Tell-A-Friend  |  Bookmark Us  |  Sign-Up  |  Help
 
 

Go Back   IndusLadies > Blogs > mithila's musings
 

Forgot username / password?
Register Now!
Home Register Forum Blogs Directory FAQ Mark Forums Read

Notices

Life has a million colours and I like to watch ,enjoy and be steeped in all its colours.
Rate this Entry

வாழ்க காதல்!

Submit "வாழ்க காதல்!" to Digg Submit "வாழ்க காதல்!" to StumbleUpon Submit "வாழ்க காதல்!" to Google Submit "வாழ்க காதல்!" to Technorati Submit "வாழ்க காதல்!" to Facebook
Posted 18th November 2009 at 07:07 AM by mithila kannan

ஏதோ ஒன்றை பார்க்கிறோம்,எதோ ஒன்றை கேட்கிறோம்,எதோ ஒன்றை உணர்கிறோம்.அந்த எதோ ஒன்று பல சமயங்களில் நம்முள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.அந்த தாக்கம் சில சமயங்களில் நம்மை அழ வைக்கிறது.சில சமயங்களில்நம்மை சிந்திக்கவும் வைக்கிறது. சமீபத்தில் எனக்கு நேர்ந்த
ஒரு அனுபவம் என்னை தாக்கி,பின்என்னை
சிந்திக்கவும்
வைத்தது. சமீபத்தில் சன் டிவி ல் ஒளி பரப்பான ஒரு நிகழ்ச்சி.புரியும் தொழிலாளர்களுக்காக நடிக நடிகையரும்,பாடகர்களும்,இசை அமைப்பாளர்களும் இன்னும் பல பேர் பங்கு பெற்ற அந்த சுவையான நிகழ்ச்சியை நானும் மிக ரசித்து பார்த்தேன்.இந்த நிகழ்ச்சியில் 'தேனிசை தென்றல் தேவா' அவர்கள் அவருக்கே உரிய கம்பீரமான தொனியில் தான் எழுதி இசை அமைத்த,வெகு ஜனரஞ்சகமான அந்த பாட்டை பாடினார் .அந்த பாட்டின் ஒரு வரி என்னுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
பாட்டின் அர்த்தத்தை தந்து விடுகிறேன்.
ஒரு இளைஞன் நீண்ட காலம் கழித்து தன கிராமத்திற்கு வருகிறான்.அவன் வீட்டிற்கு எதிர் வீட்டில் வசிக்கிறாள் அவனுடைய அக்கா.விடியலில் எழுந்து ஜன்னல் வழியாக அக்காவின் வீட்டைப் பார்கிறான்.அந்த வீட்டு வாசலில் நீர் தெளித்து கோலம் போட்டு கொண்டிருக்கிறாள் அவன் அக்கா பெற்ற பைங்கிளி,அவனது முறைப்பெண்.பார்த்து கொண்டிருக்கும் அவனது கண்கள் விரிகின்றன.அவன் எப்போதும் பார்த்த பெண் இல்லை இவள்.இவனோத் பாண்டி விளையாடியவள் இல்லை இவள்.இந்த பெண் பருவம் அடைந்தவள்.வனப்பின் சிகரமாய் ஜொலிக்கிறாள்.
வைத்த கண் வாங்காமல் இவன் அவளை பார்த்த வண்ணம் இருக்க ,அவளும் தலையை நிமிர்த்தி இவனை பார்க்கிறாள்.கண்களும் ந்தித்து கொள்கின்றன.பின் என்ன ஆயிற்று?
"கண்ணும் கண்ணும் முட்டிகிசி,காதல் வந்து பத்திக்கிச்சி" என்கிறார் கவிஞர்.
இந்த காதல்தான் எத்தனை விந்தையானது.ஒரு நொடியில் ஒரு ஆணின் நெஞ்சையும் ஒரு பெண்ணின் நெஞ்சையும் இடம் மாறி புக்க வைக்கிறதே.
எத்தனையோ கவிஞர்கள் என்னென்னவோ விதத்தில் பாடியதுதான்,தேவாவும் தனக்கே உரிய மாதிரி பாடியுள்ளார்.

இந்த இளைஞனும் அவனுடைய முறைப்பெண்ணும் கண்டிப்பாக பல முறை யாரும் அறியாமல் சந்தித்திருப்பார்கள்தான்.எப்படி?
நான் என் கற்பனை சிறகை விரித்து விட்டேன்.
அவன் கடைக்கு போகும் சாக்கில் அவள் வீட்டை கடந்து போக ,அவள் நெல் உணர்த்தும் சாக்கில் வாசலுக்கு வர,மறுபடியும் கண்கள் சந்திக்கின்றன. எப்படி பல சந்திப்புகள்.பிறகு,இருவரும் துணிந்து சினிமாவிற்கு போகிறார்கள்.கொட்டகைக்குள் சென்று அருகருகே அமர்கிறார்கள்,விளக்குகள் அணைக்கப் படுவது மிக ஏதுவாகிறது அவர்களுக்கு.
இதோ வருகிறது என்னுள் தாகத்தை ஏற்படுத்திய அந்த வரி.

"அவ என்னை தொட்டா,நான் அவளை தொடல்லை"en.என்கிறான் இளைஞன்.
என் நெஞ்சை தொட்ட வரி இதுதான்.என்னுள் ஒரு சின்ன மின்சாரத்தை பாய்ச்சி என் கண்களை கசிய வைத்து ,என்னை சிந்திக்க வைத்தது இந்த வரிதான்.
காதல் வசப்ப் பட்ட ஆண் பெண் இருவரில்,அதிகமாய் உணர்ச்சி வசப் புபவள் பெண்தான்.அவள் நெஞ்சம் பஞ்சு போல் மென்மையானது.தன காதலனின் அன்பான பார்வைக்காக,மிக மெல்லிய ஸ்பரிசத்திற்காக ஏங்குவது பெண்தான்.

காதல் என்பதுதான் என்ன.
காதலும்,காமமும் சரி விகிதத்தில் கலக்கும் போதுதான் காதல் மணக்கிறது.
காதல் இல்லாத காமம் அழிக்க பட வேண்டிய ஒன்று,எரிக்க பட வேண்டிய ஒன்று.காமம் இல்லாத காதல் என்று ஒன்று பெரும்பாலும் இல்லைதான்.காமம் இல்லாத காதல் என்று ஒன்று இருக்குமேயானால் அது வாசம் இல்லாத காகிதப் பூ போல.
செம்புலப் பெயனீரார் பாடினார
செம்புலப் பெயனீர் போல அன்புடை நெஞ்சம்தான் கலந்தனவே"என்று.
பாரதி பாடினார்,
"மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்,காத்திருப்பேனாடி இதோ பார் கன்னத்து முத்தமொன்று"என்று.
"கண்களில்
நீர்சோர அவன் வெதும்புகிறான்.
"மோனத்திலிர்க்குதடி
இவ்வையகம் மூழ்கி துயிலினிலே
நான் ஒருவன் மட்டும் தனிமை என்றோர் நரகத்துழளுவதோ
டிப்பிரியாமலே ஒரிராவிலே கொஞ்சி குலாவியங்கே முத்தமிட்டு பல முத்தமிட்டு
பல முத்தங்களிட்டு உன்னை சேர வந்தேன்"என்று

நம் நண்பனான அந்த இளைஞனின் முறை பெண் இளம் பெண்.காதல் வசப் பட்டவள்.அவள் அவன் கைகளைத் தொடுகிறாள்.
'உன் ஸ்பரிசத்திற்காக நான் ஏங்குகிறேன்' ஒரு சின்ன சங்கேத குறிப்புதான் அந்த தொடுதல்.
அவன் அவளை தொடவில்லை.அவனுக்கும் அது தெரியும்.இருந்தும் அவன் அவளை தொடுவதில்லை.ஏன்?
அவன் பேராண்மை படைத்தவன்.பெண்மையை மதிப்பவன். தான் உயிராய் காதலிக்கும் தன முறை பெண்ணின் பேருக்கு ஒரு களங்கமும் வந்து விடக்கூடாது என்று தவிப்பவன்.அவளை உண்மையிலீ மனதார நேசிப்பவன்.எனவே பொங்கி விழும் தன உணர்வுகளை கடிவாளம் போட்டு அடக்கி கைகளை கட்டிக்கொண்டு சாதுவாய் அமர்ந்திருக்கிறான்.
இந்த வரிகள் என்னை வெகுவாய் பாதித்தன.
காதலனின் அன்பான ச்பரிசத்திகாக ஏங்கும் அந்த பெண்ணிற்க்காக என் மனமும் பாடாய் படுவது உண்மைதான்
. அதே சமயம் ஆண்மையின் இருப்பிடமாய் பண்பின் உறைவிடமாய் விளங்கும் இந்த இளைஞனை எண்ணி என் மனம் மிக பெருமைப் படுகிறது.
ஒரு அறையில் குழந்தைகளோடு குடித்தனம் செய்யும் இள தம்பதியர்கள் மனம் நிறைந்த காதல் உணர்வுகளை மெல்ல மெல்ல பொசுக்கி விட்டு ,நேரம் வரும் வரை காத்திருப்போம் என்று தவமிருக்கும் தம்பதியர்களுக்கு என் வந்தனங்கள்.
கூட்டு குடும்பங்களில், பார்வையாலேயே காதல் புரிந்து,மயக்கும் மாலை பொழுதே நீ போ போ என்று காத்திருக்கும் தம்பதியர்,இவர்களுக்கு என் வந்தனங்கள்.


வாழ்க காதல் ,வளர்க தமிழ் நெறி!
Views 941 Comments 19 Email Blog Entry

« Prev     Main     Next »
Total Comments 19

Comments

  1. Old Comment
    rajalakshmigopal's Avatar
    Mithilamma,

    You are a genius.I dont have words to say.I cried when I read the last paragraph.100% true.
    permalink
    Posted 18th November 2009 at 07:41 AM by rajalakshmigopal rajalakshmigopal is offline
  2. Old Comment
    mithila kannan's Avatar
    My dear Rajalakshmi,
    such loving words from daughters l;ike you is my strength.
    I saw te pogramme and those lines really touched my heart.
    There are thousands of couples who have to bury their tender feelings in their hearts and continue with their 'thavam'.
    i really feel for them.
    love
    mithilamma
    permalink
    Posted 18th November 2009 at 08:18 AM by mithila kannan mithila kannan is offline
  3. Old Comment
    sarajara's Avatar
    Very Beautiful one! I had been a lover of tamil Izhakkiam since school ages and in my busy live encroached by the IT world, I feel very much blessed to come across a post in Tamil quoting some of the most beautiful Tamzh Ilakkiangal!

    Many thanks to you for this post! Mithila!
    Simply scintillating!
    permalink
    Posted 19th November 2009 at 04:36 AM by sarajara sarajara is online now
  4. Old Comment
    mithila kannan's Avatar
    Dear sarajara,
    Thanks for the lovely comment.When I heard that song,this thought came to me and I had to share my thoughts with all of you.
    Iam also a keen lover of Tamil ilakkiyam,since Iam not well versed in tamil typing,typing this post took me two days,believe me.
    love
    mithila
    permalink
    Posted 19th November 2009 at 05:05 AM by mithila kannan mithila kannan is offline
  5. Old Comment
    manjulapathy's Avatar
    Dear mithila!
    Beautifully written. konjum tamilil azagaga ezuthi irukkireergal!! Mudalil ungalukku vandanam. Even I watched that programme for sometime.
    Your last para really touched me. I was near to tears!
    manjula
    permalink
    Posted 19th November 2009 at 11:59 AM by manjulapathy manjulapathy is online now
 

All times are GMT -5. The time now is 05:06 AM.