1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பூஜ்ஜிய வேட்டை !..மினி தொடர்.......by Krishnaamma :)

Discussion in 'Stories in Regional Languages' started by krishnaamma, Oct 6, 2015.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ரமேஷ் க்கு இன்றுடன் 27 வயதாகிறது, அவனுடைய அப்பாவும் அம்மாவும் அவனுக்கு 1 வருடமாக பெண் பர்த்துவருகிரர்கள்..ஒன்றும் திருப்திகரமாக இல்லை. ஒருவருக்கு பிடித்தால் ஒருவருக்கு பிடிக்கவில்லை என்பது போல தட்டிக்கொண்டே போயிற்று.

    காலில் விழுந்து வணங்கிய அவனை, "இந்த வருடமாவது கல்யாணம் ஆகணும், வரும் தீபாவளி தலை தீபாவளியாக இருக்கணும்" என்று ஆசிர்வதித்தார்கள் .

    அவனும் சிரித்துக்கொண்டே, "கல்யாணம் ஆகிறதோ இல்லையோ, நான் வெளிநாடு போகணும் 1வருடத்திற்கு" என்றான்.

    அவர்களுக்கு இந்த செய்தி கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது, " என்னடா, இப்படி திடீரென்று?...உள்ளூர் வேலை என்று தானே சொன்னாய்? " என்றார்கள்.

    " ஆமாம் அம்ம்மா, ஆனால் ஆபீஸ் இல் அனுப்புகிறார்கள்.போகத்தான் வேண்டும்.அங்கேயே தங்கி விட மாட்டேன், நீ பயப்படாதே" என்றான்.

    உமா சுரேஷ் தம்பதிகளுக்கு, ரமேஷ் ஒரே மகன், இவர்கள் ஒரு மிடில் கிளாஸ் குடும்பம் தான். ஏதோ முடிந்தவரை மகனை படிக்க வைத்தார்கள், அதற்கு ஏற்ற வேலையும் கிடைத்து விட்டது. இருப்பதைக்கொண்டு சந்தோஷமாய் வாழும் குடும்பம் அவர்களுடையது. மகனை பிரிய கஷ்டமாக இருந்தது அவர்களுக்கு, என்றாலும் உத்தியோக நிமித்தம் போகவேண்டும் என்றதால் தடை சொல்ல முடியவில்லை.

    அவன் கிளம்பிப்போய் 2 மாதங்கள் கூட ஆகி இருக்காது, அவன் ஒருமுறை hangout இல் பேசும்போது, தான் ஒரு பெண்ணை விரும்புவதாக சொன்னான்....இவர்களுக்கு தூக்கி வாரி போட்டது............."என்னடா, யார்? என்ன? விவரம் சொல்லு, வெள்ளைக்காரியா?" என்றல்லாம் பதறினாள் அம்மா.

    "இல்லை மா, face book இல் பார்த்து பழக்கம், நம் நாட்டில் தான் இருக்கிறாள் " என்றான்.

    thodarum................
     
    sindmani, Caide, jskls and 1 other person like this.
    Loading...

  2. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Sirukathai in thalaipu nandraga erukiradhu. Thalaipai polave kathai arambamum nandraga erukiradhu ma.

    Vazhthukal ma. Avalaga kathu kondu erukiren adutha paguthikaga.
     
    1 person likes this.
  3. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    மிக்க நன்றி ப்ரியா....இதோ போடுகிறேன் :)
     
    2 people like this.
  4. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    பெற்றவர்களுக்கு புரியவில்லை , இப்படியும் காதலிக்க, மணம் முடிக்க முடியுமா என்று. ஆனால் அவன் உறுதியாக சொன்னான், " அவளைத்தான் மணப்பெண்" என்று. மேலும் சொன்னான், தான் இன்னும் 1 மாதத்தில் இந்தியா வர இருப்பதாகவும் அப்போது நிச்சயம் செய்து கொள்ளலாம் என்றும் சொன்னான். அந்த பெண் உஷாவின் புகைப்படத்தையும் அனுப்பி வைத்தான்.

    பெண் பார்க்க ரொம்ப நாகரீகமாக தெரிந்தாள்.......இவர்களை கவலை ஆட்கொண்டது , இவள் இந்த வீட்டுக்கு சரிப்படுவாளா ? என்று. என்றாலும், ரமேஷ் நேரில் வரட்டும் பேசிக்கலாம் என்று இருப்பதை தவிர வேறு வழி இல்லை அவர்களுக்கு.

    ஆச்சு ரமேஷ் வந்தாச்சு. இவர்களும் என்னடா இது என்று 'பிலு பிலு ' வேண்டு பிடித்துக்கொண்டர்கள். ...ஆயிரம் கேள்விகள் கேட்டார்கள் அவனை.............."ஒரு வருடம் என்றாய் , 6 மாதம் கூட ஆகலை வந்து விட்டாய், ஆனால் மறுபடி போகணும் என்கிறாய் .........என்னடா இது ஒன்றும் புரியலையே? " என்றால் அம்மா.

    "இல்லேம்மா இது ஆபீஸ் விஷயம்...............சொன்னால் உனக்கு புரியாது..............இன்று உஷா வீட்டுக்கு போகிறோம்; பேசி நிச்சயம் பண்ணறோம்.................." என்றான். இவர்களும் போய்த்தான் பார்ப்போமே என்று ஒப்புக்கொண்டார்கள்.

    இவர்களுக்கும் உஷாவை பிடித்திருந்தது ......என்றாலும் கொஞ்சம் நகர்புறத்தில் வளர்ந்த பெண் போல தோன்றியது. அவளின் அப்பா அம்மாவும் நல்லபடி பேசினார்கள். அவர்களுக்கும் ரமேஷை பிடித்துவிட்டது. எனவே, மேற்கொண்டு ஆகவேண்டியதை பேசலாம் என்றார்கள்.

    இவர்களும் முதலில் நிச்சயதார்த்தம் வைத்துக்கொள்ளலாம், பிறகு ரமேஷ் வந்ததும் கல்யாணம் வைக்கலாம் என்றார்கள். அதற்கு அவர்கள், " நீங்கள் சொல்வது சரி, சத்திரம் கிடப்பது கடினம், எப்படியும் ஒரு 6 மாதம் அல்லது 8 மாதம் கழித்து என்றால், நல்ல சத்திரமாய் பார்க்கலாம், எனக்கு இருப்பதோ ஒரே பெண், நல்லா கல்யாணம் செய்யவேண்டும் என்று நினைக்கிறேன் " என்றார் பெண்ணின் அப்பா தனசேகரன்.

    மேலும், " இவள் இப்போது டிகிரி கடைசி வருடம் படிக்கிறாள், அதுவும் முடிந்து கல்யாணம் என்றால், ரொம்ப நல்லது " என்றார். அதற்குள் ரமேஷ் குறுக்கிட்டு " எல்லாம் சரி , ஆனால் நிச்சயதர்த்தத்க்கு பதில், register marriage செய்து கொண்டால்....எனக்கு அந்த பேப்பர்களை கொண்டு போய் இவளுக்கான விசாவை ரெடி செய்ய சௌகர்யமாய் இருக்கும் " என்றான்.

    பெண்ணை பெற்றவர்களுக்கு வாயெல்லாம் பல். " ரொம்ப சந்தோசம் மாப்பிள்ளை.......அப்படி இனி கூப்பிடலாம் தானே? " என்றார்கள் கோரஸ்ஸாக .

    உமாவிற்கும் சுரேஷுக்கும் ஒன்றும் புரியவில்லை , எதற்கு இத்தனை அவசரம்? எதற்கு விசா? அப்போ ரமேஷ் அங்கேயே தங்கிடப் போறனா ?

    இப்படி பல கேள்விகள், என்றாலும் அங்கு எதுவுமே கேட்க முடியவில்லை அவர்களால்.

    " இவனும் , ஆமாம் மாமா, நானும் உஷாவும் நெடில் பேசி முடிவு செய்தது தானே இது"...என்று குண்டை தூக்கி போட்டான்.

    பெற்றவர்களுக்கு பேச வாய் எழவே இல்லை. ரொம்பவும் கஷ்டப்பட்டு முகத்தை சிரிப்பது போல வைத்துக்கொண்டார்கள்.

    தொடரும்...............
     
    sindmani, Caide and jskls like this.
  5. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Ethu enna ma periya kundai potutingale. Romba arvamaga adutha paguthikaga kathu konduerukiren.
     
  6. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female

    Thank you dear :).......I am putting the next part !
     
  7. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    மேலும் அவர்கள் பேசிய வண்ணமே இருந்தனர், இவர்கள் இருவரின் நினைப்பே அவர்களுக்கு இல்லை போலிருந்தது. மறுநாளே register marriage என்றனர். ஒரு போட்டோ இல்லை, ஒரு உறவு இல்லை இவர்கள் முன்று பேர் அவர்கள் 3 பேர் . பக்கத்துக்கு ஒருவராக நண்பர்கள் இருவர், அவ்வளவுதான். எளிமையாக கல்யாணம் முடிந்தது. பாவம் , உமாவும் சுரேஷும் மௌனியாக நடப்பவைகளுக்கு சாக்ஷி கோபாலனாக இருந்தார்கள்.

    மிகவும் மன வருத்தத்தில் இருந்தார்கள் . இவர்களுடன் நின்று பேசக் கூட நேரம் இல்லை ரமேஷுக்கு. ஏதோ மாறி மாறி போன் இல் பேசிய வண்ணம் இருந்தான். உஷாவுடன் வெளியே போய் வந்தான். சரியாக சாப்பிடவில்லை, வெளியே சாப்பிட்டான் அவளுடன். இவர்களிடம் பேசுவதையே அவன் தவிர்ப்பதாகவே பட்டது. எனவே இவர்களும் மௌனம் காத்தார்கள்.

    விஷயம் கைமீறிப் போய்விட்டது , இவன் இப்படி மாறுவான் என்று கனவிலும் நினைத்து பார்க்கவில்லை. என்றாலும் என்ன செய்வது?........நாம் வாங்கி வந்த வரம் என்று மனம் நொந்தார்கள். இந்த அமர்க்களம் எல்லாம் ஒரு பத்தே நாள் தான், ரமேஷ் கிளம்பிவிட்டான். உஷா பரீக்ஷை முடிந்ததும், திருமணத்துக்கு நாள் குறித்து இருப்பதாக தனசேகரன் சொன்னார்.

    தானும் அப்போது வருவதாக சொல்லிவிட்டு கிளம்பினான் ரமேஷ். கிளம்பும் முன் பெற்றவர்களை வணகியவன், " அம்மா அப்பா எதற்கும் கலங்காதிர்கள், நாம் யாருக்கும் எந்த கேடுதலும் செய்யலை நமக்கு நல்லதுதான் நடக்கும் என்று நம்புங்கள்; நான் எப்போதும் உங்கள் மகன் தான், உங்கள் மகனை நம்புங்கள்..... இதற்கு மேலே என்னால் ஏதும் சொல்ல முடியாது " என்று சொல்லி இருவரின் கைகளை படித்து அழுத்தி விட்டு சென்றான்.

    இவர்களுக்கு அந்த வார்த்தைகள் ஆறுதலை த்தந்தாலும் சுத்தமாய் ஏதும் புரியலை. இவன் என் இப்படி சொன்னான்? என்று குழம்பினார்கள். ஒருமாதம் ஆகியும் இவர்களுக்குள் என்ன பேசிக்கொண்டாலும் அவன் சொல்லிப்போனதின் அர்த்தம் விளங்கலை இவர்களுக்கு.

    அப்போது தான் ஒரு அசுப செய்தியுடன் ஓடிவந்தார் தனசேகரன். "சம்பந்தி, நாம் மோசம் போய்விட்டோம்" என்று அலறினார். மாப்பிள்ளை ரமேஷ் ஒரு கார் ஆக்சிடெண்டில் இறந்துவிட்டதாக எனக்கு அவர்கள் ஆபீஸ் லிருந்து போன் வந்தது. " என்றார். அதைக்கேட்டதும், சுரேஷுக்கு தலை சுற்றவே அப்படியே அமர்ந்து விட்டார். உமாவும் "ஐயோ! " என்று அலறினாள் .

    தன்னை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்ட சுரேஷ், " தகவல் எங்களுக்கு வராமல் உங்களுக்கு எப்படி வந்தது? " என்றார்.....'சரியாக விசாரித்தீர்களா? " என்றார். இதற்குள் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களும் வந்துவிட்டனர். அதற்கு தனசேகரன், " என்ன சார் , நீங்க கேட்கறீங்க? ... நான் எப்படி சரியாக விசாரிக்காமல் சொல்வேன்?.......மேலும் ஒரு கணவன் இறந்தால் முதலில் மனைவிக்குத்தானே விவரம் சொல்வார்கள்?............அதனால் தான் முதலில் எங்களுக்கு அவர்கள் ஆபீஸ் லிருந்து தகவல் வந்தது" என்றாரே பார்க்கலாம்.

    தொடரும்...............
     
    Caide and jskls like this.
  8. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Kathai nalla eduthutu poringa ma. Ana pavama eruku eppadi oru petravargalai paratha.... Ethu periya thirupam.
     
  9. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    சுற்றி இருந்தவர்கள் இது என்ன புதுக்கதை, இந்த பையனுக்கு எப்போ கல்யாணம் ஆனது என்று , வம்பு கேட்பதற்கு ஆர்வமானார்கள். நடப்பதை கவனித்தார்கள். சிலர் தனசேகரனிடமும், சிலர் சுரேஷிடமும் என்ன ஆச்சு என்று கேள்விகளால் துளைக்க ஆரம்பித்தார்கள். தனசேகர் , அழுகையிநூடே விலாவரியாக எல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார்.

    சுரேஷால் பேசமுடியவில்லை, நடப்பது நிஜமா என்று கூட உணரமுடியலை. ரமேஷுக்கு என்ன ஆச்சு என்று விவரமாய் தெரியலை. தானே அவனுடைய ஆபீஸ் இல் விசாரிப்பது என்று முடிவு செய்து போன் செய்தார். அதைப்பார்த்த தனசேகர், " என்ன சார், நம்பர் தப்பா போடறீங்க , மாப்பிளையோட கம்பெனி நம்பர் ஐ போடுங்க" என்றார்.

    அதைக்கேட்டதும் துணுக்குற்றார் சுரேஷ். ' என்ன இந்த எண்ணே அவனுடையது இல்லையா? நேற்று கூட பேசினோமே'... ' இதில் ஏதோ குழப்பம் இருக்கு ....' என்று எண்ணியவர் , மகன் சொல்லிப்போனதையும் அவன் வேலை செய்த இடத்தையும் நினைக்கையில் அவருக்கு ஏதோ புரிவது போல இருந்தது. மனைவிக்கும் கண்ஜாடை காட்டி பேசாமல் இருக்குமாறு சொன்னார்.

    இது எதுவும் கவனிக்காத தனசேகர் , " பாருங்க சார், மகனின் போன் எண் கூட சரியாக குறித்துக்கொள்ளவில்லை...........அதே என்னைப் பாருங்கள் , அவர் எனக்கு மாப்பிளை என்று ஆனதுமே, அவர் இருக்கும் இடம், ஆபீஸ் அட்ரஸ், போன் எண்கள், அங்குள்ள வீடு வாசல் விவரம், சொத்துபத்து விவரம் என்று எல்லாமே கேட்டுக்கொண்டேன். என்ன இருந்தாலும் பெண்ணை கொடுக்கும் போது விசாரிக்கணுமே "............... என்றார்.

    உமா சுரேஷ் தம்பதிகள் ரொம்ப குழம்பினார்கள் அவனுக்கு சொத்துபத்து ஏது, அதுவும் அமெரிக்காவில்?....என்ன சொல்கிறார் இவர்? என்று ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். ஆனால் மௌனம் காத்தார்கள்.

    " அதே போல இப்போ அவர் இறந்துட்டார் என்றதுமே, என் பெண்ணுக்கு அவர் கம்பெனி இல் வேலை வேண்டும் என்று கண்டிப்பாக சொல்லிவிட்டேன், settlement எல்லாம் அவர பேருக்கு வந்துடணும் என்றும் சொலிட்டேன்.......சட்டம் அப்படித்தானே இருக்கு " என்றார் பெருமையாக.

    எந்த நேரத்தில் என்ன பேசுகிறார் இவர் என்று எல்லோரும் முகம் சுளித்தார்கள். அதே நேரம் " கண்டிப்பாக settlement உஷாக்கு மட்டும் இல்லை உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் சேர்த்துத்தான்" என்கிற குரல் வந்தது. எல்லோரும் குரல் வந்த திசையை நோக்கி பார்த்தார்கள் அங்கு ............

    தொடரும்...............
     
    Caide, uma1966 and jskls like this.
  10. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female

    Thank you ma :)
     

Share This Page