Tell-A-Friend  |  Bookmark Us  |  Sign-Up  |  Help
 
 

Go Back   IndusLadies > Blogs > Krishnaamma's Blog
 

Forgot username / password?
Register Now!

Notices

Rating: 1 votes, 4.00 average.

பொன்னாங்கண்ணி,மணத்தக்காளி ,முள்ளங்கி.....

Posted 13th July 2008 at 01:30 AM by krishnaamma
Updated 13th July 2008 at 01:58 AM by krishnaamma
பொன்னாங்கண்ணி

சாதாரணமாக காம்புகளைக் கிள்ளி நட்டுவைத்தாலும், எந்த மாதிரியான சூழலிலும் வளரக்கூடிய கீரை இது.

இந்தக் கீரையில் ஊட்டச் சத்து, நீர்ச் சத்து, கொழுப்புச் சத்து, மினரல் சத்துக்கள், கார்போஹைட்ரேட், கால்ஷியம், பாஸ்பரஸ், புரதம் ஆகிய சத்துக்கள் அடங்கியிருக்கின்றன.

கால்ஷியம் அதிக அளவில் கலந்திருப்பதால் எலும்புகளின் உறுதிக்கும், பற்களின் ஆரோக்கியத்துக்கும் இந்தக் கீரை ரொம்பவே உதவும்.

'பொன்னாங்கண்ணிக் கீரையை தொடர்ந்து 27 நாட்கள் சாப்பிட்டு வந்தால், பகலிலும் நட்சத்திரத்தைப் பார்க்க லாம்' என்பார்கள்.

இதில் வைட்டமின் 'ஏ' மிகுந்து இருப்பதால், அந்த அளவுக்குக் கண் பார்வையைக் கூர்மையாக்கும்;என்பதால் வந்த சொல்வடை இது.
அந்த அளவு வல்லமையைக் கொண்ட கீரை இது.


இதை வெவ்வேறு விதமாக உட்கொள்வதன் மூலம், நமது உடம்பின் எடையைக் குறைக்கவோ, அதிகரிக்கவோ முடியும்.


ஆம். இந்தக் கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்துச் சமைத்து, சாதத்துடன் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எடை குறையும்.


மாறாக, துவரம் பருப்பும் நெய்யும் கலந்து சமைத்துச் சாப்பிட்டு வந்தால் எடை கூடும்.


இதன் சாற்றுடன் சம அளவு கீழாநெல்லிச் சாற்றைக் கலந்து நல்லெண்ணெய் இட்டுக் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்தால், கண் சம்பந்தமான நோய்கள் விலகும்.

உடல் உஷ்ணம் குறையும்.

ரத்தம் விருத்தியாகும்.



இதன் பெயருக்கேற்றாற் போல, நமது தோலின் மினுமினுப்புத் தன்மையை அதிகரிக்கக் கூடிய சக்தியும் இந்தக் கீரைக்கு உண்டு.


இவ்வளவு மகத்துவங்கள் அடங்கிய இந்தக் கீரையை, 'கீரைகளின் ராஜா' என்று தயங்காமல் சொல்லலாம்.



மணத்தக்காளி:


தினமும் உணவுடன் சேர்க்க வேண்டிய கீரை வகை-களில் மணத்தக்காளியும் ஒன்று.

குடல் புண்ணை ஆற்றுவதில் முதன்மையானது, குடலுக்கு பலமளிப்பது, பெண்மையை வளர்ப்பது, மங்கையருக்கு மார்பை வளரச்செய்வது, கருப்பை குறைப்பாட்டை நீக்குவது, குடற்புழுவை அகற்றுவது.

இதில் வைட்டமின் ஏ, பி, அதிக அளவில் உள்ளது.


B காம்ப்ளெக்ஸ் அதிக அளவில் இருப்பதால் வாய்ப்புண், வயிற்றுப் புண் குணமாகும்.


வயிற்றில் புண்,வாயில் புண் உள்ளவர்கள் தொடர்ந்து 2 நாட்கள் சாப்பிட்டால் சீக்கிரம் குணம் தெரியும்.


உடலின் சூட்டை தணித்து, உடலின் உள் உறுப்புகளில் புண் இருந்தால் அடிக்கடி சாப்பிட்டால் நன்கு குணம் அடையும்.


வயிற்றில் பூச்சிகள் வராது தடுக்கும் ஆற்றல் இந்த கீரைக்குமட்டும்தான் உண்டு.

இந்த கீரையை வாயில் புண் உள்ளவர்கள், ஒரு பிடி கீரையை வாயில் போட்டு நன்கு மென்று சாற்றை மட்டும் விழுங்க வேண்டும்.


தொடர்ந்து 2 நாட்கள் சாப்பிட்டால், வாய்ப் புண் குணமாகும்.

அதிக அளவில் நீர் விட்டு சுண்டக் காய்ச்சி, மிளகு, சீரகம், உப்பு சேர்த்து எண்ணெய் விட்டு தாளித்துக் குழம்பு செய்யலாம்.


பருப்புடன் சேர்த்து கூட்டு வைக்கலாம்.


பொரியலாகச் செய்து சாப்பிடலாம்.


சாம்பார் செய்யும் போதும் அதில் பயன்படுத்தலாம்.


இப்படிப் பயன்படுத்தும்போது, கீரை சாப்பிடப் பிடிக்காத குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

மணத்தக்காளியில் நிறைய உயிர்ச் சத்துக்களும், புரதச் சத்துக்களும், இரும்புச் சத்தும் உண்டு.


இந்தக் கீரை-யில் தக்காளி வடிவில் சிறிய அளவில் மணி மணியாகக் காய்-கள் இருப்பதால் மணித்தக்காளி என்றும் அழைக்கப்படு-கிறது.


இந்தக் காயுடன் கீரையையும் பச்சைப் பருப்பையும் கலந்து உண்டு-வந்தால், உடல் சூடு குறையும்.


மூலச் சூட்டைத் தணிக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு.

சித்த மருத்துவத்தில் குடல் புண்களைக் குணப்படுத்துவதில் மணத்தக்காளிக்கு முக்கிய இடம் உண்டு.

மணத்தக்காளிக் கீரையில் உடல் நலத்துக்கான சத்துக்கள் நிறைய இருக்கின்றன.


அதனால், குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்து வாரம் ஒருமுறையாவது இந்தக் கீரையைச் சாப்பிடப் பழக்கப்படுத்துவது நல்லது.



மணத்தக்காளிக் காயை வற்றலாக போட்டும் குழம்பு வைக்கும் பழக்கம் உண்டு.


மேலும், வற்றலை வறுத்து பொடித்து சாதத்துடன் கலந்து சாப்பிட, பேதி நிற்கும்.


வறுத்த வற்றலை மோர் சாதத்துடன் சாப்பிட சுவையாய் இருக்கும்.




முள்ளங்கிக் கீரை - சிறுநீர் கல்லடைப்பு, கரப்பான்(சரும வியாதி)களை குணமாக்கும்.




கீழாநெல்லிக் கீரை- மஞ்சள் காமாலைக்கு கைகண்ட மருந்து.


ஈரலைச் சுத்தி செய்வதுடன் அஜீரணத்தைப் போக்கி பசியைப் பெருக்கும்.

Total Comments 1

Comments

Old
kutekrish's Avatar
Hi ma,

I like this keerai when you prepare this for chappati. good to know about more about this keerai.

same same to 'manathakali' keerai I like that also very much. kootu as well as curry with coconut. yummy.

thanks for posting here.
permalink
Posted 14th July 2008 at 03:55 AM by kutekrish kutekrish is offline
 

All times are GMT -5. The time now is 08:57 AM.