1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பணம் மட்டும் போதுமா? ..by kirushnaamma :)

Discussion in 'Stories in Regional Languages' started by krishnaamma, Mar 27, 2015.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    சமையல் குறிப்புகள் போதும் கொஞ்சம் கதை எழுதலாம் என்று எழுத ஆரம்பித்திருக்கேன்.எப்போதும் போல உங்களின் ஆதரவு வேண்டும் எனக்கு :)


    அன்புடன் ,
    கிருஷ்ணாம்மா :)



    அன்று இரவு சிவராமனுக்கு உறக்கம் பிடிக்கவே இல்லை....பொழுது விடிந்தால் அவருடைய பேரன், அமெரிக்காவிலிருந்து 4 வருடங்கள் கழித்து வருகிறான்.அது மட்டும் அல்ல, அவன் இவர்களின் குல தெய்வமான, செந்தில் ஆண்டவனுக்கு 'தங்க வேல்' சார்த்தப்போகிறான்.............அது தான் இவருக்கு இப்போது அவன் வருகையை விட, ரொம்ப சந்தோஷமான விஷையமாக இருந்தது.

    அவர் எண்ணங்கள் பின்னோக்கி ஓடின. அன்பான மனைவியும், 4 மகன்களும் 2 மகள்களும். குடும்பம் பெரியதானாலும் அன்பான குடும்பம். கஷ்டப்பட்டுத்தான் ஒவ்வொருவரையும் ஆளாக்கினார். பசங்களும் நன்கு படித்தனர். அதில் மூவர் நல்ல வேலை இல் அமர்ந்தனர். பெண்களையும் ஓரளவுக்கு படிக்க வைத்து கல்யாணம் செய்து கொடுத்துவிட்டார்.

    ஆச்சு இவரின் கடைசி பையனும் நல்ல வேலை இல் அமர்ந்து விட்டால், இவரின் பொறுப்பு முடிந்து விடும்; பசங்களை பொருத்தவரை தான்.ஆனால், நீண்ட நாளாக அவர் மனதில் இருந்த ஒரு வேண்டுதல்?.........அந்த வேண்டுதலையும் முடித்தால் தான் தனக்கு நிம்மதி பிறக்கும் என்று நனைத்தார்.

    அதாவது, அவர் ரொம்ப கஷ்டப்பட்ட காலத்தில் தன் குல தெய்வத்திடம் வேண்டி இருந்தார், தான் தன்னுடைய வாரிசுகள் எல்லாருக்கும் ஒரு நல்ல வழி செய்து முடித்துவிட்டால், அந்த செந்தில் ஆண்டவனுக்கு வெள்ளி இல் வேல் செய்து சார்த்துவதாக. அதை செய்வது பற்றி இனி தான் யோசிக்கணும்.

    அன்று இரவே , தன் மகன்களிடம் இது பற்றி பேசினார். எல்லோரும் சந்தோஷத்துடன் சம்மதித்தனர். கோவிலில் போய் விசாரிக்கை இல் கிட்டத்தட்ட 4 அடி 2 அங்குலம் அளவில் வேல் வேண்டி இருந்தது. 1 3/4 கிலோ வெள்ளி தேவையாக இருந்தது. அதை செய்ய எல்லோரும் அவர்களால் முடிந்த அளவு பணம் ஏற்பாடு செய்தனர்.மிதியை கொஞ்சம் கடன்வாங்கி புரட்டினார்.

    ஒரு நல்ல நாளில் , அற்புதமான வெள்ளி வேல் அந்த ஆண்டவனுக்கு சாற்றப்பட்டது. சிவராமனுக்கு மகிழ்ச்சி க்கு அளவே இல்லை . இத்தனை அருமையான மனம் படைத்த குடும்பம் தனக்கு வைத்ததற்கு கடவுளுக்கு மீண்டும் மீண்டும் நன்றி சொன்னார். இத்தனை அருமையான குடும்பத்துக்கு இந்த பணக்கஷ்டம் மட்டும் இல்லாதிருந்தால் இன்னும் எவ்வளவோ செய்யலாமே என்கிற சிறு அங்கலாய்ப்பும் அவரிடம் இருந்தது.

    ஒருவருக்கு எல்லாமே வாய்த்து விட்டால், அவன் அப்புறம் கடவுளை நினைக்கவே மாட்டான் என்று அந்த கடவுளுக்கே பயம் போல இருக்கு. அது தான் எல்லோருக்கும் ஏதாவது ஒரு குறை வைத்து விடுகிறான் என்று எண்ணினார். இது நடந்து பலவருடங்கள் ஆகிவிட்டது, இவரின் பேரன் இப்போ அமெரிக்காவில் நிரம்ப சம்பாதிக்கிறான், அவனும் இவரைப்போலவே, குல தெய்வத்திடம் வேண்டிக்கொண்டான்...'தனக்கு அமேரிக்காவில் வேலை கிடைத்தால், 'தங்கத்தில் வேல் ' செய்து சாற்றுவதாக.

    இதோ வேலை கிடைத்து அங்கேயே செட்டில் உம் ஆகிவிட்டான். இப்போது அந்த வேண்டுதலை நிறை வேற்றத்தான் வருகிறான். நேற்றே சென்னை வந்திருப்பான், அங்கு ஆர்டர் கொடுத்துள்ள வேலை வாங்கிக்கொண்டு நாளை காலை இங்கு வருகிறான். மற்ற ஏற்பாடுகளை இங்கு அவன் அப்பா, அது தான் சிவராமனின் பையன் செய்துவிட்டார்.

    வயதானதால், சிவராமன் ரொம்பவும் தளந்து போய்விட்டார், கண் பார்வையும் கொஞ்சம் குறைவாகவே இருக்கு. என்றாலும், பேரன் வாங்கி வரும் வேலை பார்க்க ரொம்ப ஆவலாக இருந்தார். தானும் தன் குடும்பமும் எவ்வளவோ கஷ்டப்பட்டுத்தான் அந்த வெள்ளி வேலை சார்த்தினோம், ஆனால் இன்று... அன்று அவர் நினைத்த படியே நிரம்ப பணமும் கொடுத்திருக்கான் அந்த செந்தில் ஆண்டவன். அதனால் தான் பேரன் தங்க வேல் சாற்றுகிறான் என்று பூரித்துப் போயிருந்தார்.

    இடைவிடாமல் அந்த செந்தில் ஆண்டவன் நாமத்தை சொல்லியபடி அந்த இரவைக் கழித்தார். ஆச்சு பேரன் வந்தாச்சு. 4 வருடங்கள் கழித்து வந்தவனை உறவுகள் சூழ்ந்து கொண்டனர். நல்ல நிறமாய் இருந்தான். பார்க்கவே ரொம்ப சந்தோஷமாய் இருந்தது அனைவருக்கும். தாத்தாவுக்கும் ரொம்ப சந்தோசம் தான் என்றாலும் அவருக்கு 'தங்க வேலை' பார்க்கவேண்டும் என்பதே குறியாக இருந்தது.

    அவன் வேறு போனில் சொல்லி இருந்தான், வேலில் விபூதி பட்டைக்காக வெள்ளை கற்களும் நடுவில் ஒரு மாணிக்க கல்லும் பதித்து இருப்பதாக. எனவே, பள பளக்கும் அந்த வேலைக் காட்டு, பெட்டியை திற முதலில் என்றார் பேரனிடம்.

    அவன் "அதுக்கு எதுக்கு தாத்தா பெட்டியை திறக்கணும்? ...இதோ இருக்கே?" என்றவாறே கோட் பாக்கெட்டில் கைவிட்டான்.

    இவருக்கு 'என்ன இவன் ? வேலைக் கேட்டால் , பாக்கெட்டில் கை விடுகிறான்' என்று இருந்தது.

    அவன் தன் கோட் பாக்கெட்டில் இருந்து ஒரு சின்னஞ்சிறிய வெல்வெட் டப்பாவை எடுத்தான். அதில் அவன்
    2 கிராமுக்கு செய்திருந்த தங்க வேல் சிவராமனை பார்த்து சிரித்தது.

    அவருக்கு தன் கண்களையே நம்ப முடியலை...........'இத்துனுண்ண்டா?'.............மனம் அடித்துக்கொண்டது...............'அடப்பாவி, எத்தனை அள்ளி கொடுத்த என் தெய்வத்துக்கு '........'ஒரு பவுனில் செய்யக்கூட மனம் இல்லையே உனக்கு'.............என்று அவர் மனம் அழுதது. பாவம், ரொம்ப எதிர்பார்த்துவிட்டார் தன் பேரனிடமிருந்து; இப்போ, ஏதும் சொல்லமுடியாமல் வாயடைத்து நின்றார்.

    அவன் இவரை கவனிக்காமலேயே, "எத்தனை அருமையான வேலைப்பாடு பாரு தாத்தா" என்று மேலே ஏதோ சொல்லிக்கொண்டே போனான்.

    "ஆண்டவனுக்கு மட்டும் அல்ல , யாருக்காவது ஏதாவது செய்யவேண்டும் என்றால், நிறைய பணம் மட்டும் போறாது கொஞ்சம் மனமும் வேண்டும்" என்று அவருக்கு இந்த வயதில் தான் புரிந்தது.

    அன்று கோவிலில், குடும்பத்தாரிடம் இருந்த அந்த அதிர்ச்சி வெளிப்படையாகத் தெரிந்தது. அர்ச்கரர் முதல் கோவில் பக்தர்கள் வரை எல்லோரின் பார்வை இலும் 'அடப்பாவி' என்கிறது தெரிந்தது என்றாலும் என்ன சொல்லமுடியும்? இதுவும் வேல் தானே? ......ஒரு பெருமூச்சுடன் அந்த செந்தில் ஆண்டவனை தனக்கு எப்போதும் தாராள மனம் வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.

    கிருஷ்ணாம்மா [​IMG]
     
    Barbiebala, Deepu04, Caide and 5 others like this.
    Loading...

  2. ammusatheesh

    ammusatheesh Gold IL'ite

    Messages:
    663
    Likes Received:
    410
    Trophy Points:
    138
    Gender:
    Female
    Nice Krishnamma...and true fact abt today's generation...
     
  3. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female

    நன்றி அம்மு......ஆமாம் நீங்க சொல்வது ரொம்ப சரி :)
     
    1 person likes this.
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நல்ல கதை .யார் யாரிடம் என்ன வாங்க வேண்டுமோ அதை தான் ஆண்டவன் வாங்கி கொள்வார்.இதுவும் அவன் செயலே என்று நினைத்து கொள்ள வேண்டியது தான் .நான் உங்கள் பெயர் கேள்விபட்டிருக்கிறேன்.சமையலில் மட்டும் அல்ல கதை சமைப்பதிலும் வித்தகி
     
    sindmani likes this.
  5. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    நன்றி 'பெரியம்மா' ( உங்கள் பேர் என்ன? :) ) நீங்கள் சொல்வதும் வாஸ்த்தவம் தான், "எல்லாம் அவன் செயலே" என்று கொள்ள வேண்டியது தான் :)
    .
    .
    ஒருமுறை என்னுடைய Sub -Forum போய் பாருங்களேன் :)
     
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    கிருஷ்ணம்மா என் பெயர் ருக்மணி .உங்கள் sub-Forum பார்க்கிறேன்.
     
  7. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஆஹா! ரொம்ப அழகான பேர் உங்களுடையது :) ....ம்.........பொறுமையாக பாருங்கோ :)
     
  8. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    நிறைய பேர் படித்து இருக்கீங்க, ஆனால் எதுவுமே கமெண்ட் போடலையே என்று எனக்கு வருத்தமாய் இருக்கு......பிடித்திருக்கு இல்லை என்று ஒரு வரி எழுதலாம் தானே ?.............பின்னூட்டம் ப்ளீஸ் :)


    அன்புடன்,
    கிருஷ்ணாம்மா :)
     
  9. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Manam erunthal entha generationum seiyalam. Kathai pramadam.

    Just a personal note. My husband always keeps money for god each and every time he gets money in business. So enna poruthavarai manam than thevaiye thavira ethil entha generation aga erunthal enna. Sorry if i have said something wrong.
     
    sindmani likes this.
  10. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ம்ம்... இதில் வருத்தப்பட என்ன இருக்கு ப்ரியா :)..அந்தக்காலத்தில் மட்டும் எல்லோருமே தாராள மனம் படைத்தவர்களாக இருந்தார்களா என்ன ?.......அல்லது இந்தக்காலத்து பசங்க எல்லோரும் கஞ்சர்களா? தாரள சிந்தனைக்கும், குணத்துக்கும் வயதுக்கும் சம்பந்தமே இல்லை.............:)
    .
    .
    பொதுவாக பெரியவர்கள் என்ன சொல்வார்கள்.." அந்தக்காலத்தில் , எவ்வளவோ கஷ்டங்களுக்கு இடையே நாங்க என்னவெல்லாம் செய்தோம், இதுகள் இத்தனை வசதிகளை வைத்துக்கொண்டு செய்வதற்கு மூக்கல் அழுகிறதே " என்று தானே?.............அதத்தான் கதை இல் சொன்னேன் :)
    .
    .
    எங்க அம்மா அந்த காலத்தில் நவராத்திரிக்காக எல்லா மாதமும் பணம் எடுத்து உண்டியலில் போடுவா, ஒவ்வொருநாளும் ரவிக்கை துணி வைத்து லலிதா சகஸ்ரநாமம் படித்து , குத்து விளக்கு பூஜை செய்ய :) ...அவர்கள் கஷ்டப்பட்ட போது கூட பூஜையை விட்டுக்கொடுக்கலை :)......
    .
    .
    .
    நீங்கள் சொல்வது போல, நாங்கள் எப்பவும் சம்பளம் வந்ததும் முதல் செய்வது 'பெருமாளுக்கு பணம் ' எடுத்து வைப்பது தான்........:)


    நன்றி ப்ரியா :) ......இன்று நவராத்திரி ஆரம்பம், ஏற்க்கனவே அம்மாவை நினைத்துக்கொண்டிருந்தேன் , இப்போ உங்கள் பதிவால் அம்மா நினைவை பகிர்ந்தேன் :)
     
    sindmani and sreeram like this.

Share This Page