Tell-A-Friend  |  Bookmark Us  |  Sign-Up  |  Help
 
 

Go Back   IndusLadies > Blogs > Krishnaamma's Blog
 

Forgot username / password?
Register Now!

Notices

Rating: 1 votes, 4.00 average.

பப்பாளிக்காய் + பப்பாளிப்பழம்

Posted 5th July 2008 at 03:04 AM by krishnaamma
Updated 5th July 2008 at 04:14 AM by krishnaamma
முதலில் பப்பாளிக்காயில் என்ன இருக்கு என பார்ப்போம் விட்டமின் ஏ,கைபோ பாப்பைன் என்சைம் இருக்கு.

மூட்டுவலி உள்ளவர்களுக்கும், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும் உபயோகமான ஒன்று.
பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். கர்ப்பிணிப் பெண்கள் முதல் எட்டு வாரங்களுக்கு தவிர்க்கவும்.
இது சருமத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கும். குடல் பூச்சிகளைச் அழித்துச் சுத்தம் செய்யும்.
பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.
பப்பாளிக் காயை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.

பப்பளிப்பழ்ம்:

பொதுவாக மாம்பழத்தில் அதிக வைட்டமின்கள் உண்டு. இதற்கு அடுத்தபடியாக பப்பாளிப்பழத்தில் தான் அதிக வைட்டமின்கள் உள்ளன.

அதிலும் குறிப்பாக வைட்டமின் ஏ- தான் அதிக அளவில் இருக்கிறது.

எனவே தான் இதை 'நைட்ப்ளைண்ட்னஸ்' எனப்படும் மாலைக்கண் நோய்க்கு அருமருந்தாகப் பயன்படுத்தலாம் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.

வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது.

பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில்
உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும்.

மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்.


மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டி ருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும்.


அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது.

எந்த வகையான தொற்றுநோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது.


பப்பாளி பழத்தில இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண
வாய்ப்பில்லை.


மூல நோய், சர்க்கரை நோய், குடல் அழற்சி போன்றவைகளுக்கு சிறந்தது.


பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும்.


எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.


பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.


நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.


பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட

நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.

பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.


பப்பாளிப் பாலை
குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.


பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.


பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.


பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.


தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்
Comments 3 Views 156 Email Blog Entry

Total Comments 3

Comments

Old
Sriniketan's Avatar
Krishnamma,
Once again thanks for the information...we do get papaya here..
will try to use more..in our kitchen..

sriniketan
permalink
Posted 6th July 2008 at 05:43 PM by Sriniketan Sriniketan is online now
Old
krishnaamma's Avatar
Hi Sri,

Thank you for your post. yes once try; you dont feel the difference with this and chow chow. you can prepare very tasty with papaya.

பப்பாளிக் கூட்டு ரொம்ப நன்றாக இருக்கும். நறுக்கிய காயை இருமுறை நன்றாக அலசி பிறகு கூட்டு செய்யவும்.

All the best. try and give me a feed back.
permalink
Posted 7th July 2008 at 12:01 AM by krishnaamma krishnaamma is offline
Old
Dear Krishnaamma,

your information about papaya fruit was really useful.thank you
permalink
Posted 7th July 2008 at 12:20 AM by vijiramesh99 vijiramesh99 is offline
 

All times are GMT -5. The time now is 09:15 AM.