Kambanin Muththukkal
by
on 20th February 2012 at 09:11 AM (395 Views)
சில 15 + வருடங்களுக்கு முன்..என் கணவர் வாங்கி வந்த CD யின் பெயர் 'கம்பன் கவியமுதம்'. அப்பொழுது அவ்வளவாக இந்த CD யை போட்டுக் கேட்கவில்லை.
'கம்ப ராமாயணம்' என்று என் மாமியாரால் பெயர் சூட்டப்பெற்று, இன்று தினமும், காலை, இந்த பாடல்களுடன் தான் பொழுது விடிகிறது, எங்கள் வீட்டில்.
32 பாடல்களைத் தேர்ந்தெடுத்து..MS அம்மா அதில் பாடி இருக்கிறார்கள்..அந்த 32 பாடல்களின், முத்துக்களின், சாராம்சம், வரும் வாரங்களில்.
முதல் இரண்டு பாட்டும் கடவுள் வாழ்த்தில் வருகிறது..இதோ அந்த இரண்டு பாடல்கள்.
1. உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அழகு இலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே.
உலகம் அனைத்தையும், தன் கருத்தால், மனப் போக்கால், படைத்தவரும், அதனை நிலை நிறுத்திக் காப்பவரும், பின் அழிப்பவரும் ஆகிய, என்றும், முடிவில்லா விளையாட்டு உடையவர் (படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூவகை த தொழில்களை, விளையாட்டு போல் செய்பவர்). அவரே தலைவர். அவரே அடைக்கலம் நமக்கு.
Surrender unto Him, who creates the world according to His intention, destroys the evil and protects all living beings.
2. ஆதி அந்தம் அரி என யாவையும்
ஓதினார் அலகு இல்லன உள்ளன
வேதம் என்பன மெய் நெறி நன்மையன்
பாதம் அல்லது பற்றலர் பற்று இலார்.
முதலும் முடிவுமாக, முற்றிலும் கற்றவர்களும், அகப்பற்றும் புறப்பற்றும், இல்லாதவர்களும், வேதங்களும், இறைவனைத் தவிர, ஆதாரமாக வேறு ஒன்றையும், பற்றமட்டார்கள். (கடைசியாக, யாவரும் சரண் அடைவது, பகவானின் பாதங்களையே)
To the learned people; to those who denounced both the desires, in and out; and to the Vedas: they hold on to His feet, as their sole support.
Sriniketan















Email Blog Entry