| 591.அளவறிந்து வேலை செய்தால் விரல் மடக்கப் பொழுதிராது. 592.யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக்கொண்டாற்போல. 593.பூனையை மடியில் கட்டிக் கொண்டு சகுனம் பார்த்தானாம். 594.ஆடி மாதம் அவரை போட்டால் கார்த்திகை மாதம் காய். 595.ஆடி அழைத்து வரும் தை துடைத்து வரும். 596.தலை இருக்க வால் ஆடாது. 597.தாய் அறியாத சூல் உண்டோ? 598.இல்லாள் அகத்திருக்க இல்லாததொன்றில்லை. 599.இளமையில் முயற்சி முதுமையில் பலிக்கும். 600.மண்டை உள்ளவரையில் சளி போகாது. |