Slokams& Bhajans for kids
I too am on the lookout for good and easy slokams & Bhajans for kids. I too feel children should learn slokams &Bhajans.
when i was small, my mother made me sit along with her at 6 pm daily &made me sing small bhajans& recite slokas with her.
It gives a peaceful feeling when we pray and recite the very few slokams.

என் தாத்தாவின் நூற்றாண்டு விழா
Posted 31st March 2009 at 07:05 AM by gsaikripa
என் தாத்தாவின் நூற்றாண்டு விழா
என் தாத்தாவின் பெயர் சங்கு சுப்ரமணியம் ஐயர்.அவரை எல்லோரும் செல்லமாகக்
சங்கண்ணா என்று கூறுவார்கள்.
இளமை பருவம்
கார்த்திகை மாதம் ஆயில்யம் நஷத்திரம் 1905 ஆண்டு மீனாக்ஷி,சுந்தரம் தம்பதிகளுக்கு தமிழ்கவிஞன் கம்பன் பிறந்த தேரேழுந்தூரில் பிறந்தார்.
" தாயைப்போல பிள்ளை நூலைப் போல சேலை"என்ற பழமொழிக்கேற்ப அம்மாவுக்கும்
நாம ருசியில் அதிக ஈடுபாடு.அவரின் தாத்தாவும் சிறந்த ராம பக்தர்.
இப்படி ஒரு பக்தி பூர்வமான குடும்பத்தில் பிறந்த சங்கண்ணா பிற்காலத்தில் பகவன்
நாமத்தையே ஜீவனாக கொண்டு வாழ்ந்தார்.
சங்குவின் பள்ளி பருவம்
இந்துப் பள்ளியில் திருவல்லிகேணியில் படித்தார்.பொருளாதாரத்தில் ஏழ்மையான
குடும்பம்.ஆனால் ஹரி நாமத்தில் ருசி உடையவர்.இவருக்கு 3 சகோதரிகள் ஹரி சேவையில் ஈடுப்பட்டவர்கள்.அவருடைய தாயார் சிறுவயதிலே கிருஷ்ண சரணங்களை
அடைந்து விட்டபடியால் உறவினர்கள் வீட்டில் வளர்ந்தார்கள்
அரணா என்று ஓரு கிருஷ்ண பக்தர்.அவருடைய வீடு பக்கத்தில் தான் உள்ளது.
சத்சங்கத்திற்கு குறைவேயில்லை.
விடுதலைஇயக்கத்தில் சங்கண்ணாவின் பங்கு:
இந்தியா அடிமைப்பட்டு கிடந்தது. சுதந்திர போராட்டத்தில் தன்னை
அர்ப்பணித்துக்கொண்டார்." சுதந்திரம் எனது பிறப்புரிமை!அதை அடைந்தே தீருவேன்" ஈடுபட்டு,3 மாத கடுங்காவல் சிறை தண்டனை அனுபவித்தார்.ம.பொ.சி.,காமராசர்
பக்தவத்சலம்,ஓமந்தூர் ரெட்டி,ராஜாஜி,சி.சுப்ரமணியம்.தொண்டர்கள்,உற்ற தோழர்கள்.
அச்சமயத்தில்,சுதந்திர சங்கு என்ற நாளேட்டை நடத்தி வந்தார். அதில் வரும் தலையங்கத்தை படிக்க மக்களும் ஆவலுடன் எதிர் பார்த்தார்கள்..காந்தியின் கருத்துக்களை பறை சாற்றுமாம் இந்த நாளேடு.இதனால் தான் இவருக்கு 'சங்கு சுப்பிரமணியம்' என்ற பெயர் ஏற்பட்டது.
பாரதிதாசன் இந்த பத்திரிக்கையை பார்த்து தான் 'சங்கே முழங்கு " என்ற பிரபல பாடலை எழுதினார்.
பாரதியும்- சங்குவும்:
சிறுவயதில்,பாரதியாரின் அரிய சங்கம் கிடைத்தது.பாரதியார் பொது நிகழ்சசிகளில் ௲ பேர் இருந்தால் விடுதலை பாடல்களை பாடுவார். ௱ பெயர் இருந்தால் சக்தி பாடல்களை பாடுவார்.நெருங்கிய தோழர்கள் இருக்கும் போது கண்ணம்மா பாடல்கள் பாடுவார்.
1947ல் இந்தியா விடுதலை அடைந்தபின் ''தன்னுடைய அரசியல் வாழ்க்கையின் அத்தியாயம் முடிந்துவிட்டது" என்று முடிவு செய்த சங்கு பல உயர் பதவிகள் , பட்டங்கள் தேடி வந்த போதும் எதையும் ஏற்கவில்லை. தன் வாழ்க்கையை பிரிய கண்ணனுக்கே அர்பணித்தார்.
சினிமாவும்- சங்குவும்:
சிறிது காலம் ஜெமினி ஸ்டுடியோவில் கதை இலாகாவில் பணியாற்றினார்.
தன்னுடைய தொழிலையும் கண்ணனின் பணியாகவே செய்ய வாய்ப்பு கிடைத்தது.அந்த திரைப்படம் தான் சக்ரதாரி .பாண்டுரங்க பக்தனாகிய கோரகும்பரின் சரித்திரம். பக்தி ரசம் சொட்ட சொட்ட எடுத்த படம். கதை,பாட்டு,வசனம் அனைத்தும் அவரே செய்தார்.
கதை எழுதும் சமயத்தில், பாண்டுரங்கன் சான்னித்தியம் தினமும் மாலை இரவு நேரங்களில் தெரிவார்களாம்.பகவத் சங்கல்பத்தினால் எடுக்கப்பட்ட இந்தலீலை ஒரு சாட்சி
தமிழ் அஷ்டபதியும் சங்குவும்:
ஜெமினியில் வேலை பார்க்கும் போது இயற்கை காட்சிகளை பார்த்தார்.ஓடை,பலவித மரங்கள், பூங்கா,இவற்றை கண்டவுடன், பிருந்தாவனத்தில் ராதா கிட்டாவை
(கண்ணனின் செல்ல பெயர்) நினைத்து லயம் அடைந்தார்.
சமஸ்கிருதத்தில் உள்ள அஷ்டபதியை தமிழில் மொழி பெயர்த்தார்.
கல்யாண வாழ்க்கை:
சரஸ்வதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.கதர் புடவை தான் கூரைப்
புடவை.சிறை சென்ற போதும்,மற்ற சமயங்களிலும்,கணவனுக்கு உறுதுணையாக
தன்னை முழுவதும் அர்ப்பணித்துகொண்டார்.
சங்கன்னாவுக்கு பெரிய குடும்பம்.௮ பெண் குழந்தைகள் அஷ்டசகிகள் என்று பெயர் வைக்கவேண்டும்.ராதையின் தோழியின் தான் நீங்கள் என்று வாய் மணக்க கூறவேண்டும்.அவருக்கு 5 பெண்கள்,3 பிள்ளைகள்.குழந்தைகளிடம் அலாதி பிரியம்.
பிரேமி அண்ணாவின் அலங்கார கீர்த்தனைகள்,திவ்ய நாம கீர்த்தனைகள்,தமிழ் அஷ்டபதி தன் கைப்பட எழுதி அனைவருக்கும் வழங்கி உள்ளார்.குழந்தைகள்
எல்லோரும் சேர்ந்து இருக்கும் நேரம் இத்தனை கீர்த்தனைகளும்சொல்லி தருவார்.
இவ்விழா,சமீபத்தில் தான் கொண்டாடபட்டது.உங்களிடம் பகிர்ந்துகொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்..
.

Total Comments 9
Comments
-
Posted 1st April 2009 at 04:25 PM by Gowri66
-
Posted 2nd April 2009 at 01:34 AM by gsaikripa
-
Posted 2nd May 2009 at 09:13 AM by Sriniketan
-
Posted 6th May 2009 at 07:43 AM by gsaikripa