பாலக், புளிச்ச கீரை & வல்லாரை
பாலக்கீரை - பாலக் கீரையில் இரும்பு சத்து அதிகம் உள்ளது. உடலுக்கு வலுவூட்டுவது, மலச்சிக்கலைப் போக்கும்.
குளிர்ச்சியைத் தரும். குடல் நோய்களுக்கு நல்லது. இருதயத்திற்கு நல்லது.
குமட்டிக் கீரை - இது தாமிரச் சத்துடையது. குருதியை தூய்மைப்படுத்துவது மலத்தை இளக்கும் தன்மை உடையது, கருவுற்ற மகளிருக்கு இது நல்லது, உடல் நீரை அதிகரிக்கவல்லது.
தொய்யல் கீரை - தொய்ந்து போன நாடி நரம்புகளை வலுவாக்கும், உடலுக்கு ஊக்கமூட்டுவது, குளிர்ச்சியானது,
செரிப்பாற்றலை அதிகரிக்கும், மலச்சிக்கலை போக்கும், வாத நோயாளிக்கு ஏற்றது, பேறு காலத்திற்கு பின்பு மகளிர் சாப்பிட ஏற்றது.
உடலைத் தேற்றும்.
புளிச்சக் கீரை - உடலுக்கும் குடலுக்கும் வளமூட்டும்.
வயிற்றுப் புண்ணை ஆற்றும். வயிற்றுக் கடுப்பு உள்ளவர்கள்
இக்கீரையை வெங்காயம், வெந்தயம் போட்டு மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் உடனே நிவாரணம் தெரியும்.
குடல் பலவீனத்தால் ஏற்படும் பேதி நிற்கும், குருதிப் போக்கை குறைக்கும்.
வல்லாரைக் கீரை - அடிக்கடி உணவில் சேர்ப்பதால் உடல் எரிச்சல், சிறுநீர் மஞ்சளாக மாறுதல் முதலியன குணமாகும்.
இந்த இலையை அரைத்து தேங்காய் எண்ணையுடன் தடவிவர புண்கள் விரைவில் ஆறும். 3,4 இலையுடன் சீரகம், சர்க்கரை அரைத்துக் கொடுத்தால் குழந்தைகளுக்கான சீதபேதி நிற்கும்.
மூளையில் உள்ள நரம்பு செல்களை ஊக்குவித்து ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.
இப்போழுது வல்லாரை மிட்டாய்' கூட கிடைக்கிறது.
'ஆனால் இந்தக் கீரையை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால் தலைவலி மயக்கம் முதலியவை வரும். அளவோடு சேர்க்கவும்.
Total Comments 0
Comments
Recent Blog Entries by krishnaamma
- How to check and buy vegetables and fruits? (1st October 2008)
- இஞ்சியும் சுக்கும். (14th July 2008)
- பொன்னாங்கண்ணி,மணத்தக்காளி ,முள்ளங்கி..... (13th July 2008)
- 'துவாதசிக்கீரை' (13th July 2008)
- பசலைக்கீரை, முடக்கத்தான் & காசினிக் கீரை (8th July 2008)




