Tell-A-Friend  |  Bookmark Us  |  Sign-Up  |  Help
 
 

Go Back   IndusLadies > Blogs > Pushpavalli Srinivasan
 

Forgot username / password?
Register Now!

Notices

Rating: 1 votes, 5.00 average.

Religion and Spiritualism - Baghavad Gita in Tamil - 1

Posted 8th October 2008 at 10:18 PM by Pushpavalli Srinivasan
Updated 1st November 2008 at 08:37 AM by Pushpavalli Srinivasan (For changing fonts)




பகவத் கீதை


பகவத் கீதையை நம் தாய் மொழியான தமிழிலும் அனுபவிப்போமா? "எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காணபதறிவு," என்ற வள்ளுவர் வாக்கிற்கிணங்க பற்பல பெரியோரும் ஞானியரும் கீதைக்கு உரை எழுதியுள்ளனர். அவற்றில் நான் படித்து அனுபவித்ததை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.இதில் என்னுடைய சுயநலமும் கலந்துள்ளது.பல தடவை படிப்பதைவிட ஒருமுறை எழுதினால் (தட்டச்சில் தட்டினால்) மனதில் நன்கு பதியும் என்பதால் இந்த முயற்சியில் இறங்கியுள்ளேன்.

கீதா சுகீதா கர்தவ்யா கிமன்யை: ஸாஸ்த்ர ஸங்க்ரஹை:!
யா ஸ்வயம் பத்மநாஸ்ய முக பத்மான் வினி: ஸ்ருதா!!
ஸர்வ ஸாஸ்த்ரமயீ கீதா ஸர்வதேவோமயி ஹரி:!
ஸர்வதீர்த்தமயீ ங்கா ஸர்வவேமயோ மநு:!!
கீதா ங்கா ச காயத்ரீ கோவிந்தேதி ஹ்ருதிஸ்திதே!
சதுர் கார ஸம்யுக்தே புநர்ஜன்ம ந வித்யதே!
பாரதாம்ருத ஸர்வஸ்வகீதாயா மதிதஸ்ய ச!
ஸாரமுத்த்ருத்ய க்ருஷ்ணேன அர்ஜுனஸ்ய முகே ஹுதம்!!

மஹாபாரதம்-பீஷ்மபர்வம்

கீதை இருக்கும்போது வேறு ஸாஸ்த்திரங்கள் எதற்கு? கீதை ஒன்றை மட்டுமே படித்தால் போதுமே! ஏஎனென்றால் இது ஸாக்ஷாத் க்ருஷ்ணபகவானின் ( பத்மநாபனின்) முகத்தாமரையிலிருந்து வெளிவந்ததாயிற்றே! அனைத்து ஸாஸ்த்திரங்களும் கீதையில் அடக்கம்.ஹரியானவர் அனைத்து தேவர்களுக்கும் இருப்பிடமானவர்.கங்கையுள் எல்லா புண்ணிய நதிகளும் அடக்கம். மனு நூலோ வேதத்தின் சாரம்.நான்கு க-காரங்களாகிய கீதை, கங்கை, காயத்ரி, கோவிந்தன் என்பவை எவன் மனத்தில் பதிந்துள்ளதோ அவனுக்கு மறு பிறவி என்பதே கிடையாது.மஹாபாரதமாகிய அமுதக் கடலைக் கடைந்து அதன் ஸாரமாகிய கீதையைக் க்ருஷ்ண பரமாத்மா அர்ஜுனனுக்கு ஊட்டினார். நாமும் அந்த அமுதக் கடலில் திளைத்து ஆநந்தம் துய்ப்போம்.


வசுதேவசுதம் தேவம் கம்சசாணூரமர்தனம்
தேவகீபரமானந்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

வசுதேவன் மைந்தனையும் கம்சசாணூரர்களை வதைத்தவனையும்,தேவகிக்குப் பரம ஆனந்தத்தை அளிப்பவரும், ஜகத்குருவானவரும், தெய்வமானவருமான கண்ணனின் அடிபணிந்து நான் இப்போது எடுத்துக்கொண்டுள்ள பணியை ஆரம்பிக்கிறேன்.



ஸர்வர்மான் பரித்யஜ்ய
மாமேகம் ரணம் வ்ரஜ
அஹம் த்வா ஸர்வபாபேப்யோ
மோக்ஷயிஷ்யாமி மாசுச:
(கீதா 18.66)

எல்லா தருமங்களையும் (கடமைகளையும்)பற்றற என்னிடம் அர்ப்பணித்துவிட்டு என் ஒருவனையே சரண் புகுவாய்.நான் உன்னை எல்லாப் பாவங்களின்றும் விடுவிப்பேன். வருந்தாதே.



கீதை பிறந்த கதை

பன்னிரண்டு வருட வனவாசமும் ஒரு வருட அஞ்ஞாதவாசமும் முடிந்த பின்னரும் துரியோதனன் பாண்டவர்களுக்கு அவர்களுடைய ராஜ்ஜியத்தைத் திருப்பிக்கொடுக்க மறுத்துவிட்டான். அதன் பின்னரும் துவாரகாதிபதி தூதுசென்று ஐந்து கிராமங்களையோ அல்லது ஐந்து வீடுகளையோ கேட்டும் ஊசிமுனையளவு இடமும் தரமுடியாதென்று துரியோதனன் மறுத்துவிட்ட படியால் போர் புரியத் தீர்மானிக்கப் பட்டது. அப்போது அர்ஜுனனும் துரியோதனனும் திரு கண்ணனின் உதவியைப்பெற துவாரகை சென்றனர்.அப்போது துவாரகாநாதன் அரிதுயில் கொன்டிருந்ததால் துரியோதனன் இறுமாப்புடன் பகவானின் தலைப்புறம் உயர்வான ஆசனத்தில் அமர்ந்துகொண்டான். அர்ஜுனனோ மாயக் கண்ணனின் திருவடிகளுக்கு அருகில் கூப்பிய கரங்களுடன் அமர்ந்திருந்தான். கண்விழித்தவுடன் முதலில் அர்ஜுனனைப் பார்த்த பரந்தாமன் பின்ன்ர் துரியோதனனையும் பார்த்தார். அப்போது துரியோதனன் தானே முதலில் வந்ததாகவும் அதனால் தன்னுடைய கோரிக்கையையே முதலில் கேட்கவேண்டும் என்று கூறினான்.
ஆனால் தான் அர்ஜுனனையே முதலில் பார்த்ததாலும் அர்ஜுனன் வயதில் சிறியவன் என்பதாலும் அர்ஜுனனுடைய விருப்பத்தையே தாம் முதலில் கேட்கவேண்டுமென்றும், ஆனாலும் தாம் இருவருக்கும் பொதுவானதால் ஆயுதம் ஏந்திப் போர்புரிய மாட்டேனென்றும் ஒருவருக்குத் தம் நாராயணீய சேனையைக் கொடுப்பதாகவும் மற்றவருடன் தான் மட்டும் தனியாக உடனிருப்பதாகவும் சொன்னார். அர்ஜுனனுக்கு முன்னுரிமை கொடுத்தபோது அர்ஜுனன் திரு கண்ணனே உடனிருக்க யாசித்தான்.துரியோதனன் சேனையைப் பெற்றுக் கொண்டு புறப்பட்டான்.
பிறகு கண்ணன் அர்ஜுனனைப் பார்த்து தான் ஆயுதம் ஏந்திப் போர்புரிய மாட்டேன் என்று கூறியும் தன்னையே அவன் யாசித்த காரணத்தைக் கேட்டார். அப்போது அர்ஜுனன் வெறும் படையால் தனக்கு யாதொரு பயனுமில்லை என்றும் தவிர போரில் க்ருஷ்ணன் தனக்கு சாரதியாக இருக்க வேண்டுமென்று விரும்புவதாகக் கூறினான்.
தேரோட்டியாக மாலவனை யாசித்துப் பெற்றதனால் மனித குலத்திற்கே கீதை என்றதோர் பெறற்கரிய பொக்கிஷம் கிடைத்தது.
இரு படைகளும் போருக்குத் தயாராக போர்க்களத்தில் சந்தித்தபோது பகவான் வேதவியாசர் திருதராஷ்ட்டிரரிடம் சென்று அவர் அந்தக் கொடிய யுத்தத்தைப் பார்க்க விரும்பினால் தெய்வீகக் கண்களைக் கொடுப்பதாகச் சொன்னார். ஆனால் அவர் தம் குலம் அழிவதைப் பார்க்க விரும்பவில்லை என்றும் அந்தத் தெய்வீகப் பார்வையை சஞ்சயனுக்கு அளித்தால் அவன் மூலம் யுத்தகளத்தில் நடப்பவைகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுவதாகச் சொன்னார். வேதவியாசரும் சஞ்சயனுக்கு தெய்வீகப் பார்வயை அளித்துச் சென்றார்.சஞ்சயனுக்கு போர்க்களத்தில் நடக்கும் எல்லாச் செயல்களும் ஒளிவு மறைவின்றித் தெரியும் என்று சொல்லிச் சென்றார்.


கீதோபதேசம் தொடரும்



Total Comments 10

Comments

Old
Gowri66's Avatar
Dear PS,

Liked it very much... enjoyed reading every bit of it !!
With love,
Gowri
permalink
Posted 9th October 2008 at 02:29 PM by Gowri66 Gowri66 is online now
Old
charuchitthra's Avatar

This is great divine service

Dear Pushpa Madam,

The Job you ve undertaken ie taking geetha to everybodys own desktop/laptop is indeed a divine yoga. Its going to enlighten normal person s to the world gretest vedanta. Your effort and job is divine . So I jus Pray that Almighty to be with you through this venture and there by I also get to read the punya paadam everyday. Thanking u

Regards,
CC
permalink
Posted 9th October 2008 at 06:43 PM by charuchitthra charuchitthra is offline
Old
Sriniketan's Avatar
Dear Mrs. Pushpa,
Glad that you had started Geethai in Tamil.
Yet to go through the blog..
You are doing a great job..
Will come back later with the fb..

sriniketan
permalink
Posted 9th October 2008 at 09:33 PM by Sriniketan Sriniketan is offline
Old
Pushpavalli Srinivasan's Avatar
Dear Gowri,
Glad to hear that you enjoyed reading my humble contribution. Wish that I could continue in the same manner and keep you interested till the end.
Love,
PS
permalink
Posted 9th October 2008 at 09:37 PM by Pushpavalli Srinivasan Pushpavalli Srinivasan is offline
Old
Pushpavalli Srinivasan's Avatar
Dear Charu,
As you say the job I have undertaken is quite tough. I require kind hearted souls like you to pray for me to complete it successfully and I pray to Gitacharyan for the same.
Love,
PS
permalink
Posted 9th October 2008 at 09:46 PM by Pushpavalli Srinivasan Pushpavalli Srinivasan is offline
Old
Pushpavalli Srinivasan's Avatar
Dear Sriniketan,
Will be waiting for your valuable FB. I have undertaken a difficult task knowingly, though I wonder whether I am capable to do this. I pray to the Lord to give me strength and wisdom to do this job to everybody's satisfaction.
Love,
PS
permalink
Posted 9th October 2008 at 09:51 PM by Pushpavalli Srinivasan Pushpavalli Srinivasan is offline
Old
Anandchitra's Avatar
PS
Thanks for writing this great epic in Tamil.
We are indeed fortunate that you are doing this for us.
The opening line and paragraph is just catching and pulling the reader in.
Its interesting to read again about Arjuna and Duryodhana's approach to Lord Krishna and Veda Vysar and Sanjaya.
Looking forward to reading more:)
permalink
Posted 9th October 2008 at 09:55 PM by Anandchitra Anandchitra is online now
Old
Pushpavalli Srinivasan's Avatar
Dear AC,
As I have mentioned in my reply to Charu I really wonder if I could do justice to the task undertaken. Typing, copying and then pasting it is very time consuming. Yet as I love to do it I am trying my level best. I'll be constanly praying to the Lord to guide me. He is my Guru also in the form of Haragriva.
Thank you for your encouraging FB,
Love,
PS
permalink
Posted 10th October 2008 at 04:36 AM by Pushpavalli Srinivasan Pushpavalli Srinivasan is offline
Old
Sriniketan's Avatar
You had started with a bang, Mrs.Pushpa...learning Geethai in our own mother tongue has its own benefits of understanding more clearly...
Hats off to your efforts in this and you will definitely be guided in this endeavour...by HIM...
Follow Gita's path of do your duty...He will definitely be a guide to your actions..

sriniketan
permalink
Posted 12th October 2008 at 10:48 PM by Sriniketan Sriniketan is offline
Old
Pushpavalli Srinivasan's Avatar
Dear Sriniketan,
Thank you for your encouraging FB and as you have said I hope and pray to Him to guide me in this stupendous task.
I'll do my duty and leave the rest unto Him!
" PoRRuvar poRRalum ThuRRuvar ThuRRalum Ellam antha KannanukkE!"
I have made it my life's motto.
Love,
PS
permalink
Posted 13th October 2008 at 07:03 AM by Pushpavalli Srinivasan Pushpavalli Srinivasan is offline
 

All times are GMT -5. The time now is 04:07 PM.