நிகழ்வதாய் அமைந்துள்ளது.
    படிக்க படிக்க ஆவல் மிகுந்ததாய் ,சுவையான விருந்து இந்த நாவல்.
     

    Attached Files:

    • Nov1.jpg
      Nov1.jpg
      File size:
      20.7 KB
      Views:
      216
  3. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    இங்கு அடுத்த பகிர்வாக,பார்த்திபன் கனவு.
    பார்த்திபன் கனவு,கல்கி அவர்களின் முதல் வரலாற்று நாவல்.இதை எழுதி,பின்னரே சிவகாமியின் சபதம் எழுதினார்.
    *நரசிம்ம பல்லவர் ,செழுமையான ஆட்சி செய்த காலம் இது.
    *பார்த்திபன் என்ற சோழ மன்னன் ,சுயகௌரவத்துடன்,பலமிக்க பல்லவரை எதிர்த்து போர் புரிந்து மடிகிறான்.
    ,தான் கண்ட சோழ சாம்ராஜ்யத்தின் மகோன்னத நிலையை பற்றி சித்திரங்களாய் ரகசிய அறையில் வரைந்து தன் மகனிடம் காட்டுகிறான்,சிறுவனான மகன் அதை மிகவும் உன்னிப்பாக மனதில் கொள்கிறான்.
    *தான் இறக்கும் பொது,கனவு,கனவாகவே இருக்க,அதை ஒரு சிவனடியாரிடம் வெளியிடுகிறான்.அதை கேட்ட சிவனடியார் தன்னால் இயன்றதை செய்வதாய் பொறுப்பேற்று,சோழன் மகனையும்,மனைவியையும் பாதுகாக்கிறார்.
    *பருவ வயது வந்த சோழ இளவரசன் மலைகோட்டையில் ,புலி கொடி ஏற்ற அவனை கைது செய்து நாடு கடத்துகிறார் பல்லவர்.
    *பின்னர் அங்கு சென்று இளவரசன் சுய ஆட்சி செய்கிறான்,பின்னர் திரும்பி வந்து தன் நாட்டின் சுயாட்சி ஏற்படுத்துவதே கதை.
    *விக்ரமன் என்ற இந்த சோழ இளவரசனும்,நரசிம்மபல்லவர் மகள் குந்தவையும்,காதல் கொள்கிறார்கள்.
    *இதில்,சைவ அடியார் சிறு தொண்டர் தன் முயசியால் நரபலியை தடுக்கிறார்.இவர் நரசிம்ம பல்லவரின் முன்னால் படை தளபதி.
    *கடைசியில்,சிவனடியார் யார் என்ற மர்மம் சபையில் நிறைவேறுகிறது.
    மிக அருமையான நாவல்.
    Parthiban Kanavu - ??????????? ???? - Kalki's Novels - ????? ????????? ??????????
     

    Attached Files:

  4. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
  5. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    கள்வனின் காதலி.
    கல்கி கிருஷ்ணமூர்த்தி ஆனந்த விகடனில் பணியாற்றிய போது எழுதிய தொடர் நாவல் 'கள்வனின் காதலி'. இது ஒரு சமூக நாவலாகும். உலகில் உறுதியானது, உண்மையானது, அழிவில்லாதது ஒன்று உண்டு; அது அன்பு. தீய செயல்களுக்குங்கூட அன்பே தூண்டுகோல் என்ற கருத்தினை இந் நாவல் விளக்குகிறது.

    முத்தையன்,கல்யாணி கதாபாத்திரங்கள் இதில் முக்கியமானவை.
    முறைபென்னை மனமுடிக்க நினைக்கும் வாலிபன் ஏழ்மையின் காரணமாய்,நிராகரிக்கப்பட்டு,அவன் வாழ்வு திரும்பும் பாதை தவறாகி,கள்வன் ஆகிறான்.தன் மாமன் மகள் மாற்றானுக்கு வாழ்க்கைப்பட,அவள் வீட்டிலேயே களவாட செல்கிறான்.அதன் பின் காக்க முயன்றும் அவன் எப்படி முடிக்கிறான் என்பதே கதை.

    Kalvanin Kaathali - ???????? ????? - Kalki's Novels - ????? ????????? ??????????
     

    Attached Files:

  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Migavum arithaana arumaiyaana muyarchi Deepa.vaalthukkal.
    Neram kidaikkum pothu en pangalippum nichayam irukkum.
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள தீபா,

    அருமயான நூல்... படித்ததை பகிர்தல், பகிர்ந்ததை படித்தல், இரண்டுமே இனி தடை அல்ல நமக்கு என கூற ஒரு இனிய நூல்..

    வருவேன் நான் மீண்டும் என்னிடம் இருக்கும் புத்தகங்களைப் பகிர..
     
  10. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    saroj,
    thanks for your interest.and thank you for your participation.
     

Share This Page