1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

குட்டி கதைகள்

Discussion in 'Stories in Regional Languages' started by Nantham, Jan 30, 2009.

  1. Nantham

    Nantham Bronze IL'ite

    Messages:
    236
    Likes Received:
    4
    Trophy Points:
    35
    Gender:
    Male
    :coffeeகதை8:காக்கா உட்கார பனம் பழம் விழுந்தது

    இரண்டு ஜப்பானியர்கள் நியுயார்க் சென்றார்கள். அங்கே நகரத்தைச் சுற்றிப் பார்க்க ரயில் நிலையம் சென்றார்கள். ஒரு பழக்கடையைப் பார்த்தார்கள். ஆப்பிள், ஆரஞ்சுப் பழங்கள் நிறைய இருந்த அந்தக் கடையில் அவர்கள் பார்த்திராத ஒரு பழமும் இருந்தது..

    கடைக்காரரிடம் அந்தப் பழத்தைப் பற்றி கேட்டார்கள். அவரும் அதை வாழைப்பழம் என்று அடையாளம் சொல்லி அதை எப்படி உரித்துத் தின்பது என்றும் செய்து காண்பித்தார்.

    நம் ஜப்பானிய நண்பர்கள் மகிழ்ச்சியுடன் ஆளுக்கு ஒரு பழம் வாங்கிக் கொண்டு ரயிலில் ஏறி அமர்ந்தார்கள். ரயில் புறப்பட்ட உடன் இருவரும் பழத்தை உரித்து உண்ணத் தொடங்கினார்கள்.

    முதலாமவன் பழத்தை முதல் கடி கடிக்கும் போது ரயில் சரியாக ஒரு சுரங்கப் பாதைக்குள் நுழைந்தது. உடனே ரயில் பெட்டிக்குள் கும்மிருட்டு பரவியது.

    அவன் உடனே இரண்டாமவனிடம் அவசரமாக கத்தினான். 'நண்பா, அந்தப் பழத்தை சாப்பிடாதே. நான் ஒரே ஒரு கடி கடித்த உடனே குருடாகி விட்டென். அந்தப் பழத்தில் விஷம் இருக்கிறது. தயவு செய்து சாப்பிட்டு விடாதே' என்றான் அவன்.


    இப்படிக்கு,
    நந்தம்....[​IMG]

     
  2. Nantham

    Nantham Bronze IL'ite

    Messages:
    236
    Likes Received:
    4
    Trophy Points:
    35
    Gender:
    Male
    [​IMG]கதை9:'பச்சோந்தி'க் கல்

    [​IMG] நகரில் கப்பி ரோடு ஒன்று இருந்தது. அதன் மேல் வேகமாகப் போன வண்டியின் சக்கரம் ஒன்று ஒரு கப்பிக் கல்லை பெயர்த்து உருட்டி விட்டுப் போய் விட்டது. அந்தக் கப்பிக் கல் தனக்குள் சொல்லிக் கொண்டது. "என்னைப் போன்ற மற்றவர்களுடன் பிணைக்கப் பட்டு நான் இப்படி ஒரே இடத்தில் கிடப்பானேன்? நான் தனியாகவே வாழ்ந்து பார்க்கிறேன்!"..

    தெருவோடு போன ஒரு பையன் அந்தக் கல்லைத் தன் கையில் எடுத்துக் கொண்டான். கல் தனக்குள் எண்ணிக் கொண்டது. "நான் பிரயாணம் செய்ய விரும்பினேன். பிரயாணம் செய்கிறேன். தீவிரமாக எதையும் விரும்பினாலே போதும். விரும்பிய படி நடக்கும்!"

    கல்லை ஒரு வீட்டை நோக்கி எறிந்தான் பையன். "ஹா! நான் பறக்க விரும்பினேன்; பறக்கிறேன். என் விருப்பம் போலத்தான் நடக்கிறது எல்லாம்"



    ஒரு ஜன்னல் கண்ணாடியில் 'டண்' என்று கல் மோதி உடைத்துக் கொண்டு உள்ளே போனது, கண்ணாடி உடையும் போது அது சொல்லியது "போக்கிரி, நான் போகும் வழியில் விலகிக் கொள்ளாமல் நிற்கிறாயே?! என்னை மறிப்பவர்களை எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. என் சௌகரியத்திற்காகத்தான் எல்லாம் இருக்கிறது. ஆகவே இனிமேல் கவனமாக இரு!"
    வீட்டின் அறைக்குள் இருந்த ஒரு மெத்தையின் மேல் விழுந்தது கல். "இவ்வளவு நேரம் பிரயாணம் செய்ததில் அலுப்பாகி விட்டது. சற்று ஓய்வு தேவை என்று நினைத்த பட்சத்திலேயே படுக்கை கிடைத்து விட்டதே. ஆஹா!" என்று நினைத்துக் கொண்டது.



    ஒரு வேலைக்க்காரன் அங்கே வந்தான். படுக்கையில் இருந்த கல்லைத் தூக்கி ஜன்னல் வழியே திரும்பவும் தெருவில் எறிந்து விட்டான்.



    அப்போது கப்பிக் கல் தன்னுடன் பதிந்திருந்த ஏனைய கப்பிக் கற்களிடம் "சகோதரர்களே! சௌக்கியமா? நான் இப்போது பெரிய மனிதர்களைப் பார்க்க அவர் மாளிகைக்குப் போய் விட்டுத் திரும்புகிறேன். பெரிய மனிதர்களையும் பணக் காரர்களையும் எனக்குப் பிடிப்பதில்லை. என்னைப் போன்ற சாதாரண மக்களிடம்தான் எனக்கு உண்மையில் ரொம்பப் பிரியமும் மரியாதையும் இருக்கிறது. அதனால்தான் திரும்பி விட்டேன்" என்றது.



    சொல்லிக் கொண்டிருக்கும் போதே சரக்கு ஏற்றி வந்த ஒரு வண்டியின் சக்கரம் தனியாகக் கிடந்த கல்லின் மேல் ஏறியது. "அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!" என்று சொல்லிக் கொண்டே துண்டு துண்டாகச் சிதறிப் போனது அந்தப் பச்சோந்தி கப்பிக் கல்.


    இப்படிக்கு,
    நந்தம்....[​IMG]
     
  3. Nantham

    Nantham Bronze IL'ite

    Messages:
    236
    Likes Received:
    4
    Trophy Points:
    35
    Gender:
    Male
    [​IMG]கதை10:நாவினால் சுட்ட வடு

    ஒரு முன்கோபக்காரப் பையன் இருந்தான். முணுக்கென்றால் அவனுக்குக் கோபம் வரும்.

    கோபம் வந்தால் தலைகால் தெரியாமல் வாய்க்கு வந்த படி வயது வரம்பில்லாமல் எல்லோரையும் பேசி விடுவான். பின்னர் அவர்களிடம் வருத்தப் படுவான்.

    நாளடைவில் அவனை சுற்று வட்டாரத்தில் பலருக்கு இதனாலேயே பிடிக்காமல் போனது. அவனைத் தவிர்க்க ஆரம்பித்தார்கள். பையனுக்குத் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றினாலும் எப்படி என்றுதான் தெரியவில்லை.

    அவனுடைய அப்பா பொறுத்துப் பொறுத்து பார்த்து விட்டு ஒரு நாள் அவனிடம் ஒரு வாளி நிறைய ஆணிகளையும் ஒரு சுத்தியலையும் கொடுத்தார்.

    ஒவ்வொரு முறை ஆத்திரப் படும் போதும் சம்பந்தப் பட்டவர்களைத் திட்டுவதைத் தவிர்த்து விட்டு வீட்டுக்குப் பின்னால் உள்ள மர வேலியில் ஒரு ஆணியை ஆத்திரம் தீரும் வரை அறைந்து ஏற்றி விடும் படி அறிவுரைத்தார்.

    முதல் நாள் வேலியில் சுமார் 50 ஆணிகளை அறைந்து ஏற்றினான். நாட்கள் செல்லச் செல்ல அவனைக் கோபமூட்டுபவர்கள் முன் வன்மையாகப் பேசுவதைக் கட்டுப் படுத்தக் கற்றுக் கொண்டான். கோபம் வந்தால்தான் உடனே ஆணி அடிக்கப் போக வேண்டுமே!

    நாளடைவில் வாளியையும் சுத்தியலையும் எடுத்துக் கொண்டு வேலிப் பக்கம் போகுமுன் கோபவெறி குறைந்து போய், வேலியில் ஆணி அறைவது குறையத் தொடங்கியது. சில நாட்களில் வேலியில் ஆணி அடிக்க வேண்டிய தேவையே அவனுக்கு இருக்கவில்லை.

    அப்பாவிடம் போய் விபரத்தைச் சொன்னான். அவர் உள்ளுக்குள் மகிழ்ச்சியடைந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் அவனிடம் ஒரு ஆணி பிடுங்கும் கருவியைக் கொடுத்து வேலியில் அவன் அடித்த ஆணிகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கச் சொன்னார். அனைத்தையும் பிடுங்க் அவனுக்கு முழுதாக ஒரு நாள் பிடித்தது.

    எல்லா ஆணியையும் பிடுங்கிய பிறகு அப்பாவும் மகனும் வேலியை பார்க்கப் போனார்கள். அப்பா வேலியில் ஆணிகளைப் பிடுங்கிய இடத்தில் இருந்த வடுக்களை மகனுக்குக் காட்டி "கோபம் வந்தால் அறிவிழந்து சொல்லும் சுடுசொல்லும் இந்த ஆணியைப் போலத்தான். ஆணியைப் பிடுங்குவது போல் நீ பேசியதற்கு மன்னிப்புக் கேட்டாலும், அந்த சொல் தைத்த இடத்தில் உள்ள வடு இந்த ஆணி ஏற்படுத்திய வடுவைப் போலவே மறைவது மிகக் கடினம்" என்று அவனுக்கு எடுத்துக் கூறினார்.

    மகனும் கருத்தை நன்றாக உணர்ந்து திருந்தி ஊர் போற்றும் வகையில் வளர்ந்து வாழ்க்கையில் வெற்றிகள் பல பெற்றான்.

    இப்படிக்கு,
    நந்தம்....[​IMG]
     
  4. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    dear nantham,
    all stories are nice depicting the presene day world. is it from your imajination or did u get from elsewere?
    with love
    pad.
     
  5. Nantham

    Nantham Bronze IL'ite

    Messages:
    236
    Likes Received:
    4
    Trophy Points:
    35
    Gender:
    Male
    Dear Padmini,

    Some of the stories i posted in this thread are those i read and collected from diffferent sources...

    Regards
    Nantham:thumbsup
     
  6. swathi14

    swathi14 IL Hall of Fame

    Messages:
    7,587
    Likes Received:
    1,602
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Hai Nandham

    Pachonthi kal story is superb


    Andal
     
  7. Nantham

    Nantham Bronze IL'ite

    Messages:
    236
    Likes Received:
    4
    Trophy Points:
    35
    Gender:
    Male
    Hi Andal,

    You can also share stories which you have read...

    Regards
    Nantham:coffee
     
  8. Nantham

    Nantham Bronze IL'ite

    Messages:
    236
    Likes Received:
    4
    Trophy Points:
    35
    Gender:
    Male
    [​IMG]கதை10:கள்ளன் போலீஸ்

    “சத்தம் போடாம அறைய விட்டு வெளிய வாங்க?” கையில் துப்பாக்கியுடன் பேங் மேனேஜரை மிரட்டி அழைத்தான் அந்த லுங்கி கட்டிய ஆள்.

    ‘சிட்டிக்குள்ள இருக்கிற பேங்க்ல மாடு வாங்க லோன் கேட்டு வந்தப்பவே தோணியிருக்கணும்’ பேங்க் மேனேஜர் தன்னை நொந்துகொண்டே வெளியே வந்தார்.
    கேஷ் கவுண்டரில் ஒருவனும் வங்கி வாசலில் ஒருவனுமாக துப்பாக்கியுடன் நின்றுகொண்டிருந்தனர்.

    “லாக்கர்ல இருக்கிற நகை, வங்கியில இருக்கிற காசு அத்தனையும் இந்த வெள்ளப் பையில போட்டு மூட்ட கட்டுங்க.”

    மேனேஜர் ஜப்பானில் புதிதாய் கண்டுபிடிக்கப்பட்ட ரோபோவைப் போல செயல் பட்டுக் கொண்டிருந்தார். கிளார்க் ராமானுஜம் விசும்பிக் கொண்டிருந்தது அவருக்கு எரிச்சலூட்டியது.

    உலக வரலாற்றிலேயே மிக எளிதாய் நடந்துவிட்ட வங்கிக் கொள்ளை இதுதான் என்பது போல எல்லாம் நடந்துகொண்டிருந்தது.

    மூவரும் வெள்ளை மூட்டையை எடுத்துக் கொண்டு கதவருகே வந்தனர்.
    மேனேஜர் இதெல்லாம் ஏதோ கனவுக்குள் நின்றுகொண்டிருப்பது போல நின்றுகொண்டிருதார்.

    திடீரென கதவைத் தள்ளிக் கொண்டு மூன்று போலீஸ்காரர்கள் வந்தனர். கொள்ளையர்களை துப்பாக்கி முனையில் வளைத்துப் பிடித்தனர்.
    வங்கி ஊளியர்களெல்லாம் ஆளாளுக்கு சத்தம் போடத் துவங்கினர். இன்ஸ்பெக்டர் பளார் என ஒருவனை அறைந்தார். “ராஸ்கல்ஸ்!”

    கொள்ளையர்களுடனும், மூட்டையுடனும் போலிஸ் ஜீப் கிளம்பி பதட்டம் அடங்க அரை மணி நேரத்திற்கு மேலாகியது...

    “நம்மாளு யாரு போலிசக் கூப்பிட்டது?” இராமானுஜம் கேட்டார்...

    எல்லோரும் அமைதியாய் விழித்துக்கொண்டிருக்கையில் ‘நிஜ’ போலிஸ் உள்ளே நுழைந்தது.

    இப்படிக்கு,
    நந்தம்....[​IMG]
     
  9. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    hi nantham,
    i guessed in the begining itself. even if the real police come they won't care they will take their share and go way. that is present day policeRant!!! what do u say? but your presentation is nice.:thumbsup
    withlove
    pad
     
  10. swathi14

    swathi14 IL Hall of Fame

    Messages:
    7,587
    Likes Received:
    1,602
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Dear Nantham,

    Your bank robbery story is very nice. [​IMG]. I have so many bed time story books for my son. Everyday, it is an agreement between us that I should tell 2 story.

    So, I have so many Mulla Stories, Tenali Raman stories and one Sivashankari story for kids etc.

    Recently I bought "Kaal mulaitha Kadhaigal" of S.Ramakrishnan. It is superb and it tells in a funny way - how we got day and night?, why the dogs are always barking?, how we get rain? It is not scientific but it is a funny story. Can I share that in this thread?


    Dear Padmini,

    More than the story your FB is so cute about our Indian Police.[​IMG]


    Andal
     

Share This Page