1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சிற்றின்பம்...பேரின்பம்......by krishnaamma :)

Discussion in 'Stories in Regional Languages' started by krishnaamma, Jan 4, 2016.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    டிவி இல் வேளுக்குடி கிருஷ்ணன் மாமாவின் கதை கேட்டுக்கொண்டிருந்தாள் வத்சலா.

    "ஆச்சார்யர்களும் ஆழ்வார்களும் நமக்காக எத்தனையோ செய்து வைத்து விட்டு போய் இருக்கிறார்கள். நாம் அதில் கொஞ்சமாவது 'ருச்சி' வைக்கணும். என்றாவது ஒருநாள் , எப்ப என்று தெரியாது 'சட்' என்று நமக்கு மனத்தில் 'இதெல்லாம் இவ்வளவு தான்' என்ற நினைப்பு வந்துடும். 'அவன்' மட்டுமே சாஸ்வதம் என்றும் மத்ததெல்லாம் ஒன்றுமில்லை என்றும் துச்சமாய் நினைக்கத்தோன்றும்.

    அது எப்போ யாருக்கு எப்படி 'முகிழ்க்கும் ' என்று சொல்ல முடியாது, எனவே, நாம் எப்பவும் குடும்பம் மனைவி மக்கள் என்றே நினைப்பதை விடுத்து கொஞ்சம் பெருமாளையும் நினைக்கணும். காது கொடுத்து அவன் கதைகளைக்கேட்கணும்" என்று அவர் சொல்லிக்கொண்டிருந்தார்.

    இது சாத்தியமா, அப்படி 'சட்' என்று இந்த அக்ஞானத்தை விட்டு விட முடியுமா? நாமெல்லாம் ரொம்ப சாதரணமானவர்கள், அதெல்லாம் ஞானிகளுக்கு மட்டுமே முடியும் என்று நினைத்து பெருமுச்சு விட்டாள். அது எப்படி
    சாத்தியாமாகும் என்று கண் கூடாகவே அவள் காணப்போகும் நாள் அருகில் இருப்பதை அவள் அறியவில்லை.

    வத்சலா ரகுபதி தம்பதிகளுக்கு, ரமேஷ் ஒரே மகன். ரகுபதி அயல்நாட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். மகனின் படிப்புக்காக ஒரு சிறிய பிளட் ஐ வாங்கிக்கொண்டு இவர்கள் மெட்ராஸ் இல் இருந்தார்கள். படிப்பு
    முடிந்து, காம்பஸ் இல், அவனுக்கு பெங்களூரில் அருகில் வேலை கிடைத்தது . அவனுடைய ஒரே லட்சியம், பலரையும் போல அமரிக்கா சென்று செட்டில் ஆகவேண்டும் என்பது தான்.

    சின்ன வயது முதலே யாராவது அமெரிக்காவிலிருந்து வந்துள்ளார்கள் என்று தெரிந்தால் கூட இவனாகவே அவர்களுடன் போய் பேசுவான். அங்கு அது எப்படி இது எப்படி என்று ஏதாவது அவர்களை கேள்விகளால் துளைப்பான். இவன் அவ்வளவு ஆசைப்படுகிறானே என்று பெற்றவர்கள் , "ரமேஷ் நீ எதுக்கு இப்போ வேலைக்கு ஒத்துக்கணும்? பேசாமல் மேலே அமெரிக்கா போய் படியேன்" என்றார்கள்.

    அதற்கு அவன் சொன்ன பதில் அவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அவன் சிரித்துக்கொண்டே சொன்னான் " அம்மா, அப்பா இவ்வளவு நாள் கஷ்டப்பட்டு உழைத்து என்னை இத்தனை தூரம் படிக்க வைத்திருக்கிறார். நான் என்று வேலைக்கு சேருகிறேனோ அன்றே அவர் தன் வேலையை விட்டு விடலாம். ஒருவர் சம்பாத்தியம் போதும் நமக்கு. எனக்கு அமேரிக்கா போக விருப்பம் தான் , ஆனால் அது என் வேலையால், என் திறமையால் போனதாக இருக்கணும். மேலே படிக்கணும் என்று சொல்லி அப்பாவை இன்னும் கஷ்டப்படுத்த நான் விரும்பலை. முதலில் நான் போவேன், பிறகு நான் உங்களை அங்கு கூப்பிட்டுக் கொள்வேன் " என்றானே பார்க்கணும்.

    "பெற்றவர்களுக்கு இதெல்லாம் ஒரு கஷ்டமாடா "என்று ஆரம்பித்த அம்மாவையும் அபப்வையும் "ப்ளீஸ் பா...............என் ஆசையை கெடுக்காதீர்கள் " என்று சொல்லிவிட்டான்.

    அதே போல முதல் நாள் அவன் ஆபீஸ் இல் சேர்ந்ததும் அவன் அப்பாவிடம் போன் இல் "அப்பா நான் வேலைக்கு சேரும் ஆர்டர் இல் sign செய்து விட்டேன். நீ இனி எப்போவேண்டுமானாலும் இன் ரெசிகிநேசன் இல் sign செய்யலாம் " என்றான். அவன் அப்படி சொல்வது பிராக்டிகலா முடியாது என்றாலும் பெற்றவர்கள் அந்த வார்த்தைகளால் பூரித்தார்கள் .

    அம்மாவும் பிள்ளையுமாய், நகரமும் இல்லாமல் கிராமமும் இல்லாமல் டவுன் போல இருந்த அந்த இடத்தில் தனி வீடு ஒன்றை வாடகைக்கு பார்த்து செட்டில் ஆனார்கள். வீடுக்குத்தேவையனது வாங்கிப் போட்டார்கள். அந்த வீட்டில் ஒரு போர்டிகோவும் அதன் அருகில் ஒரு சின்ன தோட்டமும் இருந்தது.

    அதைப் பார்த்ததும் ரமேஷ், " அம்மா இங்கே ஒரு மூங்கிலால் செய்த ஒற்றை கூடை ஊஞ்சல் போட்டால் எவ்வளவு நல்லா இருக்கும்?" என்றான். இவளுக்கும் அந்த ஐடியா பிடித்திருக்கவே அடுத்த முறை கடைக்கு சென்ற போது அப்படிப்பட்ட ஊஞ்சலை தேடினார்கள்.

    கிடைக்கலை. பல இடங்களில் தேடியும் கிடைக்கலை. ஒன்று போல அவர்கள் சொன்னது "அது மூங்கில் சீசன் போது தான் நிறைய வரும். இது சிட்டி போல இல்ல மா, எல்லாமே சீசன் ஒத்துத்தான் கிடைக்கும்" என்றார்கள். வந்ததும் சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு வந்தார்கள் இருவரும். என்றாலும் எப்ப கடை வீதிக்கு போனாலும் கண்கள் ஊஞ்சலை தேடுவது வழக்கமாய் போனது.

    இப்படியே 3 மாதங்கள் ஓடிவிட்டன. என்ன ஊருமா இது என்று அலுத்துக்கொள்வான் ரமேஷ். அன்றுடன் அவனுக்கு training period முடிகிறது. வேறிடம் மாற்றி போடுவார்களா அல்லது இங்கேயே தொடருமா என்று இன்று தெரிந்துவிடும் என்று சொல்லி சென்று இருந்தான். மாலை இல் அவன் வரும்போதே ஒரே சந்தோஷமாய் வந்தான், "அம்மா, நான் ஸ்டார் பெர்போர்மர், எனக்கு எல்லோரையும் விட அதிக சம்பளம் பிக்ஸ் பண்ணி இருக்கிறார்கள்.அத்துடன்.................".என்று இழுத்தான்,

    வத்சலா உடனே, " வேறு எங்காவது மாத்திடாங்களா, நாம் அந்த கூடை ஊஞ்சல் வாங்காதது இதுக்குத்தான் போல இருக்கு..............ஆனால் மறுபடி வீடு தேடணுமே ?" என்று 'பட பட' வென சொல்லிக்கொண்டு போனாள்.

    .....................
     
    Caide, sreeram and uma1966 like this.
    Loading...

  2. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    அவன் சிரித்தவாறே..............."விட்டுத்தள்ளுமா அந்த ஊஞ்சலை.........வீடு பார்க்கத்தான் வேண்டும் ஆனால் எங்கு தெரியுமா......"அமெரிக்காவில்" என்று உச்சஸ்த்தாய்யில் கத்தினான். வத்சலாவுக்கு தன் காதுகளையே நம்ப முடியலை, "எப்படி டா, இவ்வளவு சீக்கிரம் அமேரிக்கா அனுப்புவாங்க?.....குறைந்தது 1 வருடமாவது ஆகும் என்றாயே? " என்றாள்.

    " அது தான் மா ஐயா ஸ்டார் பெர்போர்மர் என்று சொன்னேனே " என்று கூத்தடினான்.

    " ரொம்ப சந்தோஷம்டா , அப்பாக்கு போன் செய்து விஷயத்தை சொல், நான் பெருமாளை சேவித்துவிட்டு வரேன் என்று சொல்லி பூஜை அறையை நோக்கி ஓடினாள். விளக்கேற்றி கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக வணங்கினாள். அதற்குள் அவன் போன் செய்து விஷயத்தை ரகுபதி இடம் சொன்னான். அவருக்கும் ரொம்ப சந்தோசம். GOD BLESS YOU RAMESH என்றார்.

    அந்த சின்ன வீடே சந்தோஷத்தில் மூழ்கியது. மேற்கொண்டு செய்யவேண்டியதைப் பற்றி பேசினார்கள். அப்போது ஒரு போன் வந்தது. அந்த கூடை ஊஞ்சல் வந்து விட்டதாக கடையில் இருந்து தான் போன் செய்திருந்தார்கள். எப்போ வேண்டுமானாலும் வந்து எடுத்துப்போக சொன்னார்கள். அல்லது அவர்களே வேண்டுமானாலும் கொண்டு தருவதாக சொன்னார்கள்.

    வத்சலாவுக்கு ரொம்ப சந்தோசம், அப்படா இப்பவாவது அது கிடைத்ததே, குழந்தை கொஞ்ச நாளாவது ஆசையால் அதில் ஆடுவான் என்று நினைத்தாள். ஆனால் அவள் நினைத்ததற்கு நேர் மாறாய் அவன், இல்லை சர் , இப்போ எங்களுக்கு அது வேண்டாம்" என்று ஒரு வார்த்தையில் பட்டு கத்தரித்தார் போல சொல்லி போனை ஐ கட் பண்ணி விட்டான்.

    பார்த்துக்கொண்டே இருந்த இவள், " என்னடா இது, எவ்வளவு ஆசையாய் கேட்டாய், எப்படி எல்லாம் புலம்பினாய், இப்போ ஏன் வேண்டாம் என்கிறாய்? "

    அதற்கு அவன் சொன்ன பதிலில் அவள் ஆடிப்போனாள். " என்னம்மா இது, எவ்வளவு பெரிய சான்ஸ் ஆக அமெரிக்கா கிடைத்திருக்கு, அதற்கு முன்னால் இந்தேல்லாம் 'ஜுஜுபி ' .......எனக்கு இது வேண்டாம் மா " என்றானே பார்க்கணும்.

    இவளுக்கு மனதில் மின்னல் அடித்தது, அன்று வேளுக்குடி மாமா சொன்னது மனதில் வந்து போனது.

    ஒ........இதுவும் அப்படித்தானே, யாரோ பார்த்த அமெரிக்காவை நினைத்து நினைத்து உருகி, அங்கு போக ஆவலை வளர்த்துக்கொண்டு இருந்ததால், அது கிடைத்துவிடும் என்று தெரிந்ததற்கே, நேற்றுவரை ஆசையாய் தேடிய பொருளை துச்சமாக மதிக்கிறானே இவன், இதத்தானே அவர் அன்று சொன்னார்.

    அவர் சொன்னது வேறாக இருந்தாலும், இந்த மன நிலையைத்தானே கொண்டு வரணும் என்று சொன்னார். ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் உணர்ந்து சொன்ன வைகுத்த பிராப்தியில் ருசியை வரவழைத்துக்கொண்டு, இந்த சிற்றின்பங்களை உதற விட்டு பேரின்பத்தை அடைய வழி பார்த்து வைத்துக்கொண்டால், என்றாவது ஒருநாள் 'சட்' என்று உதறிவிட்டு போக எதுவாக இருக்கும்.

    நமக்காகவே அந்த ஆச்ச ர்ய மகான் இராமானுஜர், ஒரு பங்குனி உத்திரத்திருநாள் சேர்த்தி உத்ஸவத்தின் போது, தாயாரிடமும், பெருமாளிடமும் சரணாகதி செய்யும்போது, தனக்கு மட்டும் முக்தி என்று கேட்காமல், தன்னுடைய சம்பந்தம் உள்ளவர்களுக்கும் முக்தி அருள வேண்டும் என்று வேண்டி வாங்கி வைத்திருக்கிறார். நாம் செய்யவேண்டியது எல்லாம், அவருடைய சம்பந்தத்தை பெறவேண்டியது மட்டும் தானே ?

    அதற்கு என்ன பண்ணனும் , முதலில் நாம் சென்று அடைய வேண்டிய இடம் பற்றி, ஆச்சார்யர் மூலம் நன்கு தெரிந்து வைத்துக் கொள்ளணும் . இவன் எப்படி அமெரிக்காவைப்பற்றி துருவி துருவி கேள்வி கேட்டானோ அது போல நானும்
    சத்சங்கத்தில் உள்ளவர்களிடம் கேட்டு விவரங்கள் தெரிந்து கொள்ளணும். அப்போ தான் நமக்கு அந்த 'ருச்சி' பிடிபடும். தொடர்ந்து அப்படி செய்து வந்தால், தான் என்றாவது, ....அது என்று நேருமோ தெரியாது ரமேஷைப்போல.............. அப்போ 'சட்' என்று உதறிட மனம் வரும்.............அதுவும் , துளிக் கூட பற்று இல்லாமல் உதற மனம் வரும் என்று புரிந்து கொண்டாள்.

    சிலையாய் நின்ற அவளை " என்ன ஆச்சு மா? " என்று உலுக்கினான் ரமேஷ்.

    "ம்... ஞானம் வந்தது" என்றாள் சிரித்துக்கொண்டே.


    by,
    Krishnaamma :)
     
    Barbiebala, Caide, Sun18 and 2 others like this.
  3. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Kathai arumai kathaiyai padiththa enakum allavaa gnanam vanthathu. Intha kathaiyai padithu mukthi kidaithathu pol or unarvu . Naam azhiyum porulil patrai viduthu bagavaan Mel patru vaithaal perinba nilaiyai adaiyalam. New year irku oru azagaana message udan thangal padaippai start panni ulleergal. Thodarattum ungal thondu..Superb ma. .. lovely story
     
    2 people like this.
  4. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Amma, arumaiyana kathai illa illa karuththulla kathai, appadiyum sollamudiyathu. Sasvathamana unmai. Miggavum arumaiyaga ezhuthirukel ma.
     
    2 people like this.
  5. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female

    உங்க பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி உமா :)............ஆமாம் நாம் சிலதை உதறினால் தான் பலதை பெறமுடியும் [​IMG] ...............மிக்க நன்றி உமா [​IMG] .முயற்சி செய்தால் யாரும் உயர்நிலையை அடையலாம்!..............Guide என்று ஒரு பழைய , ஹிந்தி படம் பார்த்து இருகீங்களா?......முடிந்தால் பாருங்கோ....தேவானந்த் படம்.............அருமையாக இருக்கும் [​IMG]
     
    1 person likes this.
  6. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    மிக்க நன்றி ப்ரியா :)
     
    1 person likes this.
  7. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Mudinthaal kandipaga paarkiren ma guide movie ai
     
  8. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female

    :thumbsup..............:thumbsup..........:thumbsup
     
    1 person likes this.
  9. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female

    not seen the movie Uma? :)
     
    1 person likes this.
  10. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    ma...yet to see ...
     

Share This Page