Tell-A-Friend  |  Bookmark Us  |  Sign-Up  |  Help
 
 

Go Back   IndusLadies > Blogs > Thirukural in IL - A collective translation work!
 

Forgot username / password?
Register Now!
Home Register Forum Blogs Directory FAQ Mark Forums Read

Notices

This blog is exclusively reserved for posting Thirukural - both in Tamil & English. It will also include an explanation of the Kurals in English for the benefit of all IL'ites visiting this space.

This is a collective work by a few IL'ites to share the knowledge of Thirukural amongst the IndusLadies Community.

We used to post '5 Kurals a day' earlier. In order to give more time for the readers to read it, absorb it and enrich this space with their comments, we have changed the frequency to a weekly blog posting of '10 Kurals a week'.

Hope you will all enjoy the Kurals. Do not forget to leave your comments on our effort.
Rate this Entry

10 kurlas a week

Submit "10 kurlas a week" to Digg Submit "10 kurlas a week" to StumbleUpon Submit "10 kurlas a week" to Google Submit "10 kurlas a week" to Technorati Submit "10 kurlas a week" to Facebook
Posted 13th October 2009 at 11:40 PM by Sriniketan

அதிகாரம் 113
ADHIKAARAM 113
CHAPTER 113

காதற் சிறப்புரைத்தல்
KAADHAR SIRAPPURAITHTHAL

THE GLORIFICATION OF LOVE--HE

தலைமகன்

1121. பாலோடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்.
Paalodu thaenkalan dhattre panimozhi
vaaleyiru ooriya neer.

இனிய மொழி பேசும் இவளுடைய தூய பற்களின் இடையே ஊரும் உமிழ்நீர், பாலோடு தேன் கலந்த சுவை தருவதாகும்.
The dew on the lips of this soft spoken fair one, is like a mixture of milk and honey.

1122. உடம்போடு உயிரிடை என்னமற்று அன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு.
Udambodu uyiridai ennamattru anna
madandhaiyodu yemmidai natpu.

இம்மடந்தைக்கும் எனக்கும் இடையே இருக்கும் நட்பு, உடலோடு உயிர்க்கு உள்ள நட்பைப் போன்றதாகும்.
The bond between me and this damsel is like the bond between body and soul.

1123. கருமணியில் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்.
Karumaniyil paavaainee podhaayaam veezhum
thirunudharkku illai idam.

என் கண்ணுக்குள் இருக்கும் பாவையே, நீ சென்றுவிடு...ஏனெனில், நான் விரும்பும் இப்பெண் இருக்க இடம் இல்லை..அந்த இடமே சிறந்தது.
O! the image in the pupil of my eyes, go away and give room to this beloved one, for there is no other abode that is worthy of her.

1124. வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை; சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து.
Vaazhdhal uyirkkannal aayizhai; saadhal
adharkannal neengum idaththu.

சிறந்த அணிகலன்களை அணிந்த இவள் கூட இருக்கும் போது உடலோடு உயிர் இருப்பது போன்றும், இவள் பிரியும் போது உயிர் பிரிவது போன்றும் உள்ளது.
Life is lovely when she is near, but dreadful when she leaves.

1125. உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.
Ulluvan manyaan marappin marappariyen
ollamar kannaal gunam.
போர்புரியும் கண்களையுடைய இவளின் பண்புகளை, நான் மறந்தால் தானே நினைக்க முடியும், மறக்கவே இல்லையே.
Recollection is needed only if I forget the charms of her battling eyes.

தலைமகள்--SHE

1126. கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார்;
நுண்ணியரெம் காத லவர்.
Kannullin pogaar imaippin paruvaraar;
nunniyerem kaadha lavar.

என் காதலர் என் கண்ணுக்குள் இருந்து போகமாட்டார், இமைத்தாலும் வருந்த மாட்டார். ஏனெனில் அவ்வளவு நுட்பமானவர் அவர்.
So subtle is my lover's form, he neither leaves my eyes nor is hurt when I wink.

1127. கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து.
Kannullaar kaadha lavaraaga kannum
yezhudhaem karappakku arindhu.

கண்ணுக்குள் என் காதலர் இருப்பதால், அந்த நிமிடம் அவர் மறையக் கூடும் என்பதால் நான் மை எழுதுவதில்லை.
As my lover resides in my eyes, I do not paint them, lest he should leave them even for an instant.

1128. நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேப்பாக்கு அறிந்து.
Nenjaththaar kaadh lavaraaga veithundal
anjudhum vepaakku arindhu.

காதலர் என் நெஞ்சத்திலே எப்போதும் இருப்பதால், சூடான உணவுகளை நான் உண்பதில்லை, அவருக்கு சுடும் என்ற காரணத்தினால்.
As my beloved is ever in my heart, I fear to eat hot food, lest it burns him there.

1129. இமைப்பின் கரப்பாக்கு அறிவல்; அனைத்திற்கே
ஏதிலர் என்னுமிவ் வூர்.
Imaippin karappaakku arival; anaithirkke
yedhilar yennumiv voor.

கண்ணை மூடினால் அவர் மறைந்து விடுவார் என்பதனால், கண்ணைத் திறந்தே இருக்கிறேன். அதனால் இந்த ஊரார் அவரை அன்பில்லாதவர் என ஏசுகிறது.
Fear of losing him, I don't close my eyes. For this reason the villagers charge him as heartless.

1130. உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலார் என்னுமிவ் வூர்.
Uvandhuraivar ullaththul yenrum igandhuraivar
yedhilar yennumiv voor.

என் இதயத்திலே எப்போதும் இவர் குடி இருக்கிறார். அதனை அறியாத இந்த ஊரார், பிரிந்து வாழின்றார், அன்பில்லாதவர் என அவரை ஏசுகின்றனர்.
He dwells forever in my heart. But the villagers declare that he abandoned me and call him cruel.
Posted in Uncategorized
Views 84 Comments 2 Email Blog Entry

« Prev     Main     Next »
Total Comments 2

Comments

  1. Old Comment
    knot2share's Avatar
    Very nice Sri!! I can read your translated tamizh lines, but valluvarin tamizh . ........
    Thank you for the translation once again..
    permalink
    Posted 14th October 2009 at 12:01 AM by knot2share knot2share is offline
  2. Old Comment
    Sriniketan's Avatar
    Translated thamizh padikkum podhu...it won't be hard to read Thiruvalluvar's thamizh...you will do it by the tie, you finish reading the kurals...knot2share!
    Thank you for enjoying the kurals..

    sriniketan
    permalink
    Posted 15th October 2009 at 06:10 PM by Sriniketan Sriniketan is online now
 

All times are GMT -5. The time now is 08:18 AM.