Tell-A-Friend  |  Bookmark Us  |  Sign-Up  |  Help
 
 

Go Back   IndusLadies > Blogs > Krishnaamma's Blog
 

Forgot username / password?
Register Now!
Home Register Forum Blogs Directory FAQ Mark Forums Read

Notices

Rating: 1 votes, 4.00 average.

'துவாதசிக்கீரை'

Submit "'துவாதசிக்கீரை'" to Digg Submit "'துவாதசிக்கீரை'" to StumbleUpon Submit "'துவாதசிக்கீரை'" to Google Submit "'துவாதசிக்கீரை'" to Technorati Submit "'துவாதசிக்கீரை'" to Facebook
Posted 13th July 2008 at 02:16 AM by krishnaamma
Updated 13th July 2008 at 02:56 AM by krishnaamma

அகத்திக் கீரைக்ககுதான் இந்த பெயர். இதைப் பற்றி இந்த பகுதியில் பார்ப்போம்.

அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துக்கள் அடங்கியுள்ளதாக நம் பண்டையைச் சித்தர்கள் கூறியிருக்கின் றனர்.

பொதுவாக இந்தியாவிலும், குறிப்பாகத் தென்னாட்டிலும் விரதம் இருப்பது ஒரு கோட்பாடாக கைகொள்ள்ப்பட்டு வருகிறது. இவ்வாறு விரதம் இருந்து முடிப்பவர்கள் உண்ணும் உணவில், முதல் ஒரு கைப்பிடி அளவிலேயே நூறுவிதச் சத்துக்கள் அடங்கிய உணவை உண்ண வேண்டும் என் று வைத்திய நூல்கள் குறிப்பிடுகின்றன.

ஒரு கைப்பிடி உணவில் நூறுவிதச் சத்துக்களை பெறும் வழியை மருத்துவ நூல்கள் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றன.

1. அகத்திக் கீரை - 63 சத்துக்கள்

2. சுண்டைக்காய் - 20 சத்துக்கள்

3. வாழைக்காய் - 5 சத்துக்கள்

4. கொத்தவரை - 1 சத்து

5. அரிசிச் சாதம் - 1 சத்து

6. பருப்பு - 3 சத்து

7. நெய் - 7 சத்து

ஆக மொத்தம் - 100 சத்துக்கள்

இந்த 7 உணவுப் பொருட்களிலும் நூறுவிதச் சத்துக்களும் அடங்கி விட்டதைக் காணலாம்.

அகத்திக் கீரை முதல் கீரையாக நின்று அறுபத்து மூன்று வகைசத்துக்களைப் பெற்று விள்ங்குவதைக் காணலாம்.


அந்த அளவு எல்லா

சத்துக்களும் பெற்ற கீரை இது.

15 நாட்களுக்கு ஒரு முறை

சாப்பிட்டால் போறும்.

துவாதசி அன்று சாப்பிடும் கீரை.


அதனால் தான் 'துவாதசிக்கீரை'

என்ற பெயரும் பெற்றது.

(ஏகாதசி விரதம் முடித்து, துவாதசி அன்று அகத்தி

கீரையும், நெல்லிப் பச்சடியும் சாப்பிடுவார்கள்.)

மேலும் இது, வெப்பத்தை தணிக்கும், உள் சூட்டை

அகற்றும்.

அனைத்து வகையான சத்துகளையும் உடைய இந்த

கீரைதான், குடல், குருதியை தூய்மைப் படுத்தும்.

குடற்புழுவை கொல்லும், பித்தத்தை தணிக்கும்.

தலைச்சுற்று, மயக்கம் ஆகியவற்றைப் போக்கும்.

உடலில் எந்த வகையில் விஷம் சேர்ந்திருந்தாலும் அதை

முறிக்கும் தன்மை இதற்குண்டு.

உடல் சூடு தணிந்து, கண்கள் குளிர்ச்சி பெறும்.

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

எனவே, மாதம் இரு முறை இக்கீரை யை உணவில் சேர்த்து வாருங்கள்.

« Prev     Main     Next »
Total Comments 14

Comments

  1. Old Comment
    Anushiv's Avatar

    Unable to view the fonts

    Krishnamma, unable to read the first few lines. can you pls. re-type it?
    permalink
    Posted 13th July 2008 at 02:29 AM by Anushiv Anushiv is offline
  2. Old Comment
    krishnaamma's Avatar
    please wait let me try again. thanks for your mail.
    permalink
    Posted 13th July 2008 at 02:31 AM by krishnaamma krishnaamma is offline
  3. Old Comment
    krishnaamma's Avatar
    Hi Anu, please tell me now is it visible to you? are you able to read it ? waiting for your reply.
    permalink
    Posted 13th July 2008 at 02:57 AM by krishnaamma krishnaamma is offline
  4. Old Comment
    Shanvy's Avatar
    hi krishnamma,

    an old lady who used to come to my granny's places used to say just crush a few leaves and apply the juice on black heads and pimples..they will disappear... not sure...
    permalink
    Posted 13th July 2008 at 06:08 AM by Shanvy Shanvy is offline
  5. Old Comment
    krishnaamma's Avatar
    Hi shanthi,

    Happy to see your post after a long time. thanks for stepping in.
    Ho this is a news to me. we can try that know? If the black heads and pimples will disappear means it is too good no?

    your avathar is good and it remains me about my diet. keep in touch.
    permalink
    Posted 14th July 2008 at 12:35 AM by krishnaamma krishnaamma is offline
 

All times are GMT -5. The time now is 02:03 PM.