Tell-A-Friend  |  Bookmark Us  |  Sign-Up  |  Help
 
 

Go Back   IndusLadies > Blogs > Krishnaamma's Blog
 

Forgot username / password?
Register Now!
Home Register Forum Blogs Directory FAQ Mark Forums Read

Notices

Rating: 1 votes, 5.00 average.

இஞ்சியும் சுக்கும்.

Submit "இஞ்சியும் சுக்கும்." to Digg Submit "இஞ்சியும் சுக்கும்." to StumbleUpon Submit "இஞ்சியும் சுக்கும்." to Google Submit "இஞ்சியும் சுக்கும்." to Technorati Submit "இஞ்சியும் சுக்கும்." to Facebook
Posted 14th July 2008 at 09:48 AM by krishnaamma

இஞ்சி ஒரு சர்வரோக நிவாரணியாக கருதப்படுகிறது. ஆண்டு முழுவதும் எல்லா கால நிலையிலும் விளையக்கூடிய இஞ்சி, கேரளாவில் தான் அதிக அளவு பயிரிடப்பட்டு வருகிறது.

இரும்பு, விட்டமின் சி, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்களைக் கொண்ட இஞ்சியை பச்சையாக அல்லது உலர வைத்து சாப்பிட்டால் தலைவலி, ஜலதோஷம், முச்சு அடைப்பு, தலை சுற்று போன்ற நோய்களுக்கு ஒரு இணையற்ற மருந்தாக அமையும்.


இஞ்சிக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு.

நம் உண்ணும் உணவில் இஞ்சி கலந்து சாப்பிடுவதால் உணவு எளிதில் ஜீரணமாகிறது.

இஞ்சிக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கும் குணம் அதிகமுண்டு.

மேலும் குடலில் சேரும் கிருமிகளை அழித்துவிடும்.

கல்லீரலை சுத்தப்படுத்தும்.

மலச்சிக்கல், வயிற்றுவலி, ஏற்பட்டால் இஞ்சிச்சாறில் சிறிது உப்பு கலந்து பருக வேண்டும்.



பசி எடுக்காதவர்கள் இஞ்சியுடன் கொத்தமல்லி சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்.


ஜலதோஷம் பிடித்தால் இஞ்சி கஷாயம் போட்டு குடித்தால் குணமாகும்.

கஷாயம் பிடிக்கதவர்கள் இஞ்சி டீ போட்டு குடித்தாலும் போதும் ஜலதோஷம் குணமாகும்.


தொண்டை வலி ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு அருமருந்தாகும்.

மாரடைப்பைத் தடுக்கும் சக்தி இஞ்சிக்கு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.


"இதயத்துக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உள்ளது.

கொழுப்புச்சத்து உள்ள உணவை சாப்பிடும் பொழுது ஐந்து கிராம் அளவுக்கு இஞ்சியை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கொழுப்பு சத்து நிறைந்துள்ள உணவை அடிக்கடி சாப்பிடுவது இரத்த நாள இயக்கத்தை நாளடைவில் வலுவிழக்கச் செய்துவிடும்.

இரத்தநாளங்களில் இரத்தக்கட்டு ஏதேனும் ஏற்படுமாயின் அதை சரிசெய்வது அவ்வளவு எளிதன்று.

இதற்குக் கைகண்ட மருந்தாக இஞ்சி விளங்குகின்றது.

இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி மாரடைப்பு நேராமல் இஞ்சி தடுக்கின்றது." என்று இந்திய மருத்துவக் கழக இதழில் டாக்டர் SK வர்மா தெரிவித்துள்ளார்.


இது சளிப்பிடித்தல் / ஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது; தலைவலியைப் போக்குகிறது.


இரத்தஓட்டம் சீராக இருக்க உதவுகிறது; கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது; மைய நரம்பு மண்டலத்தைத் தூண்டி இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது.

மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது.

செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது.

மகளிரின் கருப்பைவலிக்கும் மாதவிலக்கு நேரங்களில் அடிவயிற்றில் உண்டாகும் வலிகளுக்கும் நன்மருந்தாக உள்ளது.

தோலில் உண்டாகும் உலர்சருமம், காயங்கள், சிரங்குகள் போன்றவற்றிக்கும் இது நல்ல மருந்தாகும்.

இஞ்சி முரப்பா செய்தும் சாப்பிடலாம். அஜீரணத்தைப் போக்கும்.






இவ்வாறு மருத்துவ மகத்துவம் கொண்ட இஞ்சியை தினமும் உணவில், துவையல், சட்னி செய்தும், பொங்கல், பொரியலில் சேர்த்தும் பயன் பெறலாமே. அப்படி செய்வதன் மூலம் உணவே மருந்தாகிவிடும் அல்லவா?


இனி சுக்கு பற்றி பார்ப்போம்.


உலர்ந்த இஞ்சியே சுக்கு என அழைக்கப்படுகிறது.

இஞ்சியை சுத்தம் செய்து சுண்ணாம்பு நீரில் ஊறவைத்து அதனை காய வைத்தால் சுக்கு கிடைக்கும்.

இது பல மருத்துவப்பயன்களைக் கொண்டிருக்கிறது. இதன் மேன்மையை "சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை" என்ற பழமொழியின் மூலம் அறியலாம்.

இந்த சுக்கு இந்த நோய்க்கு உதவும், இந்த நோய்க்கு உதவாது எனும் விதியில்லை. சகல ரோகங்களுக்கும் கேட்கும்.

சுக்கும் கருப்பட்டியும் சேர்த்துக் ( சுக்கு காப்பி) குடிக்க உடல் தளர்ச்சி, அஜீரணம் இவை தீர்ந்து பசிவுண்டாகும்.


வெறும் சுக்கு வெல்லம் இடித்து தின்றால் கூட போறும், அஜீரணம் சரியாகும்.

சுக்கைத் தட்டி வெல்லம் சேர்த்துக் கொதிக்க வைத்து அருந்த உடல் அசதி தீரும். சுக்கு, மஞ்சள், பூண்டு 3ம் சமஎடை எடுத்துச் சிறிதளவு நீரில் அரைத்துக் கொதிக்க வைத்து உடலில் வீக்கமுள்ள இடத்தில் பூச வீக்கம் வற்றும். சுக்கும் உப்பும் பொடித்துத் தின்ன வாயு, ஓங்காரம், இரைச்சல் தீர்ந்து பசி உண்டாகும்.


பித்தம் அதிகமாகி தலைசுற்றல் ஏற்படுவதுண்டு. அதற்கு சுக்குத் தூளை தேனில் கலந்து சாப்பிட்டால் குணமாகும்.

இஞ்சி முரப்பா செய்தும் சாப்பிடலாம்.
Posted in Uncategorized
Views 765 Comments 6 Email Blog Entry

« Prev     Main     Next »
Total Comments 6

Comments

  1. Old Comment
    jaisapmm's Avatar
    Hi Krishnamma,

    I will try to follow all your tips

    Nice postings

    Keep it up

    Regards
    Only One Life.Begin now.Do the Best You Can.
    Keep Helping As Much As YOU Can.
    permalink
    Posted 15th July 2008 at 02:04 AM by jaisapmm jaisapmm is offline
  2. Old Comment
    krishnaamma's Avatar
    Thanks jai,

    for stepping here.
    permalink
    Posted 15th July 2008 at 04:46 AM by krishnaamma krishnaamma is offline
  3. Old Comment
    naanci's Avatar
    HI KRISHMA,

    Nice and a very useful information about ginger.
    Keep up your good work
    permalink
    Posted 17th July 2008 at 07:22 AM by naanci naanci is offline
  4. Old Comment
    krishnaamma's Avatar
    Thank you naanci,
    for stepping in and happy to note that you felt that this is useful one.
    permalink
    Posted 20th July 2008 at 04:02 AM by krishnaamma krishnaamma is offline
  5. Old Comment
    krishnaamma's Avatar
    Thank you naanci,
    for stepping in and happy to note that you felt that this is useful one.
    permalink
    Posted 20th July 2008 at 04:03 AM by krishnaamma krishnaamma is offline
 

All times are GMT -5. The time now is 07:50 AM.