Tell-A-Friend  |  Bookmark Us  |  Sign-Up  |  Help
 
 

Go Back   IndusLadies > Blogs > Krishnaamma's Blog
 

Forgot username / password?
Register Now!
Home Register Forum Blogs Directory FAQ Mark Forums Read

Notices

Rating: 1 votes, 4.00 average.

எலுமிச்சம் பழம்

Submit "எலுமிச்சம் பழம்" to Digg Submit "எலுமிச்சம் பழம்" to StumbleUpon Submit "எலுமிச்சம் பழம்" to Google Submit "எலுமிச்சம் பழம்" to Technorati Submit "எலுமிச்சம் பழம்" to Facebook
Posted 7th July 2008 at 03:55 AM by krishnaamma
Updated 7th July 2008 at 04:55 AM by krishnaamma

எலுமிச்சம் பழத்தை ஒரு சர்வரோக நிவாரணி என்று சொல்லலாம். அந்தளவுக்கு நோய்கள் வராமல் தடுத்து உடல் நலத்தை காத்துக் கொள்ள என்னென்ன பொருட்கள் அவசியம் தேவையோ, அவைகள் அனைத்தும் இந்த பழத்தில் இருக்கின்றன.

எலுமிச்சம் பழத்தின் சாற்றில் குறிப்பாக பொட்டா சியம், பாஸ்பரஸ், சிட்ரிக் ஆசிட் போன்ற பொருட்கள் கணிசமான அளவில் உள்ளன. இந்தப் பொருட்கள் அனைத்துமே நமது உடல் நலத்தை கட்டிக் காக்க உதவுபவையாக உள்ளன.

மனிதர்களுக்கு தேவையான வைட்டமின் சி சத்து எலுமிச்சையில் தாரளமான உள்ளது. இந்த சி-யை ஆஸ்கார்பிக் அமிலம் என்று சொல்வர். இது நீரில் கரையும் தன்மை பெற்றது. ஆஸ்கார்பிக் அமிலம் உயிரியல் ஆக்ஸி கரணங்களில் ஈடுபடுகிறது. இந்தச் சத்து நோய் கிருமிகளை கொல்லும் ஆற்றல் கொண்டது.

உடலின் நரம்பு மண்டலத்திற்கு வலிமையை ஊட்ட மளிக்கக் கூடிய ஆற்றல் எலுமிச்சம் பழத்திலுள்ள பாஸ்பரஸ் என்ற ரசாயனப் பொருளுக்கு உண்டு. இது மட்டுமின்றி நரம்புகளுக்கு புத்துணர்வையும், தெம்பையும் அளிக்கிறது.

இதிலுள்ள பொட்டாசியம் இரத்தத்தின் அமிலத் தன்மையைக் கட்டுப்படுத்துவதுடன், நரம்பு தளர்ச்சி அடையாமல் காக்கிறது.டென்ஷனை விரட்டி மனசை ரிலாக்ஸாக வைத்துக்கொள்ள எலுமிச்சம்பழம் ரொம்பவும் துணைபுரியுறதா தற்போதைய மருத்துவ ஆய்வுல கண்டுபிடிச்சிருக்காங்க. ப்ளட் பிரஷர் உள்ளவங்களுக்கு ரொம்ப நல்லது.

எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் அமிலம் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. அதனால் தொற்று நோய் கிருமிகளின் தாக்குதலில் இருந்து உடலை கண்போல பாதுகாக்கிறது.

நோய் ஏற்பட்டால் தடுப்பதற்கு மட்டுமின்றி ஒரு மனிதனுக்கு நோய் வராமல் தடுக்கும் ஆற்றலும் எலுமிச்சம் பழத்துக்கு உண்டு.

எவரெஸ்ட் சிகரத்தை முதலில் எட்டிய வீரர்கள் இந்தச் சாற்றைப் பருகியே சாதித்ததாக கூறினர். இதன் முக்கிய சேர்க்கை 'சிட்ரிக் அமிலமும்', 'வைட்டமின் சி' யும் தான்.

இரத்த வாந்தியை இது நிறுத்தும். நுரையீரல், குடல், தொண்டை, ஜலதோஷம், காலரா, உடல் பருமன், நல்ல பசி என அனைத்துத் துறைகளிலும் இது பணியாற்றி சிறந்த மருந்தகமாய் திகழ்கிறது.

இரத்தம் தூய்மைக்கேடு அடைந்து விட்டால் அதை எலுமிச்சம் பழம் குணப்படுத்துகிறது
எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் அமிலம் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. அதனால் தொற்று நோய் கிருமிகளின் தாக்குதலில் இருந்து உடலை கண்போல பாதுகாக்கிறது.

எலுமிச்சம் பழத்தின் சாற்றை தேனில் கலந்து சாப்பிடுவது ஒரு சத்து மிக்க டானிக் ஆகும்.உடல் பருமனை குறைக்க மிகவும் உதவும்.

அளவிற்கு மீறி பேதியானால் ஒரு எலுமிச்சை பழச்சாற்றை அரை டம்ளர் நீரில் கலந்து
கொடுத்தால் உடனடியாக பேதி நின்றுவிடும்.

கடுமையான வேலை பளுவினால் ஏற்படும் களைப்பை போக்க எலுமிச்சை பழத்தினை கடித்து சாற்றை உறிஞ்சி குடித்தால் உடனே களைப்பை போக்கும்.

நெஞ்சினில் கபம் கட்டி இருமலால் கஷ்டப்படுகிறவர்கள் ஒரு எலுமிச்சை பழச்சாறுடன்
ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலையாக தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால்
கபம் வெளியாகி உடல் நன்கு தேறும்.

குறிப்பாக ஸ்கர்வி, வயிற்று வலி, அஜிரணம், மலச் சிக்கல் போன்ற கோளாறுகளை மிகக் குறைந்த காலத்தில் நிவர்த்தி செய்யும்.

மண்ணீரல் வீக்கம் எவ்வளவு கடுமையாக இருந்தாலும் எலுமிச்சைச் சாறு கொண்டு எளிதில் குணப்படுத்தி விட முடியும்.

அன்றாடம் எலுமிச்சை சாற்றை ஒரு குறைந்த பட்ச அளவு எப்படியாவது உபயோகித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சினையே எழுவதில்லை.

பித்தப்பை தொடர்பாக ஏற்படும் பல பிணிகளை குறிப்பாக மஞ்சள் காமாலையை குணமாக்க எலுமிச்சம் சாறு சிறந்து விளங்குகிறது.
ரத்தக் கொதிப்பைத் தடுப்பதில் எலுமிச்சம் பழம் மிக முக்கிய பங்காற்றுகிறது.

மேலும் கெட்ட ரத்தத்தை தூய்மைப்படுத்து வதற்கு எலுமிச்சம் பழத்தை விட மேலான ஒன்று கிடையாது.
பித்தப்பை தொடர்பாக ஏற்படும் பல பிணிகளை குறிப்பாக மஞ்சள் காமாலையை குணமாக்க எலுமிச்சம் சாறு சிறந்து விளங்குகிறது.


எலுமிச்சை சாறுடன் சிறிய இஞ்சி துண்டை நறுக்கிப் போட்டு கொதிக்க வைத்து இறுத்து ஆற வைத்து தொடர்ந்து காலை மாலையாக மூன்று தினங்கள் கொடுத்து வந்தால் இருமல் நின்று விடும்.

தலைவலி இருப்பவர்கள் சூடான கப் காபி டிகாஷனில் அரை எலுமிச்சை பழத்தினை பிழிந்து 3 நாட்கள் குடித்து வந்தால் பிறகு தலைவலியே வராது.

தேள் கொட்டிய இடத்தில் எலுமிச்சை பழத்தினை இரண்டாக பிளந்து ஒரு பாதியை கொட்டிய
இடத்தில் நன்றாகத் தேய்க்க வேண்டும். இவ்வாறு இரண்டு துண்டுகளையும்
தேய்த்துவிட்டால் சிறிது நேரத்திற்கெல்லாம் விஷம் இறங்கி வலி நின்றுவிடும்.

எலுமிச்சம் பழத்தினை அடிக்கடி உபயோகித்து வருபவர்களுக்கு உஷ்ண அதிகாரிப்பால்
உண்டாகும் வயிற்று வலி, பித்தத்தால் ஜீரண உறுப்புகளில் ஏற்படும் குறைபாடுகள்,
உஷ்ணத்தால் ஏற்படும் சிறுநீர் தொந்தரவுகள், மலச்சிக்கல், உஷ்ண இருமல் ஆகிய
தொந்தரவுகள் வராது.

எலுமிச்சம் பழத்தோலை உலர்த்தி தூளாக்கி சம அளவுக்கு பொரித்த படிகாரம் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். உடலில் ஏற்படும் தேமல் என்ற சரும நோய்க்கு இப்பொடியுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து குழைத்து இரவு நேரத்தில் தேகத்தின் மேல்பூசி காலையில் குளித்து வர விரைவில் தேமல் மறையும்.

எலுமிச்சம் பழத்தோலை உலர்த்தி சீயக்காய்யுடன் அரைத்து தலைக்கு தேய்த்துக் குளிக்கலாம். உடலுக்கு குளுமை.

சாறு பிழிந்ததும் தோலை தூற எறியாமல், கை கால்களில் தேய்த்துக் கொண்டால் தோல் மிருதுவாகும்.


இது தவிர நாம் அன்றாடம் சமையலில் சாதம் கலக்கவும், ரசம் செய்யவும் மற்றும் ஊறுகாய் போடவும் பயன் படுத்துகிறோம் இல்லையா?


எனவே இதன் பலன்கள் சொல்லில் அடங்காது.


Posted in Uncategorized
Views 618 Comments 5 Email Blog Entry

« Prev     Main     Next »
Total Comments 5

Comments

  1. Old Comment
    latamurali's Avatar
    wow.krishnanamma dear.i have noted everything.thank u very much for sharing.....thatoo iam seking some tips for headache so let me try and give u feedback
    permalink
    Posted 7th July 2008 at 08:57 AM by latamurali latamurali is offline
  2. Old Comment
    krishnaamma's Avatar
    நன்றி லதா. உங்கள் பதிலுக்கு காத்திருப்பேன்.
    permalink
    Posted 7th July 2008 at 09:07 AM by krishnaamma krishnaamma is offline
  3. Old Comment
    shobanaj's Avatar
    Thank you again for sharing your precious home treatments with Lemon.
    permalink
    Posted 7th July 2008 at 03:33 PM by shobanaj shobanaj is offline
  4. Old Comment
    Gowri66's Avatar
    Madam,

    Good work once again. Very useful, indeed.
    permalink
    Posted 7th July 2008 at 05:14 PM by Gowri66 Gowri66 is offline
  5. Old Comment
    krishnaamma's Avatar
    Thanks gowri and shobana.

    Thanks and happy to note that it is useful.
    permalink
    Posted 8th July 2008 at 08:35 AM by krishnaamma krishnaamma is offline
 

All times are GMT -5. The time now is 09:05 PM.