Tell-A-Friend  |  Bookmark Us  |  Sign-Up  |  Help
 
 

Go Back   IndusLadies > Blogs > Krishnaamma's Blog
 

Forgot username / password?
Register Now!

Notices

Rating: 1 votes, 4.00 average.

வெங்காயம்

Posted 5th July 2008 at 05:36 AM by krishnaamma
Updated 7th July 2008 at 03:20 AM by krishnaamma
வெங்காயம் என்றதும் கண்ணீர்தான் நினைவிற்குவரும். இல்லையா?

அதற்கு காரணம் 'அலைல் புரோப்பைல் டைசல்பைடு' (Allyle Propyle Disulphide) என்ற எண்ணெய் ஆகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காரணமாக இருக்கிறது.

சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத் தான் தருகின்றன.

முருங்கைக் காயைத்தான் காய்கறிகளின் வயாகரா என்று சொல்லக் கேட்டு இருப்பீர்கள்.

அதில் உண்மையில்லை. அதைவிட அதிக பாலுணர்வைத் தூண்டக் கூடியது வெங்காயம். இதில் 'அப்ரோடிஸியாக் பொட்டன்ஷியல' மற்றும் பாலுணர்வைத் தூண்டும் பொருட்கள் உள்ளன.

தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும்,
பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னசிலேயே இடம்
பிடித்திருக்கிறார்.


வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்று சொல்லலாம்.

இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பில்லாமல் ஓடவைக்க உதவி செய்கிறது.

'பைப்ரினோலிசின்' என்ற பொருளை சுரந்து கொழுப்பு உணவுகள் மூலமாக ரத்த நாளங்களுக்குள் நுழைந்த கொழுப்பு களைக் கரைத்துவிடுகிறது.

வெங்காயத்தில் புரதச் சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே, நம் உடம்புக்கு ஊட்டச்சத்து தருகிறது. பல்வேறு நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள்.

நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் பிரதான இடத்தை வகிக்கின்றது.

பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள், வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.

ஒரு நாளைக்கு ஓர் ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரை வீட்டுக்குள் அனுமதிக்கத் தேவையில்லை என்பார்கள். அதைப்போல வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்
இந்தப் பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம்.

வெங்காயத்தை பச்சையாக, சமைத்து, சூப் அல்லது சாலாடாக்கி என எப்படியும் சாப்பிடலாம்.

வெங்காயம் பல்வேறு நோய்களை குணமாக்க வல்லது.

இதயத்திற்கு சக்தியைத் தருகிறது.

நரை, தலை வழுக்கையைத் தடுக்கிறது.

உடல் வெம்மையைத் தணிக்கிறது.

இரத்த விருத்தி, எலும்புக்கு வலிமை அளிக்கிறது. பித்த நோய்கள், கண் நோய்கள், வாத நோய்களை குணமாக்குகிறது.

இனி... வெங்காயத்தை எந்தெந்த முறையில் பயன்படுத்தினால் என்னென்ன பயன்களை நாம் பெறலாம் என்பது பற்றிப் பார்ப்போம்.


நாலைந்து வெங்காயத்தைத் தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட, பித்தம் குறையும். பித்த ஏப்பம் மறையும்.


வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்துச் சூடாக்கி, இளம் சூட்டில் காதில் விட, காது இரைச்சல் மறையும்.

வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத் தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டுத் தூளையும் இவற்றைப் பாலுடன் சேர்த்துச் சாப்பிட, எல்லாவிதமான மூலக்கோளாறுகளும் நீங்கும்.

வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும்.
வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட, உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.

வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாகச் சுட வைத்து, உடையாத கட்டிகள் மேல் வைத்துக் கட்ட, கட்டி உடனே பழுத்து உடையும்.

வெங்காயச் சாறு, சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும்.
வெங்காயச் சாற்றை மோரில் விட்டுக் குடிக்க, இருமல் குறையும்.

வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து, வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவி வர, பல்வலி, ஈறுவலி குறையும்.

வெங்காயப்பூ, வெங்காயத்தைச் சமைத்து உண்ண, உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு குறையும். இதற்கு சிறிய வெங்காயம் மிகவும் நல்லது.

வெங்காயத்தை வேகவைத்து, அதோடு தேன், கற்கண்டை சேர்த்துச் சாப்பிட, உடல் பலம் ஏறும்.

வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும்பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

வெங்காயத்தை வதக்கி, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றைப் பூசிவர மறைந்துவிடும்.

திடீரென மூர்ச்சையானால், வெங்காயத்தைக் கசக்கி முகரவைத்தால், மூர்ச்சை தெளியும்.

வெங்காயச் சாற்றையும், தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்துச் சாப்பிட்டால், சீதபேதி நிற்கும்.

வெங்காய சாற்றுடன் நீர் கலந்து குடிக்க, நன்கு தூக்கம் வரும்.

பனைமரப் பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு, சூடுபடுத்தி குடித்துவர, மேக நோய் நீங்கும்.

வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட, மேகநோய் குறையும்.

வெங்காயம் குறைவான கொழுப்புச் சத்து கொண்டது. எனவே, குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம். உடல் எடை அதிகமாக இருந்தால் அதை வெங்காயம் குறைத்து விடும்.

பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தைத் தரும்.

வெங்காயம் வயிற்றில் உள்ள சிறுகுடல் பாதையைச் சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்திற்கு பெரிதும் உதவுகிறது.

சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி சளிப்பிடிக்கும், இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் இருக்கும். இதைத் தவிர்க்க சுலபமான வழி, வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிடுவது தான்.

புற்றுநோயைத் தடுக்கும் அற்புத மருந்துப்பொருள் வெங்காயம்.

புகைத்தல், காற்று மாசு, மன இறுக்கம் போன்றவைகளால் ஏற்படும் செல் இறப்புகளை, செல் சிதைவுகளை இது சீர்படுத்திவிடுகிறது.

மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றையும் நீக்குகிறது.

தேனீ போன்றவை கொட்டிவிட்டால் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்துக்
கொள்ளுங்கள். வெங்காயத்தில் உள்ள ஒரு என்சைம் உடலில் வலியையும்,
அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண் டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.

யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும் என்பது உங்களுக்குத் தெரியும். இத் தொல்லை இருந்தால் நிறைய வெங் காயம் சாப்பிடுங்கள்,
கற்கள் கரைந்து ஓடும்.

முதுமையில் வரும் மூட்டழற்சியை வெங்காயம் கட்டுப்படுத்தி விடுகிறது.
வெங்காயத்தையும், கடுகு எண்ணெயை யும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் வலி குறைந்துவிடும்.



முகச்சுருக்கம், சருமம் தொங்குதல் போன்றவற்றை வெங்காயத்திலுள்ள புரோட்டீன்கள் தவிர்க்கின்றன.

வெயிலில் அதிக நேரம் இருப்பதால் ஏற்படும் வெப்பத் தாக்கிலிருந்து தப்ப
விரும்பினால் வெங்காயத்தை உள்ளங் கை, கன்னங்கள், வயிறு, குதி கால் போன்ற இடங்களில் தடவிக்கொள்ளலாம்.

முன்பே சொன்னது போல் பெரிய வெங்காயம் சிறிய வெங்காயம் என இரண்டு வகை இருந்தாலும் இரண்டுமே ஏறக்குறைய ஒரே பலன் தருபவைதான்.

எனவே, எந்த வெங்காயத்தை வேண்டுமானாலும் சாப்பிடுங்கள், நோய் இல்லாமல் வாழுங்கள்.

மேலும் சில குறிப்புகள்:

ஆண்மை பெருக:
சிறிய வெங்காயத்தை நறுக்கி,வதக்கி,தேன்விட்டு இரவில் சாப்பிடுங்கள்.
பின்னர் பசும்பால் குடியுங்கள்.ஆண்மை பெருகும்.


முகப்பரு மறைய:
நறுக்கிய வெங்காயத்தை முகப்பருக்களில் தடவிவரவும்.


ஆஸ்மா குறைய:
தினசரி பச்சை வெங்காயம் சாப்பிட்டு வரவும்.

இருமல் குறைய:
வெங்காயத்தை சாறு எடுத்து,மோரில் கலந்து குடித்துவரவும்.
Comments 12 Views 429 Email Blog Entry

Total Comments 12

Comments

Old
sundarusha's Avatar
Thanks Krishnaamma for all the useful tips regarding onions.
I think, nutrition apart, onion improves the flavor of certain dishes. But I try to avoid on some days even when I am tempted to add to the dish.
permalink
Posted 5th July 2008 at 08:37 AM by sundarusha sundarusha is offline
Updated 5th July 2008 at 11:50 AM by sundarusha (addition)
Old
Sister,

Where is the english version ?

Rgds
permalink
Posted 5th July 2008 at 11:45 AM by Pras Pras is offline
Old
krishnaamma's Avatar
Hi sundarusha,

thanks for stepping in.
permalink
Posted 5th July 2008 at 11:46 AM by krishnaamma krishnaamma is offline
Old
krishnaamma's Avatar
Hi prasad,

how are you? It is easy for me to type in my own language. If anybody wants to translate for me no objection .
permalink
Posted 5th July 2008 at 11:48 AM by krishnaamma krishnaamma is offline
Old
Gowri66's Avatar
Krishnaamma Madam,

Another useful blog ! I am taking print-outs and keeping it with Kitchen book. Very useful, indeed. Thanks a lot , once again !!
permalink
Posted 6th July 2008 at 01:49 PM by Gowri66 Gowri66 is offline
Old
Sriniketan's Avatar
Krishnamma,
Useful and healthy tips which will be helpful in convincing my hubby to add onion to the diet...

Sriniketan
permalink
Posted 6th July 2008 at 05:37 PM by Sriniketan Sriniketan is offline
Old
krishnaamma's Avatar
Dear Gowri,

good to note that you liked this blog and also happy to note that it is useful to you. Yes as you said, if we keep the information handy it will be more useful. keep it up.
permalink
Posted 6th July 2008 at 11:42 PM by krishnaamma krishnaamma is offline
Old
krishnaamma's Avatar
Hi Sri,

you dont use onion aa? ரொம்ப ஆச்சாரமா? we started using it yaar. Now a days I am using garlic also. If I write about garlic next you have to convince your husband for that also.It is that much good.
permalink
Posted 6th July 2008 at 11:44 PM by krishnaamma krishnaamma is offline
Old
sujathamurthi's Avatar

Be Happy

Hello madam,

It is really a very good and useful tips. I won't avoid onions in my dishes. After reading your tips... I learnt lot of things. It is a very healthy tips..
Thanks a lot.
permalink
Posted 11th July 2008 at 07:11 AM by sujathamurthi sujathamurthi is offline
Old
krishnaamma's Avatar
hi sujatha,

good. I am so happy to see your mail. good that you decided to eat onions. I am touched dear.
permalink
Posted 11th July 2008 at 11:42 AM by krishnaamma krishnaamma is offline
Old
Dear Madam,

Its a very good and useful tips.Thanks
permalink
Posted 12th July 2008 at 02:36 AM by venkat kavi venkat kavi is offline
Old
krishnaamma's Avatar
Hi Venkatkavi,

thanks for stepping in. also visit my sub- forum

Krishnaamma's Kitchen
permalink
Posted 14th July 2008 at 04:40 AM by krishnaamma krishnaamma is offline
 

All times are GMT -5. The time now is 02:04 AM.