1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தன் வினை தன்னை சுடும்போது ?....by Krishnaamma :)

Discussion in 'Stories in Regional Languages' started by krishnaamma, Jun 19, 2015.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,111
    Likes Received:
    4,379
    Trophy Points:
    490
    Gender:
    Female
    தன் வினை தன்னை சுடும்போது ?

    புது டெல்லி கல்லூரி வளாகம், கொத்து கொத்தாக மாணவிகள் அவர்களின் பேச்சு சத்தமே எங்கும் நிறைந்து இருந்தது. அவர்களில் இந்த ஐந்து பேரும் - சுதா, கல்பனா, ஷில்பி, மானசி மற்றும் தான்யா - பள்ளிக் கூடத் திலிருந்தே ஒன்றாக படித்து வருபவர்கள். ஒரே காலேஜில் சேர விருப்பம் கொண்டு இங்கும் சேர்ந்து இருக்கிறார்கள். ஆச்சு இது கடைசி வருடம்.....இனி கல்யாணம் என்று ஆனால் எப்படி இருப்போமோ என்று பேசிக்கொண்டிருந்தார்கள்.

    அவர்களில் இருவருக்கு திருமண நிச்சய தார்த்தம் ஆகி இருந்தது. அதனால் அவர்களுக்கு பார்ட்டி ஒன்று தர மற்ற மூவரும் விரும்பினார்கள்.

    " ஏய், நான் சொல்வது தான் சரி பா, கல்யாணம் ஆகப்போகும், தான்யாக்கும் கல்பனாகும் நாம்ப மூணு பேரும் 'பாச்சிலர் பார்டி' தரலாம்" என்றாள் ஷில்பி.

    " அய்யயோ...........'பாச்சிலர் பார்டி' .......நான் வரலைப்பா " என்று அலறினாள் சுதா.

    " இந்த அத்தைபாட்டி எப்பவுமே இப்படித்தான்.....எப்பத்தான் நீ வளருவியோ" என்று அலுத்துக்கொண்டாள் மானசி...தொடர்ந்து, " நீ பிளான் ஐ சொல்லு ஷில்பி." என்றாள்.

    அந்த க்ருப்பில் சுதாவை எல்லோரும் 'அத்தைபாட்டி' என்று கிண்டல் அடிப்பது வழக்கம், ஏன் என்றால் அவள் கொஞ்சம் பழமை வாதி, இது செய்யலாம் இது கூடாது என்று சொல்பவள்.

    ஷில்பி தொடர்ந்தாள்" இன்று நாம் வழக்கம் போல குருப் study என்று வீட்டில் சொல்லிவிடலாம் . அவர்களும் ஒன்றும் கேட்கமாட்டார்கள்.ஆனால் நாம் அப்படி சொல்லிவிட்டு பப்க்கு போகம்லாமா?" என்றாள்.

    "சுத்தம்"............"நான் கண்டிப்பாக வரலை , சொல்வதை கேளுங்கள்............நீங்களும் போகவேண்டாம்....இந்த விபரித விளையாட்டு வேண்டாம்.....கல்யாணம் வேற பிக்ஸ் ஆகிவிட்டது ..நேரத்துக்கு "................என்று மேலும் சொல்லும் முன்.....

    " கல்யாணம் ஆகிட்டா அங்கெல்லாம் போக சான்சே கிடைக்காதேடி, அது தான் ஒரே ஒரு முறை போய் என்ன தான் இருக்கு என்று பார்த்து விட்டு வந்துடலாமே சுதா." என்று இழுத்தாள்.....தான்யா. ஆசை இல் அவள் கண்கள் மின்னின.

    கல்பனாவும் தலையை ஆட்டி அவளை ஆமோதித்தாள்.

    " ரொம்ப நேரம் இல்லடி, 5 மணிக்கு போவோம், ஒரு 7 -7 1/2 க்கு கிளம்பிடலாம்.....குடிக்கவெல்லாம் வேண்டாம், சும்மா பார்த்துவிட்டு வந்துடலாம்"

    " இல்லடி எனக்கு மனசு ஒப்பலை, ஏன் வாயை கிளறாதீங்க , அப்புறம் நான் ஏதாவது சொல்ல , நீங்க என்ன . 'அத்தைபாட்டி' என்று கிண்டலடிக்க, தேவையா எனக்கு?...............என்றாள் சுதா.

    "ஒண்ணும் ஆகாதுப்பா, வா, நாங்க எல்லோரும் இருக்கோம் தானே ? " என்றார்கள் கோரஸாக.

    " நீங்க என்ன வேணாலும் சொல்லுங்க, நான் வரலை." என்று முரண்டு பிடித்தாள் சுதா.

    " வேண்டுமானால் எப்போவும் போல ஹோட்டல் போகலாம், இல்ல யார் வீட்டிலாவது பார்ட்டி வெச்சுக்கலாம்" என்றால் சுதா.

    " எப்பப்பாரு அதேவா, போர் டி"......" ஒரு changukku வா என்றால் ரொம்பத்தான் அலட்டரையே" ...என்றாள் ஷில்பி.

    தொடரும்..................
     
    Loading...

  2. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,111
    Likes Received:
    4,379
    Trophy Points:
    490
    Gender:
    Female
    " இல்லங்கடி, .....அங்கு போவது கூடாது, காலம் கெட்டு கிடக்கு, தினமும் பேப்பர் பார்க்கரீங்க தானே? நேரத்துக்கு வீட்டுக்கு போய்விட்டால் நல்லது என்று நினைக்கிறேன்..............இதெல்லாம் அசட்டு தைரியத்தில் செய்வது.....வேண்டாம்..........." முள்ளுள சேலை விழுந்தாலும் , சேலை இல் முள் பட்டாலும் நஷ்டம் சேலைக்குத்தான்" என்று எங்க பாட்டிசொல்வா.............." என்று முடிக்கும் முன் ,

    கைதட்டி சிரித்தவாறே தான்யா " இவ சரியான ஆளுடி, இருப்பது தான் டெல்லி, ஆனால் எப்பவும் தமிழ்நாட்டில் பட்டிக்காட்டில் இருப்பதை போல வே பேசுவா"...என்றதும் சுதாவுக்கு ரொம்ப கோவம் வந்து விட்டது.

    "பரவாஇல்லை பா, நான் பட்டிக்கடுதான்.ஆனால் , நீங்க எல்லோரும் நியு டெல்லி தானே, அப்புறம் ஏண்டி அந்த கற்பழிப்பு நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவிச்சு நடந்த கூடத்துக்கு போனீங்க?...கொடி பிடிச்சீங்க?................கோஷம் போட்டிங்க?........அந்த ஆளுங்க போல எனக்கும் எதுவும் ஆகலை.....என்று சொல்லி 'தட்டிக்கொண்டு ' போக வேண்டியது தானே?...... .எந்த ஆணாவது கற்பழிப்புக்கு பிறகு தான் 'எதையோ' பறி கொடுத்தது போல சொல்லி இருக்கானா?..இல்ல சொல்லுவானா?...அல்லது குறைந்த பக்ஷம் அழுது இருக்கானா?............அவன் சாதாரண மாகத்தனே இருக்கான்?....ஆணும் பெண்ணும் சரிசமம் என்று சொல்லும் நீங்க மட்டும் ஏண்டி 'குய்யோ முறையோ' நு கத்தி கூச்சல் போடறீங்க ? ...ஸோ, 'இழக்கக்கூடாதது' ஏதோ ஒண்ணு உங்களிடம் இருக்கு, என்று புரிகிறது இல்லையா?...........அப்போ அதை பாதுகாப்பா வெச்சுக்கணும் என்று நான் சொன்னால், அது பட்டிக்காடா?.....அப்படி சொன்னால் நான் பட்டிக்காடு என்றால், நான் பட்டிக்கடாகவே இருந்து விட்டு போகிறேன்..நீங்க ஹை சொசைடி பெண்கள் ........ஸோ , எல்லோரும் ப்புக்கு போங்கோ " என்று கோபத்தில் பொரிந்து தள்ளி விட்டாள்.

    உடனே, அவர்கள் நால்வரும் " என்னடி இவ, இவ்வளவு எமோஷனல் ஆகிட்டாள்"............என்று சொல்லி, "ஏய் சுதா.............சாரி டி..............சும்மா கலாட்டா பண்ணோம், எங்களுக்கு தெரியாதா உன்னை பற்றி, சாரி பா, ஒரு முறை போய் வரலாமே என்று தான் சொன்னோம்....சரி உனக்கு பிடிக்காவிட்டால் நீ வராதே, ஆனால் இது தான் முதலும் கடைசியுமான பார்டி நீ வராமல் இருப்பது............இனி ஒருபோதும் உனக்கு பிடிக்காத இடத்தில் பார்ட்டி கிடையாது...........தான்யா ரொம்ப ஆசைப்பட்டாள் என்று தான் இதுவே" என்றாள் ஷில்பி.

    தொடரும்..................
     
    Caide, uma1966 and naliniravi like this.
  3. naliniravi

    naliniravi Gold IL'ite

    Messages:
    990
    Likes Received:
    492
    Trophy Points:
    138
    Gender:
    Female
  4. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,111
    Likes Received:
    4,379
    Trophy Points:
    490
    Gender:
    Female

    thanks....i will put the rest of the story now :)
     
  5. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,111
    Likes Received:
    4,379
    Trophy Points:
    490
    Gender:
    Female
    வருண், கணேஷ் , மது மற்றும் ரமேஷ் நால்வரும் நண்பர்கள். வழக்கம் போல வீக் end பார்ட்டி என்று கிளம்பினார்கள். பார்ட்டி முடிந்ததும் எல்லோரும் மது ரூமுக்கு போவது என்றும் காலை அவர் அவர் வீடுகளுக்கு போவது என்றும் முடிவெடுத்தார்கள்.

    எல்லோருமாய் ஆறுமணி வாக்கில் 'பப் ' சென்றார்கள். வழக்கமாக உற்சாகத்துடன் இருந்த்து அந்த பப். அன்று அனைவரும் அங்குள்ள 'முகமுடிகளை' அணிந்து கொண்டு நடனம் ஆடிக்கொண்டிருந்தர்கள். எனவே இவர்களும் அதுபோல அணிந்து கொண்டு ஆட ஆரம்பித்தார்கள். குடிக்கவும் ஆரம்பித்தார்கள்.
    இவர்கள் கண்ணுக்கு கொஞ்சம் வித்தியாசமாய் இருந்தார்கள் அந்த நான்கு பெண்கள். ஆடுவதை பார்த்தாலே தெரிந்து விட்டது அவர்கள் இங்கு புதியவர்கள் என்று. மேலும் எதுவும் குடிக்காமல் ஆடிக்கொண்டிருந்தர்கள்.

    அதை கவனித்த கணேஷ் வெய்டரை கூப்பிட்டு ஏதோ சொன்னான், கை இல் பணமும் தந்தான்..... .அவனும் தயங்கியவாறே தலை யை ஆட்டிவிட்டு சென்றான். ... வருண் கேட்டான் என்ன டா என்று...............உஷ் ! இப்போ எதுவும் பேசாதே என்றான். கொஞ்ச நேரத்தில் அந்த வெய்டர் ஆரஞ்சு ஜூஸ் கொண்டு போய் அந்த பெண்களுக்கு கொடுத்தான், அவர்கள் வேண்டாம் என்றதும்,

    " இல்லை மேடம், நீங்க எதுவுமே குடிக்கலை, அது தான் இது" என்றான்.

    இவர்களும் சந்தோஷமாய் வாங்கிக்கொண்டார்கள், குடித்தார்கள்.

    குடித்து விட்டு அரைமணி ஒருமணி என்று நேரம் போனதே தெரியலை ஆடிக்கொண்டிருந்தர்கள்.

    ஏதோ கொஞ்சம் உயரே பறப்பது போல இருந்தது அவர்களுக்கு, திடீரென்று தலை வலிப்பது போல உணர்ந்தாள் தான்யா............மணி பார்த்தால் ....ஐயோ..............ஒன்பதை நெருங்கிக்கொண்டிருந்தது ............எப்படி இல்லவளவு நேரம் ஆகிவிட்டது..என்று பதறி, மற்றவர்களை யும் கூப்பிட்டு , நேரத்தை சொன்னாள்........அவர்களுக்கும் நேரம் போனதே தெரியலை .........அச்சச்சோ என்று கொஞ்சம் பயம் வந்தது.....வீட்டுக்கு போனால் என்ன பதில் சொல்வது என்று............உடனே கிளம்பினார்கள் .....என்றாலும் அவர்களுக்கும் கொஞ்சம் தலை வலி இருந்தது.ஒருவேளை இந்த சத்தத்தினால் இருக்கலாம் என்று நினைத்து வெளியே வந்தனர்.

    மாலை வீடு திரும்பிய சுதா அம்மாவிடம், " எனக்கு ரொம்ப தலை வலிக்குது மா, அவங்க நாலு பெரும் சேர்ந்து படிக்கிறாங்க, நான் வந்து விட்டேன்" என்றல்.
    தொடரும்..................
     
    Caide and uma1966 like this.
  6. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,111
    Likes Received:
    4,379
    Trophy Points:
    490
    Gender:
    Female
    அம்மா " பனி அதிகமா போச்சு அது தான், நான் இஞ்சி டீ தருகிறேன் குடி சரியாகிவிடும்" என்றாள்.

    அப்பாடா என்று இருந்தது சுதாவுக்கு, பொய் சொல்லியதால் மானசீகமாய் அம்மாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டாள்................பின்னே அவர்கள் வீட்டிலிருந்து ஏதாவது போன் வந்து விட்டால்?......இவளுங்க கண்டிப்பாக நேரம் தாண்டித்தான் வருவாளுங்க ...வரட்டும் நாளைக்கு பேசிக்கறேன்...எவ்வளவு சொன்னாலும் புரிவதில்லை.....என்ன செய்வது இதற்கு என்று யோசித்தவாறே தன அறைக்கு சென்று விட்டாள்.

    சரியாக சுதா நினைத்தது போலவே 8 மணி சுமாருக்கு போன் வந்து விட்டது, இவள் அம்மாவும், இவளுக்கு தலை வலி என்று தூங்குவதாகவும், இன்று படிக்க இவள் செல்லவில்லை என்றும் சொல்லி போன் ஐ வைத்து விட்டாள். ஆனால் மறுபதி 9 மணிக்கு மேலே மிண்டும் மாறி மாறி நாலு பேரிடமிருந்தும் போன் வரவே, எங்கோ தப்பு நடந்திருக்கு என்று ஊகித்த சோவின் அம்மா, யார்வீட்டில் சேர்ந்து படிக்கிறார்கள் என்று கேட்க தன் பெண்ணை எழுப்பினாள்.

    அரைகுறை தூக்கத்தில் எழுந்த சுதாவுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. ' என்னமா, என்றாள்"...........

    "சுதா, யார் வீட்டில் எல்லோரும் படிக்கிறேன் என்று சொன்னார்களா?
    மாலை வீடு திரும்பிய சுதா அம்மாவிடம், " எனக்கு ரொம்ப தலை வலிக்குது மா, அவங்க நாலு பேரும் சேர்ந்து படிக்கிறாங்க, நான் வந்து விட்டேன்" என்றாள்.

    அம்மா " பனி அதிகமா போச்சு அது தான், நான் இஞ்சி டீ தருகிறேன் குடி சரியாகிவிடும்" என்றாள்.

    அப்பாடா என்று இருந்தது சுதாவுக்கு, பொய் சொல்லியதால் மானசீகமாய் அம்மாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டாள்................பின்னே, அவர்கள் வீட்டிலிருந்து ஏதாவது போன் வந்து விட்டால்?......இவளுங்க கண்டிப்பாக நேரம் தாண்டித்தான் வருவாளுங்க ...வரட்டும் நாளைக்கு பேசிக்கறேன்...எவ்வளவு சொன்னாலும் புரிவதில்லை.....என்ன செய்வது இதற்கு என்று யோசித்தவாறே தன அறைக்கு சென்று விட்டாள்.

    சரியாக சுதா நினைத்தது போலவே 8 மணி சுமாருக்கு போன் வந்து விட்டது, இவள் அம்மாவும், இவளுக்கு தலை வலி என்று தூங்குவதாகவும், இன்று படிக்க இவள் செல்லவில்லை என்றும் சொல்லி போன் ஐ வைத்து விட்டாள். ஆனால் மறுபடி 9 மணிக்கு மேலே மீண்டும் மாறி மாறி நாலு பேரிடமிருந்தும் போன் வரவே, எங்கோ தப்பு நடந்திருக்கு என்று ஊகித்த சுதா வின் அம்மா, யார்வீட்டில் சேர்ந்து படிக்கிறார்கள் என்று கேட்க தன் பெண்ணை எழுப்பினாள்.

    அரைகுறை தூக்கத்தில் எழுந்த சுதாவுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. ' என்னமா, என்றாள்"...........

    தொடரும்..................
     
    Caide likes this.
  7. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,111
    Likes Received:
    4,379
    Trophy Points:
    490
    Gender:
    Female
    "சுதா, யார் வீட்டில் எல்லோரும் படிக்கிறேன் என்று சொன்னார்களா? " என்றாள் அம்மா.

    பளீர் என்று விழிப்பு வந்து விட்டது சுதாவுக்கு...........'அது வந்து மா' ......என்று இழுத்தாள்............" என்னமா ஆச்சு ?' என்றும் கேட்டாள்.

    " முதலில் நான் கேட்டதற்கு பதில் சொல்" என்றல் அம்மா கண்டிப்புடன்.

    இவளுக்கு வேறு வழி இல்லாமல் உண்மையை சொல்லிவிட்டாள். அம்மாவுக்கு ரொம்ப கோபம் வந்து விட்டது............." இரு உன்னை வந்து வெச்சுக்கறேன்" என்று சொல்லி விட்டு போன் ஐ நோக்கி விரைந்தாள்.

    அதற்குள், மானசியும் ஷில்பியும் வீடு சேர்ந்து விட்டார்கள். வீட்டு வாசலில் நின்றிருந்த பெற்றோருக்கு
    வையிற்றில் பால் வார்த்தது போல இருந்தது. என்ன ஆச்சு என்று விசாரித்தார்கள்....இவர்களும்' வண்டி ரிபேர் மா, அது தான் கொஞ்சம் லேட், ஒரு வண்டியை தான்யா எடுத்து போய் இருக்கா, நாளை தந்து விடுவாள்.' என்றார்கள்.

    'சரி போகட்டும், லேட் என்றால் ஒரு போன் கூடவா செய்யத்தெரியாது? ' , ஏதோ நீங்க இருவரும் பக்கத்து பக்கத்து வீட்டில் இருப்பதால் எங்களுக்கு எவ்வளவோ நிம்மதி, ஒன்றாகவே போறீங்க வரீங்க" என்றார் மானசி இன் அம்மா.

    "சரி சரி போங்க, உள்ளே, நல்ல வளர்க்கிரா பசங்களை" என்று அப்பா உறுமினார்.

    ஆனால் அவர்கள் இருவரின் வீட்டிலும் இன்னும் பதற்றமாகத்தான் இருந்தார்கள்.

    இதனிடையே போன் ஒலிக்கவே தான்யாவின் அம்மா ஓடிச்சென்று எடுத்தார். பேசியது சுதாவின் அம்மா, அவள் சொன்னதை கேட்ட தான்யாவின் அம்மா நம்ப முடியாமல் ......" இப்போ நான் அவங்களை எங்கே என்று தேடுவேன்...இன்னும் வீடு வந்து சேரலையே " என்று அழவே ஆரம்பித்து விட்டாள்.

    தொடரும்.....................
     
    Caide likes this.
  8. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,111
    Likes Received:
    4,379
    Trophy Points:
    490
    Gender:
    Female
    கல்பனா வீட்டிலும் விஷயம் தெரிந்து அமர்க்களமானது................வீட்டில் தங்க வேண்டிய பிள்ளை எங்கோ போய் இருக்கான், கணவரும் ஊரில் இல்லை என்ன செய்வது என்று தவித்துப்போனாள் அவள். பிறகு , சுதாதரித்துக்கொண்டு, மானசி வீட்டுக்குக்கு போன் செய்தாள்.

    மானசி அம்மாவும், அவர்கள் இப்போ கொஞ்சம் முன்பு தான் வந்தார்கள், "ஏதோ வண்டி ரிப்பேராம் "என்றாள். இவள் " இல்லை இல்லை என்று ,இவர்களின் பப் கதை யை சொன்னதும் , அவளும் கோபம் கொண்டு பெண்ணை விசாரிக்க சென்றாள். மானசி யும் ஷில்பியும் உண்மையை ஒத்துக்கொண்டனர்.

    இவர்களுக்கும் கிலி பிடித்துக்கொண்டது, இன்னும் அவர்கள் இருவரும் வீடு திரும்பாதது குறித்து. ஆக நாலு பேர் வீட்டிலும் குழப்பம் நீடித்தது. மணி 12 ஆனது, போலிசுக்கு போவதே சிறந்தது என்று முடிவெடுத்தார்கள், ஆனால் என்ன வென்று சொல்ல? ...........'ப்புக்கு போனவர்களை காணும்' என்றா? என்கிற எண்ணமே அவர்களை தயங்க வைத்தது.

    இதற்குள், மானசி வீட்டு கதவு தட்டப்பட்டது, பார்த்தால் ரோந்து போலிஸ், " மானசி எங்கே ? " என்றார்கள்.

    மானசி 'நான் தான்' என்றாள்.

    அப்போ அந்த பெண்கள் யார் உங்கள் வண்டியை கொண்டு போனது? என்று கேட்டார்கள். இவர்களும் "நாங்களே தேடுகிறோம் சர், கம்பிளைன்ட் தரணும் என்று இருந்தோம் " என்றார்கள்.

    "ஒ ...அப்போ வண்டி திருட்டு போச்சா? " ..என்றார் போலிஸ் காரர்.

    " இல்லை இல்லை, என் மகளின் friend கொண்டு போனாள்....அவ இன்னும் வீடு சேரலை, அது தான் கவலையாக இருந்தது." என்றார் மானசி இன் அப்பா.

    தொடரும்..................
     
    Caide likes this.
  9. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,111
    Likes Received:
    4,379
    Trophy Points:
    490
    Gender:
    Female
    " அவங்க அட்ரஸ் சொல்ல முடியுமா?"

    " என் சர், என்ன ஆச்சு, ஏதும் அக்சிடென்ட் ஆ?" என்றார் மானசி இன் அப்பா.

    " ஹும்.... ஒரு வகை இல் அப்படித்தான்" என்றார் போலிஸ்காரர்.

    " தயவு செய்து நடந்ததை சொல்லுங்கள்"..........என்றார் மானசி இன் அப்பா.

    அந்த போலிஸ் சொன்னது உங்கள் எல்லோருக்கும் தெரிந்தது தான். பல கோணங்களில் பல பத்திரிகைகளில் படித்திருப்பிர்கள். அந்த நாலு குடும்பம் மட்டும் அல்ல , அவர்களின் சம்பந்தி குடும்பங்கள் மட்டும் அல்ல பூரா டெல்லி யும் என் பூரா நாடுமே வருத்தப்பட்டது, அதிர்ந்து போனது.


    எல்லோரைவிடவும் அதிர்ந்தது வருண், கணேஷ் , மது மற்றும் ரமேஷ் தான். காலை வீடு திரும்பிய வருணும் கணேஷும் நடந்ததை அறிந்து மிகவும் கோபப்பட்டார்கள்.

    " எதுக்கு இவ அங்கெல்லாம் சுத்தரா? பொழுதோட வீட்டுக்கு வர வேண்டியது தானே? இப்போ நான் அவங்க ரெண்டு பேருக்கும் என்ன பதில் சொல்வேன்? மதுவையும் ரமேஷையும் எப்படி எதிர்கொள்வேன்? " என்று கத்தினார்கள்.

    ' நீ தான் மா ரொம்ப செல்லம் கொடுத்து அவளை இப்படி ஆக்கிவிட்டாய்" என்று அம்மா மீதும் எரிந்து விழுந்தான்.

    "பேபரில் போடோவுடன் போடுவான், நம்ப குடும்ப மானமே போச்சு".....என்று பலவாறாக கத்தினார்கள் இருவரும் தத்தம் அம்மக்களிடம்.

    ஆமாம் , தான்யாவையும் கல்பனாவையும் கல்யாணம் செய்து கொள்ளப்போவது மதுவும் ரமேஷும் தான்.

    தொடரும்..................
     
    Caide likes this.
  10. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,111
    Likes Received:
    4,379
    Trophy Points:
    490
    Gender:
    Female
    நால்வரின் குடும்பமும் ஆஸ்பத்திக்கு வந்து விட்டது.

    ஆனால், இந்த நிகழ்ச்சி எங்கு நடந்தது என்று கேட்டதும் அவர்கள் நால்வரும் நெஞ்சை பிடித்துக்கொண்டு உட்கார்ந்து விட்டார்கள்....பின்னே, அந்த செயலை செய்ததே 'இவர்கள்' நால்வரும் தானே? பூமி பிளந்து தன்னை விழுங்கி விடாதா என்று இருந்தது அவர்களுக்கு.

    ஒருவரை ஒருவர் நிமிர்ந்து பார்க்கவும் முடியவில்லை. கண் விழித்ததும் அவர்கள் இருவரும் என்ன சொல்வார்களோ, எப்படி அவர்களை இனி நிமிர்ந்து பார்ப்பது? அவள் பாவம், 'பையா என்றும் அண்ணா' என்றும் எப்படி அலறினாள் என்று நினைத்து நினைத்து வெட்கப்பட்டான்.................

    இத்தனை நேரம் கத்தின பிள்ளைகள் இப்படி உட்கார்ந்ததை பார்த்து " ஆஹா!, எத்தனை அருமையான மானமுள்ள பிள்ளைகளை பெற்றோமே " என்று நினைத்தனர் பெற்றோர். இந்த பொறுப்பில் துளி இல்லையே இந்த பெண்களுக்கு என்றும் நினைத்தனர்.

    அவர்கள் கண் விழித்தால் அல்லவா உண்மை விளங்கும்?.................

    அந்த நாளை நினைத்து நடுங்கினார்கள்.............அவர்கள் கண் விழிக்காமல் போனால் கூட தங்களின் மனசாட்சிக்கு என்ன பதில் சொல்வது என்று நொந்தார்கள். .குடித்து விட்டு இப்படி செய்து விட்டோமே என்று சுய பச்சாதாபம் கொண்டார்கள்...........'தன் வினை தன்னை சுடும்போது ' எவ்வளவு வலிக்கும் என்று நிதர்சனமாய் புரிந்து கொண்டார்கள்..........ஆனால் காலம் கடந்து.

    எல்லாவற்றுக்கும் மேலாக அந்த பெண்கள் பிழைத்துக் கொண்டார்கள் ........போலிசுக்கு எப்படி சொல்வார்கள் யார் என்று? .................'இருவரும் ஒரேபோல தெரியவில்லை' என்றே சொன்னார்கள்........ஆனால் வீட்டுக்கு போய் அவர்களை எப்படி எதிர் கொள்வது என்று இவர்களுக்கும் தெரியலை.............

    கிருஷ்ணாம்மா :)
     
    Caide and jskls like this.

Share This Page